ஜனவரி 2027

ஞா தி செ பு வி வெ
12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31
இன்றுக்கு

வாசகங்கள்

27 ஜனவரி, 2027

Ordinary Weekday/ Angela Merici, Virgin, Religious Founder

Angela Merici, Virgin, Religious Founder
First Reading

எபிரேயர் 10: 11-18

11ஒவ்வொரு குருவும் நாள்தோறும் இறை ஊழியம் புரியும்போது மீண்டும் மீண்டும் அதே பலிகளைச் செலுத்தி வருகிறார். அவையோ பாவங்களை ஒருபோதும் போக்க இயலாதவை. 12ஆனால், இவர் ஒரே பலியைப் பாவங்களுக்காக என்றென்றைக்கும் எனச் செலுத்திவிட்டு, கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்துள்ளார். 13அங்கே தம் பகைவர் தமக்குக் கால்மணை ஆக்கப்படும்வரை காத்திருக்கிறார். 14தாம் தூயவராக்கியவர்களை ஒரே பலியினால் என்றென்றைக்கும் நிறைவுள்ளவராக்கினார். 15❮15-16❯இதுபற்றித் தூய ஆவியாரும், ⁽ “அந்நாள்களுக்குப் பிறகு␢ அவர்களோடு நான் செய்யவிருக்கும்␢ உடன்படிக்கை இதுவே:␢ என் சட்டத்தை␢ அவர்கள் உள்ளத்தில் பதிப்பேன்;␢ அதை அவர்களது இதயத்தில்␢ எழுதி வைப்பேன்”⁾ என்று நமக்குச் சான்று பகர்கிறார். இவ்வாறு சொன்ன பின், 16Same as above 17⁽“அவர்களது தீச்செயலையும்␢ அவர்களுடைய பாவங்களையும்␢ இனிமேல் நினைவுகூர மாட்டேன்”⁾ என்றும் கூறுகிறார். 18எனவே, பாவமன்னிப்பு கிடைத்தபின் பாவத்திற்குக் கழுவாயாகச் செலுத்தும் பலிக்கு இடமேயில்லை.
Responsorial Psalm

திருப்பாடல்கள் 110: 1, 2, 3, 4

1⁽ஆண்டவர் என் தலைவரிடம்,␢ ‛நான் உம் பகைவரை␢ உமக்குப் கால்மணையாக்கும்வரை␢ நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்’␢ என்று உரைத்தார்.⁾ 2⁽வலிமைமிகு உமது செங்கோலை␢ ஆண்டவர் சீயோனிலிருந்து ␢ ஒங்கச் செய்வார்; ␢ உம் எதிரிகளிடையே ஆட்சி செலுத்தும்!⁾ 3⁽நீர் உமது படைக்குத் ␢ தலைமை தாங்கும் நாளில்␢ தூய கோலத்துடன் உம் மக்கள்␢ தம்மை உவந்தளிப்பர்; ␢ வைகறை கருவுயிர்த்த பனியைப்போல ␢ உம் இளம் வீரர் உம்மை வந்தடைவர்.⁾ 4⁽‛மெல்கிசெதேக்கின் முறைப்படி␢ நீர் என்றென்றும் குருவே’ என்று␢ ஆண்டவர் ஆணையிட்டுச்␢ சொன்னார்; அவர் தம் மனத்தை␢ மாற்றிக் கொள்ளார்.⁾
Gospel

மாற்கு 4: 1-20

1அவர் மீண்டும் கடலோரத்தில் கற்பிக்கத் தொடங்கினார். மாபெரும் மக்கள் கூட்டம் அவரிடம் ஒன்றுகூடி வர, அவர் கடலில் நின்ற ஒரு படகில் ஏறி அமர்ந்தார். திரண்டிருந்த மக்கள் அனைவரும் கடற்கரையில் இருந்தனர். 2அவர் உவமைகள் வாயிலாகப் பலவற்றை அவர்களுக்குக் கற்பித்தார். அவர் அவர்களுக்குக் கற்பித்தது; 3“இதோ, கேளுங்கள், விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார். 4அவர் விதைக்கும் பொழுது சில விதைகள் வழியோரம் விழுந்தன. பறவைகள் வந்து அவற்றை விழுங்கிவிட்டன. 5வேறு சில விதைகள் மிகுதியாக மண் இல்லாப் பாறைப் பகுதிகளில் விழுந்தன. அங்கே மண் ஆழமாக இல்லாததால் அவை விரைவில் முளைத்தன. 6ஆனால், கதிரவன் மேலே எழ, அவை காய்ந்து, வேர் இல்லாமையால் கருகிப் போயின. 7மற்றும் சில விதைகள் முட்செடிகளிடையே விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து அவற்றை நெருக்கிவிடவே, அவை விளைச்சலைக் கொடுக்கவில்லை. 8ஆனால், இன்னும் சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவை முளைத்து வளர்ந்து, சில முப்பது மடங்காகவும் சில அறுபது மடங்காகவும் சில நூறு மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன. 9கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்.” 10அவர் தனிமையான இடத்தில் இருந்தபோது அவரைச் சூழ்ந்து இருந்தவர்கள், பன்னிருவரோடு சேர்ந்து கொண்டு, உவமைகளைப்பற்றி அவரிடம் கேட்டார்கள். 11அதற்கு இயேசு அவர்களிடம், “இறையாட்சியின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது; புறம்பே இருக்கிறவர்களுக்கோ எல்லாம் உவமைகளாகவே இருக்கின்றன. 12எனவே, அவர்கள் ⁽‘ஒருபோதும் மனம் மாறி␢ மன்னிப்புப் பெறாதபடி␢ கண்ணால் தொடர்ந்து பார்த்தும்␢ கண்டு கொள்ளாமலும்␢ காதால் தொடர்ந்து கேட்டும்␢ கருத்தில் கொள்ளாமலும்␢ இருப்பார்கள்’”⁾ என்று கூறினார். 13மேலும், அவர் அவர்களை நோக்கி, “இந்த உவமை உங்களுக்குப் புரியவில்லையா? பின்பு எப்படி மற்ற உவமைகளையெல்லாம் நீங்கள் புரிந்துகொள்வீர்கள்? 14விதைப்பவர் இறைவார்த்தையை விதைக்கிறார். 15வழியோரம் விழுந்த விதைகளுக்கு ஒப்பானவர்கள் வார்த்தையைக் கேட்பார்கள். ஆனால், அதைக் கேட்டவுடன் சாத்தான் வந்து அவர்களுள் விதைக்கப்பட்ட வார்த்தையை எடுத்துவிடுகிறான். 16பாறைப் பகுதியில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள் இறைவார்த்தையைக் கேட்டவுடன் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வார்கள். 17ஆனால், அவர்கள் வேரற்றவர்கள்; சிறிது காலமே நிலைத்திருப்பவர்கள். இறைவார்த்தையின் பொருட்டு இன்னலோ இடுக்கண்ணோ நேர்ந்த உடனே அவர்கள் தடுமாற்றம் அடைவார்கள். 18முட்செடிகளுக்கு இடையில் விதைக்கபட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள் 19இறைவார்த்தையைக் கேட்டும் உலகக் கவலையும் செல்வ மாயையும் ஏனைய தீய ஆசைகளும் உட்புகுந்து அவ்வார்த்தையை நெருக்கி விடுவதால் பயன் அளிக்கமாட்டார்கள். 20நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள் இறைவார்த்தையைக் கேட்டு அதை ஏற்றுக் கொண்டு பயன் அளிப்பார்கள். இவர்களுள் சிலர் முப்பது மடங்காகவும் சிலர் அறுபது மடங்காகவும் சிலர் நூறு மடங்காகவும் பயன் அளிப்பர்” என்றார்.