ஜனவரி 2027

ஞா தி செ பு வி வெ
12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31
இன்றுக்கு

வாசகங்கள்

11 ஜனவரி, 2027

Ordinary Weekday

அன்றைய திருப்பலி
First Reading

எபிரேயர் 1: 1-6

1பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், 2இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார்; இவரை எல்லாவற்றுக்கும் உரிமையாளராக்கினார்; இவர் வழியாக உலகங்களைப் படைத்தார். 3கடவுளுடைய மாட்சிமையின் சுடரொளியாகவும், அவருடைய இயல்பின் அச்சுப் பதிவாகவும் விளங்கும் இவர், தம் வல்லமைமிக்க சொல்லால் எல்லாவற்றையும் தாங்கி நடத்துகிறார். மக்களைப் பாவங்களிலிருந்து தூய்மைப்படுத்தியபின், விண்ணகத்தில் இவர் பெருமைமிக்க கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார். 4இவ்வாறு இறைமகன் வான தூதரைவிடச் சிறந்ததொரு பெயரை உரிமைப்பேறாகப் பெற்றார். அந்நிலைக்கு ஏற்ப அவர்களைவிட இவர் மேன்மை அடைந்தார். 5ஏனெனில், கடவுள் வானதூதர் எவரிடமாவது ⦃“நீ என் மைந்தர்; இன்று நான் § உம்மைப் பெற்றெடுத்தேன்”⦄ என்றும், ⦃“நான் அவருக்குத் தந்தையாயிருப்பேன், § அவர் எனக்கு மகனாயிருப்பார்”⦄ என்றும் எப்போதாவது கூறியதுண்டா? 6மேலும் அவர் தம் முதற்பேறான இவரை உலகிற்கு அனுப்பியபோது, ⦃“கடவுளின் தூதர் அனைவரும் § அவரை வழிபடுவார்களாக”⦄ என்றார்.
Responsorial Psalm

திருப்பாடல்கள் 97: 1 and 2b, 6 and 7c, 9

1⁽ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்;␢ பூவுலகம் மகிழ்வதாக!␢ திரளான தீவு நாடுகள்␢ களிகூர்வனவாக!⁾ 2⁽மேகமும் காரிருளும்␢ அவரைச் சூழ்ந்துள்ளன;␢ நீதியும் நேர்மையும்␢ அவரது அரியணையின் அடித்தளம்.⁾ 6⁽வானங்கள் அவரது நீதியை␢ அறிவிக்கின்றன;␢ அனைத்து மக்களினங்களும்␢ அவரது மாட்சியைக் காண்கின்றன.⁾ 7⁽உருவங்களை வழிபடுவோரும்␢ சிலைகள் பற்றிப்␢ பெருமையடித்துக் கொள்வோரும்␢ வெட்கத்துக்கு உள்ளாவர்;␢ அனைத்துத் தெய்வங்களே!␢ அவரைத் தாழ்ந்து பணியுங்கள்.⁾ 9⁽ஏனெனில், ஆண்டவரே!␢ உலகனைத்தையும் ஆளும் உன்னதர் நீர்;␢ தெய்வங்கள் அனைத்திற்கும்␢ மேலானவர் நீரே!⁾
Alleluia

மாற்கு 1: 15

15“காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்” என்று அவர் கூறினார்.
Gospel

மாற்கு 1: 14-20

14யோவான் கைதுசெய்யப்பட்டபின், கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக் கொண்டே இயேசு கலிலேயாவிற்கு வந்தார். 15“காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்” என்று அவர் கூறினார். 16அவர் கலிலேயக் கடலோரமாய்ச் சென்றபோது சீமோனையும் அவர் சகோதரரான அந்திரேயாவையும் கண்டார். மீனவர்களான அவர்கள் கடலில் வலை வீசிக்கொண்டிருந்தார்கள். 17இயேசு அவர்களைப் பார்த்து, “என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்” என்றார். 18உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள். 19பின்னர், சற்று அப்பால் சென்றபோது செபதேயுவின் மகன் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் இயேசு கண்டார். அவர்கள் படகில் வலைகளைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தார்கள். 20உடனே இயேசு அவர்களையும் அழைத்தார். அவர்களும் தங்கள் தந்தை செபதேயுவைக் கூலியாள்களோடு படகில் விட்டுவிட்டு அவர் பின் சென்றார்கள்.