வாசகங்கள்
29 ஜனவரி, 2027
Ordinary Weekday
அன்றைய திருப்பலி
First Reading
எபிரேயர் 10: 32-39
32முன்னைய நாள்களை நினைவு கூருங்கள். நீங்கள் ஒளி பெற்றபின் உங்களுக்கு நேரிட்ட துன்பம் நிறைந்த போராட்டத்தை மனஉறுதியோடு ஏற்றுக்கொண்டீர்கள்.
33சில வேளைகளில், நீங்கள் இகழ்ச்சிக்கும் வேதனைகளுக்கும் ஆளாகி, வேடிக்கைப் பொருளானீர்கள். வேறு சில வேளைகளில், இந்நிலைக்கு ஆளானோரின் துன்பங்களில் பங்கு பெற்றீர்கள்.
34கைதிகளுக்குப் பரிவிரக்கம் காட்டினீர்கள். உங்கள் உடைமைகள் பறிமுதல் செய்யப்பட்டபோதும், மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டீர்கள். ஏனெனில், சிறந்த, நிலையான உடைமைகள் உங்களுக்கு உள்ளன என்பதை அறிவீர்கள்.
35உங்களிடம் இருக்கும் துணிவைக் கைவிட்டுவிடாதீர்கள். இதற்கு மிகுந்த கைம்மாறு உண்டு.
36கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றி, அவர் வாக்களித்ததை நீங்கள் பெற்றுக்கொள்ள உங்களுக்கு மனஉறுதி தேவை.
37இன்னும், ⁽“மிக மிகக் குறுகிய␢ காலமே இருக்கிறது;␢ வரவிருக்கிறவர் வந்து விடுவார்,␢ காலம் தாழ்த்தமாட்டார்.⁾
38⁽நேர்மையுடன் நடக்கும் என் அடியார்,␢ நம்பிக்கையினால் வாழ்வு அடைவார்.␢ எவராவது பின்வாங்கிச்␢ செல்வார் என்றால்␢ அவரில் நான் மகிழ்ச்சியுறேன்.”⁾
39நாமோ பின்வாங்கிச் சென்று அழிவுறுவோர் அல்ல. மாறாக, நம்பிக்கையையும் வாழ்வையும் காத்துக்கொள்வோர் ஆவோம்.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 37: 3-4, 5-6, 23-24, 39-40
3⁽ஆண்டவரை நம்பு; நலமானதைச் செய்;␢ நாட்டிலேயே குடியிரு;␢ நம்பத் தக்கவராய் வாழ்.⁾
4⁽ஆண்டவரிலேயே மகிழ்ச்சி கொள்;␢ உன் உள்ளத்து விருப்பங்களை␢ அவர் நிறைவேற்றுவார்.⁾
5⁽உன் வழியை ஆண்டவரிடம் ஒப்படைத்துவிடு;␢ அவரையே நம்பியிரு;␢ அவரே உன் சார்பில் செயலாற்றுவார்.⁾
6⁽உன் நேர்மையைக் கதிரொளி போலும்,␢ உன் நாணயத்தை நண்பகல் போலும்␢ அவர் விளங்கச் செய்வார்.⁾
23⁽தாம் உவகைகொள்ளும்␢ நடத்தையைக் கொண்ட␢ மனிதரின் காலடிகளை␢ ஆண்டவர் உறுதிப்படுத்துகின்றார்.⁾
24⁽அவர்கள் விழுந்தாலும்␢ வீழ்ந்து கிடக்கமாட்டார்கள்;␢ ஆண்டவர் அவர்களைத்␢ தம் கையால் தூக்கி நிறுத்துவார்.⁾
39⁽நேர்மையாளருக்கு மீட்பு␢ ஆண்டவரிடமிருந்து வருகின்றது;␢ நெருக்கடியான நேரத்தில்␢ அவர்களுக்கு வலிமையும் அவரே.⁾
40⁽ஆண்டவர் துணைநின்று␢ அவர்களை விடுவிக்கின்றார்;␢ பொல்லாரிடமிருந்து␢ அவர்களை விடுவிக்கின்றார்;␢ அவரிடம் அடைக்கலம் புகுந்ததால்,␢ அவர்களை மீட்கின்றார்.⁾
Alleluia
மத்தேயு 11: 25
25அவ்வேளையில் இயேசு, “தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்.
Gospel
மாற்கு 4: 26-34
26தொடர்ந்து இயேசு, “இறையாட்சியைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்;
27நிலத்தில் ஒருவர் விதைக்கிறார். அவர் எதுவும் செய்யாமலே நாள்கள் நகர்ந்து செல்கின்றன. அவருக்குத் தெரியாமல் விதை முளைத்து வளருகிறது.
28முதலில் தளிர், பின்பு கதிர், அதன் பின் கதிர் நிறைய தானியம் என்று நிலம் தானாகவே விளைச்சல் அளிக்கிறது.
29பயிர் விளைந்ததும் அவர் அரிவாளோடு புறப்படுகிறார்; ஏனெனில், அறுவடைக் காலம் வந்துவிட்டது” என்று கூறினார்.
30மேலும் அவர், “இறையாட்சியை எதற்கு ஒப்பிடலாம்? அல்லது எந்த உவமையால் அதை எடுத்துச் சொல்லலாம்?
31அது கடுகு விதைக்கு ஒப்பாகும். அது நிலத்தில் விதைக்கப் படும்பொழுது உலகிலுள்ள எல்லா விதைகளையும்விடச் சிறியது.
32அது விதைக்கப்பட்டபின் முளைத்தெழுந்து எல்லாச் செடிகளையும் விடப் பெரிதாகி, வானத்துப் பறவைகள் அதன் நிழலில் தங்கக் கூடிய அளவுக்குப் பெருங்கிளைகள்விடும்” என்று கூறினார்.
33அவர்களது கேட்டறியும் திறமைக்கு ஏற்ப, அவர் இத்தகைய பல உவமைகளால் இறைவார்த்தையை அவர்களுக்கு எடுத்துரைத்து வந்தார்.
34உவமைகள் இன்றி அவர் அவர்களோடு பேசவில்லை. ஆனால், தனிமையாக இருந்தபோது தம் சீடருக்கு அனைத்தையும் விளக்கிச் சொன்னார்.