ஜனவரி 2027

ஞா தி செ பு வி வெ
12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31
இன்றுக்கு

வாசகங்கள்

21 ஜனவரி, 2027

Agnes, Virgin, Martyr Obligatory Memorial

அன்றைய திருப்பலி
First Reading

எபிரேயர் 7: 25 - 8: 6

25ஆதலின், தம் வழியாகக் கடவுளிடம் வருபவரை அவர் முற்றும் மீட்க வல்லவராயிருக்கிறார்; அவர்களுக்காகப் பரிந்து பேசுவதற்கென என்றுமே உயிர் வாழ்கிறார்.⒫ 26இத்தகைய தலைமைக் குருவே நமக்கு ஏற்றவராகிறார். இவர் தூயவர், கபடற்றவர், மாசற்றவர், பாவிகளிடமிருந்து பிரித்தெடுக்கப்பட்டு, வானங்களுக்கு மேலாக உயர்த்தப்பட்டவர். 27ஏனைய தலைமைக் குருக்கள் செய்வது போல, முதலில் தம்முடைய பாவங்களுக்காகவும் பின்னர் மக்களுடைய பாவங்களுக்காகவும் இவர் நாள்தோறும் பலி செலுத்தத் தேவையில்லை. ஏனெனில், தம்மைத் தாமே பலியாகச் செலுத்தி இதை ஒரே ஒருமுறைக்குள் செய்து முடித்தார். 28திருச்சட்டப்படி வலுவற்ற மனிதர்கள் குருக்களாக ஏற்படுத்தப்படுகிறார்கள். ஆனால், அத்திருச்சட்டத்திற்குப் பின்னர், ஆணையிட்டுக் கூறப்பட்ட வாக்கின் மூலம் என்றென்றும் நிறைவுள்ளவரான மகனே குருவாக ஏற்படுத்தப்படுகிறார். 1இத்தகைய தலைமைக் குரு நமக்கு வாய்த்துள்ளார் என்பதே இதுகாறும் நாம் கூறியவற்றின் தலையாய கருத்து. இவர் விண்ணகத்தில் பெருமைமிகு கடவுளுடைய அரியணையின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார். 2அங்கே மனிதரால் அல்ல, ஆண்டவராலே அமைக்கப்பட்ட உண்மையான கூடாரமாகிய தூயகத்தில் ஊழியம் செய்கிறார்.⒫ 3ஒவ்வொரு தலைமைக் குருவும் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்தவே ஏற்படுத்தப்பட்டிருக்கிறார். எனவே பலி செலுத்துவதற்கு இவரிடமும் ஏதேனும் ஒரு பொருள் கட்டாயம் இருக்க வேண்டும். 4உலகிலேயே இருந்திருப்பாரென்றால் இவர் குருவாக இருந்திருக்கமாட்டார். ஏனெனில், திருச்சட்டத்தின்படி காணிக்கைகளைச் செலுத்த ஏற்கெனவே இங்குக் குருமார்கள் இருக்கிறார்கள். 5இவர்கள் வழிபடும் இடம் விண்ணகக் கூடாரத்தின் சாயலும் நிழலுமே. மோசே கூடாரத்தை அமைத்தபோது,⁽“மலையில் உனக்குக்␢ காண்பிக்கப்பட்ட முறைப்படி␢ நீ இவற்றையெல்லாம்␢ செய்யுமாறு கவனித்துக்கொள்”⁾என்று கடவுள் பணித்தது இதைச் சுட்டிக்காட்டுகிறது. 6ஆனால், இவரோ அவர்களுடைய குருத்துவப்பணியை விட மிக மேன்மையான குருத்துவப் பணியைப் பெற்றிருக்கிறார். ஏனெனில் சீரிய வாக்குறுதிகளின் அடிப்படையில் செய்யப்பட்டு, இவரை இணைப்பாளராகக் கொண்டிருக்கும் உடன்படிக்கை முந்திய உடன்படிக்கையைவிட சிறப்புமிக்கது.⒫
Responsorial Psalm

திருப்பாடல்கள் 40: 7-8a, 8b-9, 10, 17

7⁽எனவே, ‛இதோ வருகின்றேன்;␢ என்னைக் குறித்துத் திருநூல் சுருளில் § எழுதப்பட்டுள்ளது;⁾ 8⁽என் கடவுளே! உமது திருவுளம்␢ நிறைவேற்றுவதில்␢ நான் மகிழ்ச்சி அடைகின்றேன்;␢ உமது திருச்சட்டம் என் உள்ளத்தில்␢ இருக்கின்றது’ என்றேன் நான்.⁾ 9⁽என் நீதியை நீர் நிலைநாட்டிய␢ நற்செய்தியை␢ மாபெரும் சபையில் அறிவித்தேன்;␢ நான் வாயை மூடிக் கொண்டிருக்கவில்லை;␢ ஆண்டவரே! நீர் இதை அறிவீர்.⁾ 10⁽உமது நீதியை நான்␢ என் உள்ளத்தின் ஆழத்தில்␢ மறைத்து வைக்கவில்லை;␢ உம் வாக்குப்பிறழாமையைப் பற்றியும்␢ நீர் அருளும் மீட்பைப் பற்றியும்␢ கூறியிருக்கின்றேன்;␢ உம் பேரன்பையும் உண்மையையும்␢ மாபெரும் சபைக்கு நான் ஒளிக்கவில்லை.⁾ 17⁽நானோ ஏழை; எளியவன்;␢ என் தலைவர்␢ என்மீது அக்கறை கொண்டுள்ளார்;␢ நீரே என் துணைவர், என் மீட்பர்!␢ என் கடவுளே, எனக்குத்␢ துணை செய்ய விரைந்து வாரும்.⁾
Alleluia

2 திமொத்தேயு 1: 10

வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.

Gospel

மாற்கு 3: 7-12

7இயேசு அங்கிருந்து புறப்பட்டுத் தம் சீடருடன் கடலோரம் சென்றார். கலிலேயாவிலிருந்து பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தனர். மேலும் யூதேயா, 8எருசலேம், இதுமேயா, யோர்தான் அக்கரைப்பகுதி, தீர், சீதோன் ஆகிய இடங்களிலிருந்தும் பெருந்திரளான மக்கள் அவர் செய்தவற்றையெல்லாம் கேள்வியுற்று அவரிடம் வந்தனர். 9மக்கள் கூட்டம் தம்மை நெருக்கிவிடாதவாறு தமக்காகப் படகு ஒன்றை முன்னேற்பாடாக வைத்திருக்குமாறு அவர் சீடருக்குச் சொன்னார். 10ஏனெனில், பலரை அவர் குணமாக்கியதால், நோயுற்றோர் அனைவரும் அவரைத் தொடவேண்டுமென்று வந்து அவர்மீது விழுந்து கொண்டிருந்தனர். 11தீய ஆவிகளும் அவரைக் கண்டபோதே அவர்முன் விழுந்து, “இறைமகன் நீரே” என்று கத்தின. 12அவரோ, தம்மை வெளிப்படுத்த வேண்டாமென அவற்றிடம் மிகக் கண்டிப்பாய்ச் சொன்னார்.