வாசகங்கள்
23 ஜனவரி, 2027
Ordinary Weekday/ Optional Memorial of the Blessed Virgin Mary/ Vincent of Saragossa, deacon, Martyr/ Marianne Cope, Virgin
Marianne Cope, Virgin
First Reading
எபிரேயர் 9: 2-3, 11-14
2அத்திரு உறைவிடத்தில் முன்கூடாரம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அங்கே ஒரு விளக்குத் தண்டும் ஒரு மேசையும் படையல் அப்பங்களும் இருந்தன. இவ்விடத்திற்குத் ‘தூயகம்’ என்பது பெயர்.
3இரண்டாம் திரைக்குப் பின், “திருத்தூயகம்” என்னும் கூடாரம் இருந்தது.
11ஆனால், இப்போது கிறிஸ்து தலைமைக் குருவாக வந்துள்ளார். அவர் அருளும் நலன்கள் இப்போது நமக்குக் கிடைத்துள்ளன. அவர் திருப்பணி செய்யும் கூடாரம் முன்னதை விட மேலானது, நிறைவு மிக்கது. அது மனிதர் கையால் அமைக்கப்பட்டது அல்ல; அதாவது, படைக்கப்பட்ட இவ்வுலகைச் சார்ந்தது அல்ல.
12அவர் பலியாகப் படைத்த இரத்தம் வெள்ளாட்டுக் கிடாய்கள், கன்றுக்குட்டிகள் ஆகியவற்றின் இரத்தம் அல்ல, அவரது சொந்த இரத்தமே. அவர் ஒரே ஒருமுறை தூயகத்திற்குள் சென்று எக்காலத்திற்குமென அதைப் படைத்து நமக்கு என்றுமுள்ள மீட்பு கிடைக்கும்படி செய்தார்.
13வெள்ளாட்டுக்கிடாய்கள், காளைகள் இவற்றின் இரத்தமும் கிடாரியின் சாம்பலும் தீட்டுப்பட்டவர்கள்மீது தெளிக்கப்படும்போது, சடங்கு முறைப்படி அவர்கள் தூய்மை பெறுகிறார்கள்.
14ஆனால், கிறிஸ்துவின் இரத்தம், வாழும் கடவுளுக்கு நாம் வழிபாடு செய்யுமாறு, சாவுக்கு அழைத்துச் செல்லும் செயல்களிலிருந்து நம் மனச்சான்றை எத்துணை மிகுதியாய்த் தூய்மைப்படுத்துகிறது! ஏனெனில், என்றுமுள்ள தூய ஆவியினால் தம்மைத்தாமே கடவுளுக்கு மாசற்ற பலியாகக் கொடுத்தவர் அவரே.⒫
Responsorial Psalm
திருப்பாடல்கள் 47: 2-3, 6-7, 8-9
2⁽ஏனெனில், உன்னதராகிய ஆண்டவர்␢ அஞ்சுதற்கு உரியவர்;␢ உலகனைத்தையும் ஆளும்␢ மாவேந்தர் அவரே;⁾
3⁽வேற்று மக்களை␢ நமக்கு அடிபணியச் செய்தவர்;␢ அன்னிய நாடுகளை␢ நம் தாள் பணிய வைத்தார்.⁾
6⁽பாடுங்கள்;␢ கடவுளுக்குப் புகழ் பாடுங்கள்;␢ பாடுங்கள், நம் அரசருக்குப் புகழ் பாடுங்கள்.⁾
7⁽ஏனெனில், கடவுளே␢ அனைத்து உலகின் வேந்தர்;␢ அருட்பா தொடுத்துப் புகழ் பாடுங்கள்.⁾
8⁽கடவுள் பிறஇனத்தார் மீது␢ ஆட்சி செய்கின்றார்;␢ அவர்தம் திரு அரியணையில்␢ வீற்றிருக்கின்றார்.⁾
9⁽மக்களினங்களின் தலைவர்கள்␢ ஆபிரகாமின் கடவுளுடைய மக்களோடு␢ ஒன்றுகூடுவர்; ஏனெனில்,␢ மண்ணுலகின் மன்னர் அனைவரும்␢ கடவுளின் கொற்றத்திற்கு உட்பட்டவர்;␢ கடவுளே அனைத்திற்கும் மேலானவர்.⁾
Alleluia
திருத்தூதர் பணிகள் 16: 14b
14அங்குத் தியத்திரா நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் நாங்கள் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்தார். அவர் பெயர் லீதியா. செந்நிற ஆடைகளை விற்பவரான அவர் கடவுளை வழிபட்டுவந்தார். பவுல் பேசியதை ஏற்றுக்கொள்ளுமாறு ஆண்டவர் அவர் உள்ளத்தைத் திறந்தார்.
Gospel
மாற்கு 3: 20-21
20அதன்பின் இயேசு வீட்டிற்குச் சென்றார். மீண்டும் மக்கள் கூட்டம் வந்து கூடியதால் அவர்கள் உணவு அருந்தவும் முடியவில்லை.
21அவருடைய உறவினர் இதைக் கேள்விப்பட்டு, அவரைப் பிடித்துக்கொண்டுவரச் சென்றார்கள். ஏனெனில், அவர் மதிமயங்கி இருக்கிறார் என்று மக்கள் பேசிக் கொண்டனர்.