வாசகங்கள்
20 ஜனவரி, 2027
Ordinary Weekday/ Fabian, Pope, Martyr/ Sebastian, Martyr
Sebastian, Martyr
First Reading
எபிரேயர் 7: 1-3, 15-17
1இந்த மெல்கிசதேக்கு சாலேம் நகரின் அரசர்; உன்னத கடவுளின் குரு. இவர் அரசர்களை முறியடித்துத் திரும்பியபொழுது ஆபிரகாமை எதிர்கொண்டு போய் அவருக்கு ஆசி அளித்தார்.
2ஆபிரகாம் தம்மிடமிருந்த எல்லாவற்றிலிருந்தும் பத்தில் ஒரு பங்கை இவருக்குக் கொடுத்தார். நீதியின் அரசர் என்பது இவர் பெயரின் முதற்பொருள். மேலும், இவர் சாலேமின் அரசர். அமைதியின் அரசர் என்பது இதற்குப் பொருள்.
3இவருக்குத் தந்தை இல்லை, தாய் இல்லை; தலைமுறை வரலாறு இல்லை; இவரது வாழ்நாளுக்குத் தொடக்கமும் இல்லை; முடிவும் இல்லை. இவர் கடவுளின் மகனுக்கு ஒப்பானவர்; குருவாக என்றும் நிலைத்திருப்பவர்.⒫
15மெல்கிசதேக்குக்கு ஒப்பான வேறொரு குரு தோன்றியிருப்பதால் நாம் மேற்கூறியது இன்னும் அதிகத் தெளிவாகிறது.
16இவர் திருச்சட்டத்தின் கட்டளைப்படி மனித இயல்புக்கு ஏற்ப அல்ல, அழியாத வாழ்வின் வல்லமையால் குருவாகத் தோன்றினார்.
17இவரைப் பற்றி,⁽ “மெல்கிசதேக்கின் முறைப்படி § நீர் என்றென்றும் குருவே”⁾ என்னும் சான்று உரைக்கப்பட்டுள்ளது.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 110: 1, 2, 3, 4
1⁽ஆண்டவர் என் தலைவரிடம்,␢ ‛நான் உம் பகைவரை␢ உமக்குப் கால்மணையாக்கும்வரை␢ நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்’␢ என்று உரைத்தார்.⁾
2⁽வலிமைமிகு உமது செங்கோலை␢ ஆண்டவர் சீயோனிலிருந்து ␢ ஒங்கச் செய்வார்; ␢ உம் எதிரிகளிடையே ஆட்சி செலுத்தும்!⁾
3⁽நீர் உமது படைக்குத் ␢ தலைமை தாங்கும் நாளில்␢ தூய கோலத்துடன் உம் மக்கள்␢ தம்மை உவந்தளிப்பர்; ␢ வைகறை கருவுயிர்த்த பனியைப்போல ␢ உம் இளம் வீரர் உம்மை வந்தடைவர்.⁾
4⁽‛மெல்கிசெதேக்கின் முறைப்படி␢ நீர் என்றென்றும் குருவே’ என்று␢ ஆண்டவர் ஆணையிட்டுச்␢ சொன்னார்; அவர் தம் மனத்தை␢ மாற்றிக் கொள்ளார்.⁾
Alleluia
மத்தேயு 4: 23
23அவர் கலிலேயப் பகுதி முழுவதும் சுற்றி வந்தார்; அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் கற்பித்தார்; விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார்.
Gospel
மாற்கு 3: 1-6
1அவர் மீண்டும் தொழுகைக்கூடத்திற்குள் சென்றார். அங்கே கை சூம்பியவர் ஒருவர் இருந்தார்.
2சிலர் இயேசுமீது குற்றம் சுமத்தும் நோக்குடன், ஓய்வுநாளில் அவர் அவரைக் குணப்படுத்துவாரா என்று கூர்ந்து கவனித்துக்கொண்டே இருந்தனர்.
3இயேசு கை சூம்பிவரை நோக்கி, “எழுந்து, நடுவே நில்லும்” என்றார்.
4பின்பு, அவர்களிடம், “ஓய்வுநாளில் நன்மை செய்வதா, தீமை செய்வதா? உயிரைக் காப்பதா, அழிப்பதா? எது முறை?” என்று அவர் கேட்டார். அவர்களோ பேசாதிருந்தார்கள்.
5அவர் சினத்துடன் அவர்களைச் சுற்றிலும் திரும்பிப் பார்த்து, அவர்களது பிடிவாத உள்ளத்தைக் கண்டு வருந்தி, கை சூம்பியவரை நோக்கி, “கையை நீட்டும்” என்றார். அவர் நீட்டினார். அவருடைய கை மீண்டும் நலமடைந்தது.
6உடனே பரிசேயர் வெளியேறி ஏரோதியரோடு சேர்ந்து இயேசுவை எப்படி ஒழிக்கலாம் என அவருக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தனர்.