வாசகங்கள்
13 நவம்பர், 2027
Frances Xavier Cabrini, Virgin, Religious Obligatory Memorial
அன்றைய திருப்பலி
First Reading
சாலமோனின் ஞானம் 18: 14-16; 19: 6-9
வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 105: 2-3, 36-37, 42-43
2⁽அவருக்குப் பாடல் பாடுங்கள்;␢ அவரைப் புகழ்ந்தேத்துங்கள்!␢ அவர்தம் வியத்தகு செயல்கள்␢ அனைத்தையும் எடுத்துரையுங்கள்!⁾
3⁽அவர்தம் திருப்பெயரை␢ மாட்சிப்படுத்துங்கள்;␢ ஆண்டவரைத் தேடுவோரின் இதயம்␢ அக்களிப்பதாக!⁾
36⁽அவர் அவர்களது நாட்டின்␢ தலைப்பேறுகள் அனைத்தையும்␢ தாக்கினார்; அவர்களது␢ ஆண்மையின் முதற்பேறுகள்␢ அனைத்தையும் வீழ்த்தினார்.⁾
37⁽அவர் இஸ்ரயேலரை␢ வெள்ளியோடும் பொன்னோடும்␢ புறப்படச் செய்தார்;␢ அவர்கள் குலங்களில் எவரும்␢ தளர்ந்து போகவில்லை.⁾
42⁽ஏனெனில், தம் அடியார்␢ ஆபிரகாமுக்கு அளித்த␢ தமது தூய வாக்குறுதியை␢ அவர் நினைவுகூர்ந்தார்.⁾
43⁽அவர் தம் மக்களை␢ மகிழ்ச்சியோடு வெளிக்கொணர்ந்தார்;␢ அவர்தாம் தெரிந்தெடுத்தவர்களை␢ ஆரவாரத்தோடு கூட்டிச் சென்றார்.⁾
Alleluia
2 தெசலோனிக்கர் 2: 14
வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.
Gospel
லூக்கா 18: 1-8
1அவர்கள் மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் என்பதற்கு இயேசு ஓர் உவமை சொன்னார்.
2“ஒரு நகரில் நடுவர் ஒருவர் இருந்தார். அவர் கடவுளுக்கு அஞ்சி நடப்பதில்லை; மக்களையும் மதிப்பதில்லை.
3அந்நகரில் கைம்பெண் ஒருவரும் இருந்தார். அவர் நடுவரிடம் போய், ‘என் எதிரியைத் தண்டித்து எனக்கு நீதி வழங்கும்’ என்று கேட்டுக் கொண்டேயிருந்தார்.
4நடுவரோ, நெடுங்காலமாய் எதுவும் செய்ய விரும்பவில்லை. பின்பு அவர், ‘நான் கடவுளுக்கு அஞ்சுவதில்லை; மக்களையும் மதிப்பதில்லை.
5என்றாலும் இக்கைம்பெண் எனக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டிருப்பதால் நான் இவருக்கு நீதி வழங்குவேன். இல்லையானால் இவர் என் உயிரை வாங்கிக் கொண்டேயிருப்பார்’ என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டார்.”
6பின் ஆண்டவர் அவர்களிடம், “நேர்மையற்ற நடுவரே இப்படிச் சொன்னாரென்றால்,
7தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத் துணைசெய்யக் காலம் தாழ்த்துவாரா?
8விரைவில் அவர்களுக்கு நீதி வழங்குவார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். ஆயினும், மானிடமகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையைக் காண்பாரோ?” என்றார்.