ஜனவரி 2027

ஞா தி செ பு வி வெ
12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31
இன்றுக்கு

வாசகங்கள்

4 ஜனவரி, 2027

Elizabeth Ann Seton, Religious Obligatory Memorial

அன்றைய திருப்பலி
First Reading

1 யோவான் 3: 22 - 4: 6

வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.

Responsorial Psalm

திருப்பாடல்கள் 2: 7bc-8, 10-11

7⁽ஆண்டவர் ஆணையிட்டு உரைத்ததை␢ நான் அறிவிக்கின்றேன்;␢ ‛நீர் என் மைந்தர்; இன்று நான்␢ உம்மைப் பெற்றெடுத்தேன்.⁾ 8⁽நீர் விரும்புவதை என்னிடம் கேளும்;␢ பிற நாடுகளை உமக்கு␢ உரிமைச் சொத்தாக்குவேன்;␢ பூவுலகை அதன் கடையெல்லைவரை␢ உமக்கு உடைமையாக்குவேன்.⁾ 10⁽ஆகவே, மன்னர்களே,␢ விவேகமாக நடந்துகொள்ளுங்கள்;␢ பூவுலகை ஆள்வோரே,␢ எச்சரிக்கையாயிருங்கள்.⁾ 11⁽அச்சத்தோடு ஆண்டவரை␢ வழிபடுங்கள்; நடுநடுங்குங்கள்!␢ அவர்முன் அகமகிழுங்கள்!⁾
Alleluia

மத்தேயு 4: 23

23அவர் கலிலேயப் பகுதி முழுவதும் சுற்றி வந்தார்; அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் கற்பித்தார்; விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார்.
Gospel

மத்தேயு 4: 12-17, 23-25

12யோவான் கைது செய்யப்பட்டதை இயேசு கேள்விப்பட்டுக் கலிலேயாவுக்குப் புறப்பட்டுச் சென்றார். 13அவர் நாசரேத்தைவிட்டு அகன்று செபுலோன், நப்தலி ஆகிய இடங்களின் எல்லையில் கடலோரமாய் அமைந்திருந்த கப்பர்நாகுமுக்குச் சென்று குடியிருந்தார். 14இறைவாக்கினர் எசாயா உரைத்த பின்வரும் வாக்கு இவ்வாறு நிறைவேறியது: 15⁽“செபுலோன் நாடே! நப்தலி நாடே!␢ பெருங்கடல் வழிப்பகுதியே!␢ யோர்தானுக்கு அப்பாலுள்ள␢ நிலப்பரப்பே!␢ பிற இனத்தவர் வாழும் கலிலேயப் பகுதியே!⁾ 16⁽காரிருளில் இருந்த மக்கள்␢ பேரொளியைக் கண்டார்கள்.␢ சாவின் நிழல் சூழ்ந்துள்ள␢ நாட்டில் குடியிருப்போர் மேல்␢ சுடரொளி உதித்துள்ளது.”⁾⒫ 17அதுமுதல் இயேசு, “மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது” எனப் பறைசாற்றத் தொடங்கினார். 23அவர் கலிலேயப் பகுதி முழுவதும் சுற்றி வந்தார்; அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் கற்பித்தார்; விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். 24அவரைப் பற்றிய பேச்சு சிரியா நாடு முழுவதும் பரவியது. பல்வேறு பிணிகளாலும் வாதைகளாலும் வருந்திய நோயாளர், பேய் பிடித்தோர், மதிமயங்கியோர், முடக்குவாதமுற்றோர் ஆகிய அனைவரும் அவரிடம் அழைத்து வரப்பட்டனர். அவர் அவர்களைக் குணமாக்கினார். 25ஆகவே கலிலேயா, தெக்கப்பொலி, எருசலேம், யூதேயா, யோர்தானுக்கு அக்கரைப் பகுதி ஆகிய இடங்களிலிருந்து வந்த மக்கள் பெருந்திரளாய் அவரைப் பின்தொடர்ந்தனர்.