ஜனவரி 2027

ஞா தி செ பு வி வெ
12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31
இன்றுக்கு

வாசகங்கள்

22 ஜனவரி, 2027

Day of Prayer for the Legal Protection of Unborn Children Obligatory Memorial

அன்றைய திருப்பலி
First Reading

எபிரேயர் 8: 6-13

6ஆனால், இவரோ அவர்களுடைய குருத்துவப்பணியை விட மிக மேன்மையான குருத்துவப் பணியைப் பெற்றிருக்கிறார். ஏனெனில் சீரிய வாக்குறுதிகளின் அடிப்படையில் செய்யப்பட்டு, இவரை இணைப்பாளராகக் கொண்டிருக்கும் உடன்படிக்கை முந்திய உடன்படிக்கையைவிட சிறப்புமிக்கது.⒫ 7முதல் உடன்படிக்கை குறையற்றதாய் இருந்திருப்பின், இரண்டாம் உடன்படிக்கைக்கு இடமே இருந்திருக்காது. 8ஆனால், கடவுள் அவர்களது குற்றத்தை எடுத்துக் கூறிச் சொன்னது இதுவே: ⁽“இதோ, நாள்கள் வருகின்றன.␢ அப்போது இஸ்ரயேல் வீட்டாரோடும்␢ யூதாவின் வீட்டாரோடும்␢ புதிய உன்படிக்கை ஒன்றைச்␢ செய்து கொள்வேன்”⁾ என்கிறார் ஆண்டவர். 9⁽“எகிப்து நாட்டிலிருந்து␢ அவர்களுடைய மூதாதையரைக்␢ கைப்பிடித்து நடத்தி வந்தபொழுது␢ நான் அவர்களோடு␢ செய்துகொண்ட உடன்படிக்கையைப்␢ போன்று இது இராது.␢ ஏனெனில், நான் அவர்களோடு␢ செய்துகொண்ட உடன்படிக்கையை␢ அவர்கள் மீறிவிட்டார்கள்;␢ நானும் அவர்கள் மீது␢ அக்கறை கொள்ளவில்லை”⁾ என்கிறார் ஆண்டவர். 10⁽“அந்நாள்களுக்குப் பின்␢ இஸ்ரயேல் வீட்டாரோடு␢ நான் செய்யவிருக்கும்␢ உடன்படிக்கை இதுவே:␢ என் சட்டத்தை உள்ளத்தில் பதிப்பேன்;␢ அதை அவர்களது இதயத்தில்␢ எழுதி வைப்பேன்.␢ நான் அவர்களின் கடவுளாய் இருப்பேன்;␢ அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள்”⁾ என்கிறார் ஆண்டவர். 11⁽இனிமேல் எவரும்␢ “ஆண்டவரை அறிந்து கொள்ளும்” எனத்␢ தம் அடுத்தவருக்கோ,␢ சகோதரர் சகோதரிகளுக்கோ␢ கற்றுத் தர மாட்டார்.␢ ஏனெனில், அவர்களுள்␢ பெரியோர் முதல் சிறியோர்வரை␢ அனைவரும் என்னை அறிந்துகொள்வர்.⁾ 12⁽அவர்களது தீச்செயலை நான்␢ இரக்கத்தோடு மன்னித்துவிடுவேன்.␢ அவர்களுடைய பாவங்களை␢ இனிமேல் நினைவுகூர மாட்டேன்.”⁾⒫ 13“புதியதோர் உடன்படிக்கை” என்பதால், முன்னையதை அவர் பழையதாக்கிவிட்டார். பழமையானதும் நாள்பட்டதும் விரைவில் மறையவேண்டியதே.
Responsorial Psalm

திருப்பாடல்கள் 85: 8 and 10, 11-12, 13-14

8⁽ஆண்டவராம் இறைவன்␢ உரைப்பதைக் கேட்பேன்;␢ தம் மக்களுக்கு, தம் பற்றுமிகு அடியார்க்கு␢ நிறைவாழ்வை அவர் வாக்களிக்கின்றார்;␢ அவர்களோ மடமைக்குத்␢ திரும்பிச் செல்லலாகாது.⁾ 10⁽பேரன்பும் உண்மையும்␢ ஒன்றையொன்று சந்திக்கும்;␢ நீதியும் நிறைவாழ்வும்␢ ஒன்றையொன்று முத்தமிடும்.⁾ 11⁽மண்ணினின்று உண்மை முளைத்தெழும்;␢ விண்ணினின்று நீதி கீழ்நோக்கும்.⁾ 12⁽நல்லதையே ஆண்டவர் அருள்வார்;␢ நல்விளைவை நம்நாடு நல்கும்.⁾ 13⁽நீதி அவர்முன் செல்லும்;␢ அவர்தம் அடிச்சுவடுகளுக்கு␢ வழி வகுக்கும்.⁾
Gospel

மாற்கு 3: 13-19

13அதன்பின்பு இயேசு மலைமேல் ஏறித் தாம் விரும்பியவர்களைத் தம்மிடம் வரவழைத்தார். அவர்களும் அவரிடம் வந்தார்கள். 14தம்மோடு இருக்கவும் நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பப்படவும் பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்கவும் அவர் பன்னிருவரை நியமித்தார்; 15அவர்களுக்குத் திருத்தூதர் என்றும் பெயரிட்டார். 16அவர் ஏற்படுத்திய பன்னிருவர் முறையே, பேதுரு என்று அவர் பெயரிட்ட சீமோன், 17செபதேயுவின் மகன் யாக்கோபு, யாக்கோபின் சகோதரரான யோவான் — இவ்விருவருக்கும் ‘இடியைப் போன்றோர்’ எனப் பொருள்படும் பொவனேர்கேசு என்று அவர் பெயரிட்டார் — 18அந்திரேயா, பிலிப்பு, பர்த்தலமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் மகன் யாக்கோபு, ததேயு, தீவிரவாதியாய் இருந்த சீமோன், 19இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாசு இஸ்காரியோத்து என்போர் ஆவர்.