வாசகங்கள்
7 ஜனவரி, 2027
Christmas Weekday/ Raymond of Peñafort, Priest
Raymond of Peñafort, Priest
First Reading
1 யோவான் 4: 19 - 5: 4
வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 72: 1-2, 14 and 15bc, 17
1⁽கடவுளே, அரசருக்கு உமது␢ நீதித்தீர்ப்பை வழங்கும்␢ ஆற்றலை அளியும்;␢ அரச மைந்தரிடம்␢ உமது நீதி விளங்கச் செய்யும்.⁾
2⁽அவர் உம் மக்களை␢ நீதியோடு ஆள்வாராக!␢ உம்முடையவரான எளியோர்க்கு␢ நீதித்தீர்ப்பு வழங்குவாராக!⁾
14⁽அவர்கள் உயிரைக் கொடுமையினின்றும்␢ வன்முறையினின்றும் விடுவிப்பார்;␢ அவர்கள் இரத்தம் அவர் பார்வையில்␢ விலைமதிப்பற்றது.⁾
15⁽அவர் நீடுழி வாழ்க! சேபாவின் பொன்␢ அவருக்குக் கொடுக்கப்படும்;␢ அவருக்காக இடையறாது␢ வேண்டுதல் செய்யப்படுவதாக!␢ அவர்மீது ஆசிகள் வழங்கப்பெறுமாறு␢ நாள் முழுதும் மன்றாடப்படுவதாக!⁾
17⁽அவர் பெயர்␢ என்றென்றும் நிலைத்திருப்பதாக!␢ கதிரவன் உள்ளவரையில்␢ அவர் பெயர் நிலைப்பதாக!␢ அவர்மூலம் மனிதர்␢ ஆசிபெற விழைவராக!␢ எல்லா நாட்டினரும் அவரை␢ நற்பேறு பெற்றவரென வாழ்த்துவராக!⁾
Alleluia
லூக்கா 4: 18
18⁽“ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது;␢ ஏனெனில், அவர் எனக்கு␢ அருள்பொழிவு செய்துள்ளார்.␢ ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும்␢ சிறைப்பட்டோர் விடுதலை அடைவர்,␢ பார்வையற்றோர் பார்வைபெறுவர் என␢ முழக்கமிடவும்␢ ஒடுக்கப்பட்டோரை␢ விடுதலை செய்து அனுப்பவும்⁾
Gospel
லூக்கா 4: 14-22
14பின்பு, இயேசு தூய ஆவியின் வல்லமை உடையவராய்க் கலிலேயாவுக்குத் திரும்பிப் போனார். அவரைப் பற்றிய பேச்சு சுற்றுப்புறம் எங்கும் பரவியது.
15அவர் அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் கற்பித்து வந்தார். எல்லாரும் அவரைப்பற்றிப் பெருமையாகப் பேசினர்.
16இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்தார். தமது வழக்கத்தின்படி ஓய்வுநாளில் தொழுகைக் கூடத்திற்குச் சென்று வாசிக்க எழுந்தார்.
17இறைவாக்கினர் எசாயாவின் சுருளேடு அவரிடம் கொடுக்கப்பட்டது. அவர் அதைப் பிரித்தபோது கண்ட பகுதியில் இவ்வாறு எழுதியிருந்தது:
18⁽“ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது;␢ ஏனெனில், அவர் எனக்கு␢ அருள்பொழிவு செய்துள்ளார்.␢ ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும்␢ சிறைப்பட்டோர் விடுதலை அடைவர்,␢ பார்வையற்றோர் பார்வைபெறுவர் என␢ முழக்கமிடவும்␢ ஒடுக்கப்பட்டோரை␢ விடுதலை செய்து அனுப்பவும்⁾
19⁽ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை␢ முழக்கமிட்டு அறிவிக்கவும்␢ அவர் என்னை அனுப்பியுள்ளார்.”⁾⒫
20பின்னர், அந்த ஏட்டைச் சுருட்டி ஏவலரிடம் கொடுத்துவிட்டு அமர்ந்தார். தொழுகைக்கூடத்தில் இருந்தவர்களின் கண்கள் அனைத்தும் அவரையே உற்று நோக்கியிருந்தன.
21அப்பொழுது அவர் அவர்களை நோக்கி, “நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று” என்றார்.
22அவர் வாயிலிருந்து வந்த அருள்மொழிகளைக் கேட்டு வியப்புற்று, “இவர் யோசேப்பின் மகன் அல்லவா?” எனக் கூறி எல்லாரும் அவரைப் பாராட்டினர்.