நவம்பர் 2027

ஞா தி செ பு வி வெ
123456
78910111213
14151617181920
21222324252627
282930
இன்றுக்கு

வாசகங்கள்

8 நவம்பர், 2027

Ordinary Weekday

அன்றைய திருப்பலி
First Reading

சாலமோனின் ஞானம் 1: 1-7

வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.

Responsorial Psalm

திருப்பாடல்கள் 139: 1b-3, 4-6, 7-8, 9-10

1⁽ஆண்டவரே!␢ நீர் என்னை␢ ஆய்ந்து அறிந்திருக்கின்றீர்!⁾ 2⁽நான் அமர்வதையும் எழுவதையும்␢ நீர் அறிந்திருக்கின்றீர்;␢ என் நினைவுகளை எல்லாம்␢ தொலையிலிருந்தே உய்த்துணர்கின்றீர்.⁾ 3⁽நான் நடப்பதையும் படுப்பதையும்␢ நீர் அறிந்துள்ளீர்;␢ என் வழிகள் எல்லாம்␢ உமக்குத் தெரிந்தவையே.⁾ 4⁽ஆண்டவரே! என் வாயில்␢ சொல் உருவாகு முன்பே,␢ அதை முற்றிலும் அறிந்திருக்கின்றீர்.⁾ 5⁽எனக்கு முன்னும் பின்னும்␢ என்னைச் சூழ்ந்து இருக்கின்றீர்;␢ உமது கையால் என்னைப்␢ பற்றிப்பிடிக்கின்றீர்.⁾ 6⁽என்னைப்பற்றிய உம் அறிவு␢ எனக்கு மிகவும் வியப்பாயுள்ளது;␢ அது உன்னதமானது;␢ என் அறிவுக்கு எட்டாதது.⁾ 7⁽உமது ஆற்றலைவிட்டு␢ நான் எங்கே செல்லக்கூடும்?␢ உமது திருமுன்னிலிருந்து␢ நான் எங்கே தப்பியோட முடியும்?⁾ 8⁽நான் வானத்திற்கு␢ ஏறிச் சென்றாலும்␢ நீர் அங்கே இருக்கின்றீர்!␢ பாதாளத்தில் படுக்கையை␢ அமைத்துக் கொண்டாலும்␢ நீர் அங்கேயும் இருக்கின்றீர்!⁾ 9⁽நான் *கதிரவனின் இடத்திற்கும்*␢ பறந்து சென்றாலும்␢ மேற்கே கடலுக்கு அப்பால் வாழ்ந்தாலும்,⁾ 10⁽அங்கேயும் உமது கை␢ என்னை நடத்திச் செல்லும்;␢ உமது வலக்கை என்னைப்␢ பற்றிக் கொள்ளும்.⁾
Alleluia

பிலிப்பியர் 2: 15d, 16a

15அப்பொழுதுதான் நீங்கள் நெறிகெட்ட, சீரழிந்த தலைமுறையினரிடையே குற்றமும் கபடுமற்றவர்களாய்க் கடவுளின் மாசற்ற குழந்தைகளெனத் திகழ்வீர்கள்; உலகில் ஒளிரும் சுடர்களாகத் துலங்குவீர்கள். 16கிறிஸ்துவின் நாளில் நான் பெருமையடையும் வகையில், வாழ்வின் வார்த்தையைப் பற்றிக் கொள்ளுங்கள். வீணாக நான் ஓடவில்லை, வெறுமனே நான் உழைக்கவில்லை என்பது அதனால் தெளிவாகும்.⒫
Gospel

லூக்கா 17: 1-6

1இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “பாவச்சோதனை வருவதைத் தவிர்க்க முடியாது. ஆனால் ஐயோ! அதற்குக் காரணமாய் இருப்பவருக்குக் கேடு! 2அவர் இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச் செய்வதைவிட அவ்வாறு செய்பவரது கழுத்தில் ஒரு எந்திரக் கல்லைக் கட்டி அவரைக் கடலில் தள்ளிவிடுவது அவருக்கு நல்லது. 3எனவே, நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். உங்களுடைய சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் பாவம் செய்தால் அவரைக் கடிந்துகொள்ளுங்கள். அவர் மனம் மாறினால் அவரை மன்னியுங்கள். 4ஒரே நாளில் அவர் ஏழு முறை உங்களுக்கு எதிராகப் பாவம் செய்து ஏழு முறையும் உங்களிடம் திரும்பி வந்து, ‘நான் மனம் மாறிவிட்டேன்’ என்று சொல்வாரானால் அவரை மன்னித்து விடுங்கள்.”⒫ 5திருத்தூதர்கள் ஆண்டவரிடம், “எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும்” என்று கேட்டார்கள். 6அதற்கு ஆண்டவர் கூறியது: “கடுகளவு நம்பிக்கை உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த காட்டு அத்தி மரத்தை நோக்கி, ‘நீ வேரோடே பெயர்ந்துபோய்க் கடலில் வேரூன்றி நில்’ எனக் கூறினால் அது உங்களுக்குக் கீழ்ப்படியும்.⒫