வாசகங்கள்
18 ஜனவரி, 2027
Ordinary Weekday
அன்றைய திருப்பலி
First Reading
எபிரேயர் 5: 1-10
1தலைமைக் குரு ஒவ்வொருவரும் மனிதரிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, பாவங்களுக்குக் கழுவாயாகக் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்துவதற்காக மக்கள் சார்பாகக் கடவுள் முன் பணிபுரிய ஏற்படுத்தப்படுகிறார்.
2அவர் தாமே வலுவின்மைக்கு ஆளாயிருப்பதால், அறியாமையில் இருப்போருக்கும் நெறி தவறி நடப்போருக்கும் பரிவு காட்டக் கூடியவராயிருக்கிறார்.
3அவர் மக்களுடைய பாவத்திற்குக் கழுவாயாகப் பலி செலுத்துவது போல, தம் வலுவின்மையின் பொருட்டுத் தமக்காகவும் பலி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறார்.
4மேலும், யாரும் இம்மதிப்புக்குரிய பணியைத் தாமே தேர்ந்துகொள்வதில்லை. ஆரோனுக்கு வந்தது போன்று கடவுளிடமிருந்தே அழைப்பு வர வேண்டும்.⒫
5அவ்வாறே கிறிஸ்துவும் தலைமைக் குருவாகத் தம்மையே உயர்த்திக் கொள்ளவில்லை.⁽ “நீர் என் மைந்தர்; இன்று நான் §உம்மைப் பெற்றெடுத்தேன்”⁾ என்று அவரிடம் கூறியவரே அந்த மேன்மையை அவருக்கு அளித்தார்.
6இவ்வாறே மற்றோரிடத்தில், ⁽“மெல்கிசதேக்கின் முறைப்படி § நீர் என்றென்றும் குருவே”⁾ என்றும் கூறப்பட்டுள்ளது.⒫
7அவர் இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில், தம்மைச் சாவிலிருந்து காப்பாற்ற வல்லவரை நோக்கி உரத்த குரல் எழுப்பி, கண்ணீர் சிந்தி, மன்றாடி வேண்டினார். அவர் கொண்டிருந்த இறைப்பற்று கலந்த அச்சத்தை முன்னிட்டு, கடவுள் அவருக்குச் செவி சாய்த்தார்.
8அவர் இறைமகனாயிருந்தும், துன்பங்கள் வழியே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்.
9அவர் நிறைவுள்ளவராகி, தமக்குத் கீழ்ப்படிவோர் அனைவரும் என்றென்றும் மீட்படையக் காரணமானார்.
10“மெல்கிசதேக்கின் முறைப்படி வந்த தலைமைக் குரு” என்று கடவுள் அவருக்குப் பெயர் சூட்டினார்.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 110: 1, 2, 3, 4
1⁽ஆண்டவர் என் தலைவரிடம்,␢ ‛நான் உம் பகைவரை␢ உமக்குப் கால்மணையாக்கும்வரை␢ நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்’␢ என்று உரைத்தார்.⁾
2⁽வலிமைமிகு உமது செங்கோலை␢ ஆண்டவர் சீயோனிலிருந்து ␢ ஒங்கச் செய்வார்; ␢ உம் எதிரிகளிடையே ஆட்சி செலுத்தும்!⁾
3⁽நீர் உமது படைக்குத் ␢ தலைமை தாங்கும் நாளில்␢ தூய கோலத்துடன் உம் மக்கள்␢ தம்மை உவந்தளிப்பர்; ␢ வைகறை கருவுயிர்த்த பனியைப்போல ␢ உம் இளம் வீரர் உம்மை வந்தடைவர்.⁾
4⁽‛மெல்கிசெதேக்கின் முறைப்படி␢ நீர் என்றென்றும் குருவே’ என்று␢ ஆண்டவர் ஆணையிட்டுச்␢ சொன்னார்; அவர் தம் மனத்தை␢ மாற்றிக் கொள்ளார்.⁾
Alleluia
எபிரேயர் 4: 12
12கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; இருபக்கமும் வெட்டக்கூடிய எந்த வாளினும் கூர்மையானது; ஆன்மாவையும் ஆவியையும் பிரிக்கும் அளவுக்குக் குத்தி ஊடுருவுகிறது; எலும்பு மூட்டையும் மச்சையையும் அவ்வாறே ஊடுருவுகிறது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது.
Gospel
மாற்கு 2: 18-22
18யோவானுடைய சீடரும் பரிசேயரும் நோன்பு இருந்துவந்தனர். சிலர் இயேசுவிடம், “யோவானுடைய சீடர்களும் பரிசேயருடைய சீடர்களும் நோன்பிருக்க, உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பிருப்பதில்லை?” என்று கேட்டனர்.
19அதற்கு இயேசு அவர்களை நோக்கி, “மணமகன் தங்களோடு இருக்கும்வரை மணவிருந்தினர்கள் நோன்பு இருக்கமுடியுமா? மணமகன் அவர்களோடு இருக்கும் காலமெல்லாம் அவர்கள் நோன்பிருக்க முடியாது.
20ஆனால், மணமகன் அவர்களைவிட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள்.
21எவரும் பழைய ஆடையில் புதிய துணியை ஒட்டுப்போடுவதில்லை. அவ்வாறு ஒட்டுப்போட்டால், அந்த புதிய துணி பழையதிலிருந்து கிழியும்; கிழிசலும் பெரிதாகும்.
22அதுபோலப் பழைய தோற்பைகளில், எவரும் புதிய திராட்சை மதுவை ஊற்றி வைப்பதில்லை. ஊற்றிவைத்தால் மது தோற்பைகளை வெடிக்கச் செய்யும்; மதுவும் தோற்பைகளும் பாழாகும். புதிய மது புதுத் தோற்பைகளுக்கே ஏற்றது” என்றார்.