யோபு 38

முந்திய அடுத்த
1⁽ஆண்டவர் சூறாவளியினின்று␢ யோபுக்கு அருளிய பதில்:⁾ 2⁽அறிவற்ற சொற்களால் என் அறிவுரையை␢ இருட்டடிப்புச் செய்யும் இவன் யார்?⁾ 3⁽வீரனைப்போல் இடையினை இறுக்கிக்கட்டு;␢ வினவுவேன் உன்னிடம்,␢ விடை எனக்களிப்பாய்.⁾ 4⁽மண்ணகத்திற்கு நான்␢ கால்கோள் இடும்போது நீ எங்கு இருந்தாய்?␢ உனக்கு அறிவிருக்குமானால் அறிவிப்பாயா?⁾ 5⁽அதற்கு அளவு குறித்தவர் யார்?␢ உனக்குத்தான் தெரியுமே!␢ அதன்மேல் நூல் பிடித்து அளந்தவர் யார்?⁾ 6⁽எதன்மேல் அதன் தூண்கள்␢ ஊன்றப்பட்டன? அல்லது யார் அதன்␢ மூலைக் கல்லை நாட்டியவர்?⁾ 7⁽அப்போது வைகறை விண்மீன்கள்␢ ஒன்றிணைந்து பாடின!␢ கடவுளின் புதல்வர் களிப்பால் ஆர்ப்பரித்தனர்!⁾ 8⁽கருப்பையினின்று கடல்␢ உடைப்பெடுத்து ஓடியபொழுது␢ அதனைக் கதவிட்டு அடைத்தவர் யார்?⁾ 9⁽மேகத்தை அதற்கு மேலாடையாக்கி,␢ காரிருளைப் பொதிதுணியாக்கி,⁾ 10⁽எல்லைகளை நான் அதற்குக் குறித்து␢ கதவையும் தாழ்ப்பாளையும் பொருத்தி⁾ 11⁽‘இதுவரை வருவாய், இதற்குமேல் அல்ல;␢ உன் இறுமாப்பின் அலைகள் இங்கே நிற்க!”␢ என்று நான் இயம்பியபோது எங்கிருந்தாய் நீ?⁾ 12⁽உன் வாழ்நாளில் காலைப்பொழுதுக்குக்␢ கட்டளையிட்டதுண்டா?␢ வைகறையைத் தன் இடமறிய வைத்ததுண்டா?⁾ 13⁽இவ்வாறு, அது வையக விளிம்பைத்␢ தொட்டிழுத்து, பொல்லாதவரை␢ அதனுளிருந்து உதறித்தள்ளுமே!⁾ 14⁽முத்திரையால் களிமண் உருப்பெறுவதுபோல்␢ மண்ணகம் வண்ணம் ஏற்றிய ஆடையாயிற்று.⁾ 15⁽அப்போது, கொடியவரிடமிருந்து␢ ஒளி பறிக்கப்படும்;␢ அடிக்க ஓங்கியகை முறிக்கப்படும்.⁾ 16⁽கடலின் ஊற்றுவரை நீ போனதுண்டா?␢ ஆழியின் அடியில் நீ உலவினதுண்டோ?⁾ 17⁽சாவின் வாயில்கள்␢ உனக்குக் காட்டப்பட்டனவோ?␢ இருள் உலகின் கதவுகளைக்␢ கண்டதுண்டோ நீ?⁾ 18⁽அவனியின் பரப்பை நீ ஆய்ந்தறிந்ததுண்டா?␢ அறிவிப்பாய் அதிலுள்ள␢ அனைத்தையும் அறிந்திருந்தால்!⁾ 19⁽ஒளி உறைவிடத்திற்கு வழி எதுவோ!␢ இருள் இருக்கும் இருப்பிடம் எங்கேயோ?⁾ 20⁽அதன் எல்லைக்கு␢ அதனை அழைத்துப் போவாயோ?␢ அதனுறைவிடத்திற்கு நேர்வழி அறிவாயோ!⁾ 21⁽ஆம், அறிவாய்;␢ அன்றே நீ பிறந்தவனன்றோ! ஆமாம்;␢ ஆண்டுகளும் உனக்கு அதிகமன்றோ!⁾ 22₍உறைபனிக் கிடங்கினுள் புகுந்ததுண்டோ?₎ 23⁽இடுக்கண் வேளைக்கு எனவும்␢ கடும் போர், சண்டை நாளுக்கு எனவும்␢ அவற்றை நான் சேர்த்து வைத்தேன்.⁾ 24⁽ஒளி தோன்றும் இடத்திற்குப் பாதை எது?␢ கீழைக்காற்று அவனிமேல் வீசுவது எப்படி?⁾ 25⁽வெள்ளத்திற்குக் கால்வாய் வெட்டியவர் யார்?␢ இடி மின்னலுக்கு வழி வகுத்தவர் யார்?⁾ 26⁽மனிதர் வாழா மண்ணிலும்␢ மாந்தர் குடியிராப் பாலையிலும்␢ மழை பெய்வித்துப்⁾ 27⁽பாழ்வெளிக்கும் வறண்ட␢ நிலத்திற்கும் நீர் பாய்ச்சிப்␢ பசும்புல் முளைக்கச் செய்தவர் யார்?⁾ 28⁽மழைக்குத் தந்தை உண்டோ?␢ பனித்துளிகளைப் பிறப்பிப்பவர் யார்?⁾ 29⁽பனிக்கட்டி யாருடைய உதரத்தில்␢ தோன்றுகின்றது? வானின் மூடுபனியை␢ ஈன்றெடுப்பவர் யார்?⁾ 30⁽கல்லைப்போல் புனல் கட்டியாகிறது;␢ ஆழ்கடலின் பரப்பு உறைந்து போகிறது.⁾ 31⁽கார்த்திகை மீனைக் கட்டி விலங்கிடுவாயோ?␢ மார்கழி மீனின் தலையை அவிழ்த்திடுவாயோ?⁾ 32⁽குறித்த காலத்தில்␢ விடிவெள்ளியைக் கொணர்வாயோ?␢ வடதிசை விண்மீன் குழுவுக்கு␢ வழி காட்டுவாயோ?⁾ 33⁽வானின் விதிமுறைகளை அறிந்திடுவாயோ?␢ அதன் ஒழுங்கை நானிலத்தில்␢ நிலைநாட்டிடுவாயோ?⁾ 34⁽முகில்வரை உன் குரலை முழங்கிடுவாயோ?␢ தண்ணீர்ப் பெருக்கு␢ உன்னை மூடச் செய்வாயோ?⁾ 35⁽‘புறப்படுக’ என மின்னலுக்கு␢ ஆணையிடுவாயோ?␢ ‘இதோ! உள்ளோம்’ என␢ அவை உனக்கு இயம்புமோ?⁾ 36⁽நாரைக்கு ஞானத்தை நல்கியவர் யார்?␢ சேவலுக்கு அறிவைக்கொடுத்தவர் யார்?⁾ 37⁽ஞானத்தால் முகில்களை␢ எண்ணக் கூடியவர் யார்?␢ வானத்தின் நீர்க்குடங்களைக்␢ கவிழ்ப்பவர் யார்?⁾ 38⁽துகள்களைச் சேர்த்துக்␢ கட்டியாக்குபவர் யார்? மண்கட்டிகளை␢ ஒட்டிக் கொள்ளச் செய்பவர் யார்?⁾ 39⁽பெண் சிங்கத்திற்கு இரை தேடுவாயோ?␢ அரிமாக் குட்டியின் பசியை ஆற்றுவாயோ?⁾ 40⁽குகைகளில் அவை குறுகி இருக்கையிலே,␢ குழிகளில் அவை பதுங்கி இருக்கையிலே.⁾ 41⁽காக்கைக் குஞ்சுகள்␢ இறைவனை நோக்கிக் கரையும் போது,␢ அவை உணவின்றி ஏங்கும்போது,␢ காகத்திற்கு இரை அளிப்பவர் யார்?⁾