யோபு 11

முந்திய அடுத்த
1⁽அதற்கு நாமாவியனான␢ சோப்பார் சொன்ன மறுமொழி:⁾ 2⁽திரளான சொற்கள் பதிலின்றிப் போகலாமா?␢ மிகுதியாகப் பேசுவதால்,␢ ஒருவர் நேர்மையாளர் ஆகிவிடுவாரோ?⁾ 3⁽உம் வீண் வார்த்தைகள் மனிதரை␢ வாயடைத்திடுமோ? நீர் நகையாடும் போது␢ உம்மை யாரும் நையாண்டி செய்யாரோ?⁾ 4⁽“என் அறிவுரை தூயது; நானும்␢ என் கண்களுக்கு மாசற்றவன்” என்கின்றீர்.⁾ 5⁽ஆனால், “கடவுளே பேசட்டும்; தம் இதழ்களை␢ உமக்கெதிராயத் திறக்கட்டும்” என␢ யாரேனும் அவரை வேண்டாரோ!⁾ 6⁽அவரே ஞானத்தின் மறைபொருளை␢ உமக்கு அறிவிக்கட்டும்;␢ அவர் இரட்டிப்பான அறிவும் திறனுமுடையவர்;␢ கடவுள் உம் தீமைகளில் சிலவற்றை␢ மறந்தார் என்பதை அறிக!⁾ 7⁽கடவுளின் ஆழ்ந்த உண்மைகளை␢ நீர் அறிய முடியுமா? எல்லாம் வல்லவரின்␢ எல்லையைக் கண்டுணர முடியுமா?⁾ 8⁽அவை வானங்களை விட உயர்ந்தவை;␢ நீர் என்ன செய்வீர்?␢ அவை பாதாளத்தைவிட ஆழமானவை;␢ நீர் என்ன அறிவீர்?⁾ 9⁽அதன் அளவு பாருலகைவிடப் பரந்தது;␢ ஆழ்கடலைவிட அகலமானது.⁾ 10⁽அவர் இழுத்து வந்து அடைத்துப் போட்டாலும்,␢ அவைமுன் நிறுத்தினாலும்␢ அவரைத் தடுப்பார் யார்?⁾ 11⁽ஏனெனில், அவர் மனிதரின்␢ ஒன்றுமில்லாமையை அறிவார்;␢ தீமையைக் காண்கின்றார்; ஆனால்,␢ அதை ஒருபொருட்டாகக் கருதுவதில்லை.⁾ 12⁽காட்டுக்கழுதைக்குட்டி␢ மனிதனாகப் பிறந்தால்,␢ அறிவிலியும் அறிவு பெறுவான்.⁾ 13⁽உம்முடைய உள்ளத்தை␢ நீர் ஒழுங்குபடுத்தினால்,␢ உம்முடைய கைகளை␢ அவரை நோக்கி நீட்டுவீராக!⁾ 14⁽உம் கையில் கறையிருக்குமாயின்␢ அப்புறப்படுத்தும்; உம் கூடாரத்தில்␢ தீமை குடிகொள்ளாதிருக்கட்டும்.⁾ 15⁽அப்போது உண்மையாகவே நாணமின்றி␢ உம் முகத்தை ஏறெடுப்பீர்;␢ நிலைநிறுத்தப்படுவீர்; அஞ்சமாட்டீர்.⁾ 16⁽உம் துயரை நீர் மறந்துபோவீர்;␢ கடந்துபோன வெள்ளம்போல்␢ அதை நினைகூர்வீர்.⁾ 17⁽உம் வாழ்வுக்காலம் நண்பகலைவிட ஒளிரும்;␢ காரிருளால் மூடப்பட்டிருந்தாலும்␢ காலைபோல் ஆவீர்;⁾ 18⁽நம்பிக்கை இருப்பதனால் உறுதிகொள்வீர்;␢ சுற்றிலும் நோக்கிப் பாதுகாப்பில் ஓய்வீர்;⁾ 19⁽ஓய்ந்து படுப்பீர்; ஒருவரும் உம்மை அச்சுறுத்தார்;␢ உம் முகம்தேடிப் பலர் உம் தயவை நாடுவர்;⁾ 20⁽தீயோரின் கண்கள் மங்கிப்போம்;␢ அனைத்துப் புகலிடமும் அவர்க்கு அழிந்துபோம்;␢ உயிர்பிரிதலே அவர்தம் நம்பிக்கை!⁾