ஜனவரி 2027

ஞா தி செ பு வி வெ
12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31
இன்றுக்கு

வாசகங்கள்

25 ஜனவரி, 2027

Conversion of Paul, Apostle Feast

அன்றைய திருப்பலி
First Reading

திருத்தூதர் பணிகள் 22: 3-16 or திருத்தூதர் பணிகள் 9: 1-22

3“நான் ஒரு யூதன்; சிலிசியாவிலுள்ள தர்சு நகரத்தில் பிறந்தவன்; ஆனால், இந்த எருசலேம் நகரில் வளர்க்கப்பட்டவன்; கமாலியேலின் காலடியில் அமர்ந்து நம் தந்தையரின் திருச்சட்டங்களில் நுட்பமாகப் பயிற்சி பெற்றவன்; நீங்கள் அனைவரும் இன்று கடவுள் மீது ஆர்வம் கொண்டுள்ளது போன்று நானும் கொண்டிருந்தேன். 4கிறிஸ்தவ நெறியைச் சேர்ந்த ஆண்களையும் பெண்களையும் கட்டிச் சிறையிலடைத்தேன்; சாகும் வரை அவர்களைத் துன்புறுத்தினேன். 5தலைமைக் குருவும் மூப்பர் சங்கத்தாரும் இதற்குச் சாட்சி. இவர்களிடமிருந்து தமஸ்கு நகரிலுள்ள சகோதரர்களுக்குக் கடிதங்களைப் பெற்றுக் கொண்டு அங்குள்ள கிறிஸ்தவர்களைக் கட்டி எருசலேமுக்குக் கொண்டு வந்து தண்டிப்பதற்காக அங்குச் சென்றேன். 6நான் புறப்பட்டுத் தமஸ்கு நகரை நெருங்கியபோது நண்பகல் நேரத்தில் திடீரென வானிலிருந்து ஒரு பேரொளி என்னைச் சூழ்ந்து வீசியது. 7நான் தரையில் விழுந்தேன். அப்போது, “சவுலே, சவுலே நீ ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்?” என்ற குரலைக் கேட்டேன். 8அப்போது நான், “ஆண்டவரே நீர் யார்?” என்று கேட்டேன். அவர், “நீ துன்புறுத்தும் நாசரேத்து இயேசு நானே” என்றார். 9என்னோடிருந்தவர்கள் ஒளியைக் கண்டார்கள்; ஆனால், என்னோடு பேசியவரது குரலைக் கேட்கவில்லை. 10ஆண்டவரே, நான் என்ன செய்ய வேண்டும்?” என நான் கேட்க, ஆண்டவர் என்னை நோக்கி, “நீ எழுந்து தமஸ்குவுக்குச் செல். நீ செய்வதற்கென குறிக்கப்பட்டுள்ளவை அனைத்தும் அங்கே உனக்குக் கூறப்படும்” என்றார். 11அந்த ஒளியின் மிகுதியால் நான் பார்க்க முடியவில்லை. என்னோடியிருந்தவர்கள் எனது கையைப் பிடித்துத் தமஸ்குவினுள் அழைத்துச் சென்றார்கள். 12அங்கு அனனியா என்னும் ஒருவர் இருந்தார். அவர் திருச்சட்டத்தைக் கடைப்பிடித்து கடவுளுக்கு அஞ்சி வாழ்ந்தவர்; அங்கு வாழ்ந்து வந்த யூதர் அனைவரிடமும் நற்சான்று பெற்றவர். 13அவர் என்னிடம் வந்து அருகில் நின்று, “சகோதரர் சவுலே, மீண்டும் பார்வையடையும்” என்றார். அந்நேரமே நான் பார்வை பெற்று அவரைப் பார்த்தேன். 14அப்போது அவர், “நம் மூதாதையரின் கடவுள் தம் திருவுளத்தை அறியவும் தம் நேர்மையாளரைக் காணவும் தம் வாய்மொழியைக் கேட்கவும் உம்மை ஏற்படுத்தியுள்ளார். 15ஏனெனில், நீர் கண்டவைகளுக்கும் கேட்டவைகளுக்கும் அனைவர் முன்பும் நீர் சாட்சியாய் இருக்க வேண்டும். 16இனி ஏன் காலம் தாழ்த்த வேண்டும்? எழுந்து அவரது திருப்பெயரை அறிக்கையிட்டு உமது பாவங்களிலிருந்து கழுவப் பெற்றுத் திருமுழுக்குப் பெறும்” என்றார்.
Responsorial Psalm

திருப்பாடல்கள் 117: 1bc, 2

1⁽பிற இனத்தாரே!␢ நீங்கள் அனைவரும்␢ ஆண்டவரைப் போற்றுங்கள்!␢ மக்களினத்தாரே! நீங்கள் அனைவரும்␢ அவரைப் புகழுங்கள்!⁾ 2⁽ஏனெனில், ஆண்டவர்␢ நமக்குக் காட்டும் மாறாத அன்பு␢ மிகப்பெரியது;␢ அவரது உண்மை␢ என்றென்றும் நிலைத்துள்ளது.␢ அல்லேலூயா!⁾
Alleluia

யோவான் 15: 16

16நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ளவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன். நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன். ஆகவே, நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதையெல்லாம் அவர் உங்களுக்குக் கொடுப்பார்.
Gospel

மாற்கு 16: 15-18

15இயேசு அவர்களை நோக்கி, “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். 16நம்பிக்கைகொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர். 17நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களைச் செய்வர்: அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்; 18பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர்” என்று கூறினார்.