1யோபு அதற்கு உரைத்த பதில்:
2⁽உண்மையில் இது இவ்வாறு␢ என்று அறிவேன்; ஆனால், மனிதர்␢ இறைவன்முன் நேர்மையாய் இருப்பதெப்படி?⁾
3⁽ஒருவர் அவருடன் வழக்காட விரும்பினால்,␢ ஆயிரத்தில் ஒன்றுக்கேனும்␢ அம்மனிதரால் பதிலளிக்க முடியுமா?⁾
4⁽இறைவன் உள்ளத்தில் ஞானமுள்ளவர்;␢ ஆற்றலில் வல்லவர்;␢ அவர்க்கு எதிராய்த் தம்மைக் கடினப்படுத்தி,␢ வளமுடன் வாழ்ந்தவர் யார்?⁾
5⁽அவர் மலைகளை அகற்றுவார்;␢ அவை அதை அறியா; அவர் சீற்றத்தில்␢ அவைகளைத் தலைகீழாக்குவார்.⁾
6⁽அசைப்பார் அவர் நிலத்தை␢ அதனிடத்தினின்று;␢ அதிரும் அதனுடைய தூண்கள்.⁾
7⁽அவர் கட்டளையிடுவார்;␢ கதிரவன் தோன்றான்;␢ அவர் மறைத்திடுவார் விண்மீன்களை.⁾
8⁽தாமே தனியாய் வானை விரித்தவர்,␢ ஆழியின் முதுகை மிதித்து நடந்தவர்.⁾
9⁽வடமீன் குழுவையும், மிருகசீரிடத்தையும்,␢ கார்த்திகை விண்மீன்களையும்,␢ தென்திசை விண்மீன் குழுக்களையும்␢ அமைத்தவர் அவரே.⁾
10⁽உணர்ந்திட இயலாப் பெருஞ்செயல்களையும்,␢ கணக்கிட முடியா அருஞ்செயல்களையும்␢ ஆற்றுநர் அவரே.⁾
11⁽இதோ! என் அருகே அவர் கடந்து செல்கையில்␢ நான் பார்க்க முடியவில்லை; நழுவிச்␢ செல்கையில் நான் உணர முடியவில்லை.⁾
12⁽இதோ! அவர் பறிப்பாரானால்,␢ அவரை மறிப்பார் யார்? யாது செய்கின்றீர்␢ என அவரைத் கேட்பார் யார்?⁾
13⁽கடவுள் தம் சீற்றத்தைத் தணிக்கமாட்டார்;␢ அவரடி பணிந்தனர்␢ இராகாபின் துணைவர்கள்.⁾
14⁽இப்படியிருக்க, எப்படி அவருக்குப்␢ பதிலுரைப்பேன்? எதிர்நின்று␢ அவரோடு எச்சொல் தொடுப்பேன்?⁾
15⁽நான் நேர்மையாக இருந்தாலும்␢ அவருக்குப் பதிலுரைக்க இயலேன்;␢ என் நீதிபதியிடம் நான்␢ இரக்கத்தையே கெஞ்சுவேன்.⁾
16⁽நான் கூப்பிட அவர் பதிலுரைப்பினும்,␢ என் வேண்டுதலுக்கு அவர்␢ செவிகொடுப்பார் என்று நம்புவதற்கில்லை.⁾
17⁽புயலினால் என்னை நொறுக்குவார்;␢ காரணமின்றி என் காயங்களைப்␢ பெருக்குவார்.⁾
18⁽அவர் என்னை மூச்சிழுக்கவும் விடாது,␢ கசப்பினால் என்னை நிரப்புகின்றார்.⁾
19⁽வலிமையில் அவருக்கு நிகர் அவரே!␢ அவர்மேல் வழக்குத் தொடுப்பவர் யார்?⁾
20⁽நான் நேர்மையாக இருந்தாலும்,␢ என் வாயே என்னைக் குற்றவாளியாக்கும்;␢ நான் குற்றமற்றவனாக இருந்தாலும்,␢ மாறுபட்டவனாக அது என்னைத் தீர்ப்பிடும்.⁾
21⁽குற்றமற்றவன் நான்;␢ என்னைப்பற்றிக் கவலையில்லை;␢ என் வாழ்க்கையையே வெறுக்கின்றேன்.⁾
22⁽எல்லாம் ஒன்றுதான்; எனவேதான்␢ சொல்கின்றேன்; “அவர் நல்லாரையும்␢ பொல்லாரையும் ஒருங்கே அழிக்கின்றார்’.⁾
23⁽பேரிடர் சாவைத் திடீரெனத் தரும்போது,␢ அவர் மாசற்றவரின்␢ நெருக்கடி கண்டு நகைப்பார்.⁾
24⁽வையகம் கொடியோர் கையில்␢ கொடுக்கப்படுகின்றது; அதன் நீதிபதிகளின்␢ கண்களை அவர் கட்டுகின்றார்.␢ அவரேயன்றி வேறு யார் இதைச் செய்வார்?⁾
25⁽ஓடுபவரைவிட விரைந்து செல்கின்றன␢ என் வாழ்நாள்கள்;␢ அவை பறந்து செல்கின்றன;␢ நன்மையொன்றும் அவை காண்பதில்லை.⁾
26⁽நாணற் படகுபோல் அவை விரைந்தோடும்;␢ இரைமேல் பாயும் ஒரு கழுகைப்போல் ஆகும்.⁾
27⁽‘நான் துயர் மறப்பேன்;␢ முகமலர்ச்சி கொள்வேன்;␢ d புன்முறுவல் பூப்பேன், எனப் புகல்வேனாயினும்,⁾
28⁽என் இடுக்கண் கண்டு நடுக்கமுறுகின்றேன்,␢ ஏனெனில், அவர் என்னைக்␢ குற்றமற்றவனாய்க் கொள்ளார் என அறிவேன்.⁾
29⁽நான்தான் குற்றவாளி எனில்,␢ வீணே ஏன் நான் போராடவேண்டும்?⁾
30⁽பனிநீரில் நான் என்னைக் கழுவினும்,␢ சவர்க்காரத்தினால்␢ என் கைகளைத் தூய்மையாக்கினும்,⁾
31⁽குழியில் என்னை அவர் அமிழ்த்திடுவார்;␢ என் உடையே என்னை வெறுத்திடுமே!⁾
32⁽ஏனெனில், அவரோடு நான் வழக்காடவும்,␢ வழக்கு மன்றத்தில் எதிர்க்கவும்␢ என்னைப்போல் அவர் மனிதர் இல்லை.⁾
33⁽இருவர்மீதும் தம் கையை வைக்க,␢ ஒரு நடுவர்கூட எம் நடுவே இல்லையே.⁾
34⁽அகற்றப்படுக அவர் கோல் என்னிடமிருந்து!␢ அப்போது மிரட்டாது என்னை␢ அவரைப்பற்றிய அச்சம்!⁾
35⁽அவரிடம் அச்சமின்றிப் பேசுவேன் அப்போது;␢ அப்படிப் பேசும் நிலையில்␢ நான் இல்லையே இப்போது.⁾