ஜனவரி 2027

ஞா தி செ பு வி வெ
12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31
இன்றுக்கு

வாசகங்கள்

5 ஜனவரி, 2027

John Neumann, Bishop Obligatory Memorial

அன்றைய திருப்பலி
First Reading

1 யோவான் 4: 7-10

வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.

Responsorial Psalm

திருப்பாடல்கள் 72: 1-2, 3-4, 7-8

1⁽கடவுளே, அரசருக்கு உமது␢ நீதித்தீர்ப்பை வழங்கும்␢ ஆற்றலை அளியும்;␢ அரச மைந்தரிடம்␢ உமது நீதி விளங்கச் செய்யும்.⁾ 2⁽அவர் உம் மக்களை␢ நீதியோடு ஆள்வாராக!␢ உம்முடையவரான எளியோர்க்கு␢ நீதித்தீர்ப்பு வழங்குவாராக!⁾ 3⁽மலைகள் மக்களுக்குச்␢ சமாதானத்தைக் கொடுக்கட்டும்;␢ குன்றுகள் நீதியை விளைவிக்கட்டும்.⁾ 4⁽எளியோரின் மக்களுக்கு␢ அவர் நீதி வழங்குவாராக!␢ ஏழைகளின் பிள்ளைகளைக் காப்பாராக;␢ பிறரை ஒடுக்குவோரை␢ நொறுக்கி விடுவாராக!⁾ 7⁽அவர் காலத்தில்␢ நீதி தழைத்தோங்குவதாக;␢ நிலா உள்ள வரையில்␢ மிகுந்த சமாதானம் நிலவுவதாக.⁾ 8⁽ஒரு கடலிலிருந்து␢ அடுத்த கடல்வரைக்கும்␢ அவர் ஆட்சி செலுத்துவார்;␢ பேராற்றிலிருந்து␢ உலகின் எல்லை வரைக்கும்␢ அவர் அரசாள்வார்.⁾
Alleluia

லூக்கா 4: 18

18⁽“ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது;␢ ஏனெனில், அவர் எனக்கு␢ அருள்பொழிவு செய்துள்ளார்.␢ ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும்␢ சிறைப்பட்டோர் விடுதலை அடைவர்,␢ பார்வையற்றோர் பார்வைபெறுவர் என␢ முழக்கமிடவும்␢ ஒடுக்கப்பட்டோரை␢ விடுதலை செய்து அனுப்பவும்⁾
Gospel

மாற்கு 6: 34-44

34அவர் கரையில் இறங்கியபோது பெருந்திரளான மக்களைக் கண்டார். அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் அவர்கள் மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார். 35இதற்குள் நெடுநேரமாகிவிடவே, சீடர் அவரிடம் வந்து, “இவ்விடம் பாலைநிலம் ஆயிற்றே, ஏற்கெனவே நெடுநேரம் ஆகிவிட்டது. 36சுற்றிலுமுள்ள பட்டிகளுக்கும் ஊர்களுக்கும் சென்று உண்பதற்கு ஏதாவது அவர்களே வாங்கிக்கொள்ளுமாறு நீர் மக்களை அனுப்பிவிடும்” என்றனர். 37அவர் அவர்களிடம், “நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்” என்று பதிலளித்தார். அவர்கள், “நாங்கள் போய் இருநூறு தெனாரியத்திற்கு* அப்பம் வாங்கி இவர்களுக்கு உண்ணக் கொடுக்க வேண்டும் என்கிறீரா?” என்று கேட்டார்கள். 38அப்பொழுது அவர், “உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கின்றன? போய்ப் பாருங்கள்” என்று கூற, அவர்களும் பார்த்து விட்டு, “ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன” என்றார்கள். 39அவர் எல்லாரையும் பசும்புல் தரையில் அமரச் செய்யும்படி சீடர்களைப் பணித்தார். 40மக்கள் நூறு பேராகவும், ஐம்பது பேராகவும் வரிசை வரிசையாய் அமர்ந்தனர். 41அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து வானத்தை அண்ணாந்து பார்த்து, கடவுளைப் போற்றி, அப்பங்களைப் பிட்டு, அவர்களுக்குப் பரிமாறுவதற்காகத் தம் சீடரிடம் கொடுத்தார். அவ்வாறே அந்த இரு மீன்களையும் எல்லாருக்கும் பகிர்ந்தளித்தார். 42அனைவரும் வயிறார உண்டனர். 43பின் எஞ்சிய அப்பத் துண்டுகளையும் மீன் துண்டுகளையும் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர். 44அப்பம் உண்ட ஆண்களின் தொகை ஐயாயிரம்.