வாசகங்கள்
16 ஜனவரி, 2027
Ordinary Weekday/ Optional Memorial of the Blessed Virgin Mary
Optional Memorial of the Blessed Virgin Mary
First Reading
எபிரேயர் 4: 12-16
12கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; இருபக்கமும் வெட்டக்கூடிய எந்த வாளினும் கூர்மையானது; ஆன்மாவையும் ஆவியையும் பிரிக்கும் அளவுக்குக் குத்தி ஊடுருவுகிறது; எலும்பு மூட்டையும் மச்சையையும் அவ்வாறே ஊடுருவுகிறது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது.
13படைப்பு எதுவும் கடவுளுடைய பார்வைக்கு மறைவாய் இல்லை. அவருடைய கண்களுக்கு முன் அனைத்தும் மறைவின்றி வெளிப்படையாய் இருக்கின்றன. நாம் அவருக்கே கணக்குக் கொடுக்கவேண்டும்.
14எனவே, வானங்களைக் கடந்து சென்ற இறைமகனாகிய இயேசுவை நாம் தனிப்பெரும் தலைமைக் குருவாகக் கொண்டுள்ளதால் நாம் அறிக்கையிடுவதை விடாது பற்றிக்கொள்வோமாக!
15ஏனெனில், நம் தலைமைக் குரு நம்முடைய வலுவின்மையைக் கண்டு இரக்கம் காட்ட இயலாதவர் அல்ல; மாறாக, எல்லா வகையிலும் நம்மைப்போலச் சோதிக்கப்பட்டவர்; எனினும் பாவம் செய்யாதவர்.
16எனவே, நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற வேளையில் உதவக் கூடிய அருளைக் கண்டடையவும், அருள் நிறைந்த இறை அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்வோமாக.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 19: 8, 9, 10, 15
8⁽ஆண்டவரின் நியமங்கள் சரியானவை;␢ அவை இதயத்தை மகிழ்விக்கின்றன.␢ ஆண்டவரின் கட்டளைகள்␢ ஒளிமயமானவை;␢ அவை கண்களை ஒளிர்விக்கின்றன.⁾
9⁽ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது;␢ அது எந்நாளும் நிலைத்திருக்கும்.␢ ஆண்டவரின் நீதிநெறிகள்␢ உண்மையானவை; § அவை முற்றிலும் நீதியானவை.⁾
10⁽அவை பொன்னினும்,␢ பசும் பொன்னினும் மேலாக␢ விலைமிக்கவை; தேனினும்,␢ தேனடையினின்று சிந்தும்␢ தெளி தேனினும் இனிமையானவை.⁾
Alleluia
லூக்கா 4: 18
18⁽“ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது;␢ ஏனெனில், அவர் எனக்கு␢ அருள்பொழிவு செய்துள்ளார்.␢ ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும்␢ சிறைப்பட்டோர் விடுதலை அடைவர்,␢ பார்வையற்றோர் பார்வைபெறுவர் என␢ முழக்கமிடவும்␢ ஒடுக்கப்பட்டோரை␢ விடுதலை செய்து அனுப்பவும்⁾
Gospel
மாற்கு 2: 13-17
13இயேசு மீண்டும் கடலோரம் சென்றார். மக்கள் கூட்டத்தினர் எல்லாரும் அவரிடம் வரவே, அவர் அவர்களுக்குக் கற்பித்தார்.
14பின்பு, அங்கிருந்து அவர் சென்றபோது அல்பேயுவின் மகன் லேவி சுங்கச்சாவடியில் அமர்ந்திருந்ததைக் கண்டார்; அவரிடம், “என்னைப் பின்பற்றி வா” என்றார். அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார்.
15பின்பு, அவருடைய வீட்டில் பந்தி அமர்ந்திருந்தபோது வரிதண்டுபவர்கள், பாவிகள் ஆகிய பலர் இயேசுவோடும் அவருடைய சீடரோடும் விருந்துண்டனர். ஏனெனில், இவர்களுள் பலர் இயேசுவைப் பின்பற்றியவர்கள்.
16அவர் பாவிகளோடும் வரிதண்டுபவர்களோடும் உண்பதைப் பரிசேயரைச் சார்ந்த மறைநூல் அறிஞர் கண்டு, அவருடைய சீடரிடம், “இவர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பதேன்?” என்று கேட்டனர்.
17இயேசு, இதைக் கேட்டவுடன் அவர்களை நோக்கி, “நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவருக்கே மருத்துவர் தேவை. நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்” என்றார்.