நவம்பர் 2027

ஞா தி செ பு வி வெ
123456
78910111213
14151617181920
21222324252627
282930
இன்றுக்கு

வாசகங்கள்

27 நவம்பர், 2027

Ordinary Weekday/ Optional Memorial of the Blessed Virgin Mary

Optional Memorial of the Blessed Virgin Mary
First Reading

தானியேல் 7: 15-27

15தானியேல் ஆகிய நான் உள்ளம் கலங்கினேன். மனக்கண்முன் தோன்றிய காட்சிகள் என்னை அச்சுறுத்தின. 16அங்கு நின்று கொண்டிருந்தவர்களுள் ஒருவரை அணுகி, ‘இவற்றிற்கெல்லாம் பொருள் என்ன?’ என்று கேட்டேன். அவர் அவற்றின் உட்பொருளை எல்லாம் எனக்கு விளக்கிக் கூறினார். 17இந்த நான்கு விலங்குகளும் உலகில் எழும்பப்போகும் நான்கு அரசர்களைக் குறிக்கின்றன. 18ஆனால் உன்னதரின் புனிதர்கள் அரசுரிமை பெறுவர்; அந்த அரசுரிமையை என்றும் ஊழ்ஊழிக் காலமும் கொண்டிருப்பர்.’⒫ 19அதன் பின்னர், மற்ற விலங்குகளினின்று மாறுபட்டு, மிகவும் அஞ்சி நடுங்கவைக்கும் தோற்றத்துடன், இரும்புப் பற்களும் வெண்கல நகங்களும் கொண்டு. அனைத்தையும் தூள் தூளாக நொறுக்கி விழுங்கி, எஞ்சியதைக் கால்களால் மிதித்துப்போட்ட அந்த நான்காம் விலங்கைப்பற்றி அறிந்து கொள்ள விரும்பினேன். 20அதன் தலையில் இருந்த பத்துக் கொம்புகளைப் பற்றியும், மூன்று கொம்புகள் தன் முன்னிலையில் விழுந்து போக அங்கே முளைத்த கண்களும் பெருமையாகப் பேசும் வாயும் கொண்டிருந்த ஏனையவற்றைவிடப் பெரியதாகத் தோன்றிய அந்தக் கொம்பைப் பற்றியும் தெரிந்து கொள்ள விரும்பினேன். 21நான் பார்த்துக் கொண்டிருக்கையில், அந்தக் கொம்பு புனிதர்களுக்கு எதிராகப் போர் புரிந்து அவர்களை வென்றது. 22தொன்மை வாய்ந்தவர் வந்து உன்னதரின் புனிதர்களுக்கு நீதி வழங்கும் வரையிலும் உரிய காலத்தில் புனிதர்கள் அரசுரிமை பெறும் வரையில் இவ்வாறு நடந்தது.⒫ 23⁽அவர் தொடர்ந்து பேசினார்;␢ அந்த நான்காம் விலங்கோ␢ உலகில் தோன்றப் போகும்␢ நான்காம் அரசைக் குறிக்கின்றது;␢ இது மற்றெல்லா அரசுகளையும் விட␢ வேறுபட்டதாகும்.␢ உலக முழுவதையும் அது மிதித்துத்␢ தூள்தூளாக நொறுக்கி விழுங்கிவிடும்.⁾ 24⁽அந்தப் பத்துக் கொம்புகளோ␢ இந்த அரசினின்று தோன்றவிருக்கும்␢ பத்து மன்னர்களைக் குறிக்கின்றன.␢ அவர்களுக்குப் பிறகு␢ மற்றொருவன் எழும்புவான்;␢ முந்தினவர்களைவிட வேறுபட்டிருப்பான்;␢ மூன்று அரசர்களை முறியடிப்பான்;⁾ 25⁽அவன் உன்னதர்க்கு எதிரான␢ சொற்களைப் பேசுவான்;␢ உன்னதரின் புனிதர்களைத்␢ துன்புறுத்துவான்;␢ வழிபாட்டுக் காலங்களையும்␢ திருச்சட்டத்தையும்␢ மாற்ற நினைப்பான்.␢ மூன்றரை ஆண்டுகள் புனிதர்கள்␢ அவனது கையில் ஒப்புவிக்கப்படுவர்.⁾ 26⁽ஆனால், நீதிமன்றம்␢ தீர்ப்பு வழங்க அமரும்;␢ அவனது ஆட்சி அவனிடமிருந்து␢ பறிக்கப்பட்டு,␢ எரியுண்டு ஒன்றுமில்லாது␢ அழிக்கப்படும்.⁾ 27⁽ஆட்சியும் அரசுரிமையும்,␢ வானத்தின் கீழுள்ள␢ உலகனைத்திலும் உள்ள␢ அரசுகளின் மேன்மையும்␢ உன்னதரின் புனித மக்களுக்குத்␢ தரப்படும்.␢ அவர்களது அரசு␢ என்றென்றும் நிலைக்கும் அரசு;␢ எல்லா அரசுகளும் அவர்களுக்குப்␢ பணிந்து கீழ்ப்படியும்.⁾
Responsorial Psalm

தானியேல் 3: 82, 83, 84, 85, 86, 87

வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.

Alleluia

லூக்கா 21: 36

36ஆகையால் நிகழப்போகும் அனைத்திலிருந்தும் தப்புவதற்கும் மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கும் எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்” என்றார்.
Gospel

லூக்கா 21: 34-36

34❮34-35❯மேலும் இயேசு, “உங்கள் உள்ளங்கள் குடிவெறி, களியாட்டத்தாலும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலையினாலும் மந்தம் அடையாதவாறும் அந்நாள் திடீரென வந்து ஒரு கண்ணியைப்போல் உங்களைச் சிக்க வைக்காதவாறும் எச்சரிக்கையாய் இருங்கள். மண்ணுலகு எங்கும் குடியிருக்கும் எல்லார்மீதும் அந்நாள் வந்தே தீரும். 35Same as above 36ஆகையால் நிகழப்போகும் அனைத்திலிருந்தும் தப்புவதற்கும் மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கும் எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்” என்றார்.