1⦅பிறகு சூகாவியனான பில்தாது பேசினான்:⦆
2⁽ஆட்சியும் மாட்சியும் கடவுளுக்கே உரியன;␢ அமைதியை உன்னதங்களில்␢ அவரே நிலைநாட்டுவார்.⁾
3⁽அளவிட முடியுமா அவர்தம் படைகளை?␢ எவர்மேல் அவரொளி வீசாதிருக்கும்?⁾
4⁽அப்படியெனில், எப்படி மனிதர் கடவுள்முன்␢ நேரியவராய் இருக்க முடியும்? அல்லது␢ பெண்ணிடம் பிறந்தவர்␢ எப்படித் தூயவராய் இருக்கக் கூடும்?⁾
5⁽இதோ! வெண்ணிலவும் ஒளி குன்றியதே!␢ விண்மீனும் அவர்தம் பார்வையில் § தூய்மையற்றதே!⁾
6⁽அப்படியிருக்க, புழுவைப்போன்ற மனிதர்␢ எத்துணைத் தாழ்ந்தவர்!␢ பூச்சி போன்ற மானிடர்␢ எவ்வளவு குறைந்தவர்!⁾