1⦅அதற்கு யோபு கூறிய பதில்:⦆
2⁽என்போன்ற வலிமையற்றவர்க்கு␢ எத்துணைப் துணைபுரிந்தீர்!␢ ஆற்றலற்ற தோளுக்கு␢ எவ்வளவு துணைநின்றீர்!⁾
3⁽என் போன்ற அறிவற்றவர்க்கு␢ எவ்வளவு அறிவுரை கூறினீர்!␢ நன்னெறிகளை நிறையக் காட்டீனீர்!⁾
4⁽எவர் துணைகொண்டு␢ இயம்பினீர் இம்மொழிகளை?␢ எவர்தம் ஏவுதல்␢ உம்மிடமிருந்து வெளிப்பட்டது?⁾
5⁽கீழ்உலகின் ஆவிகள் நடுங்குகின்றன;␢ நீர்த் திரள்களும் அவற்றில் வாழ்வனவும்␢ அஞ்சுகின்றன.⁾
6⁽பாதாளம் கடவுள்முன் திறந்து கிடக்கிறது;␢ படுகுழி அவர்முன் மூடப்படவில்லை.⁾
7⁽வெற்றிடத்தில் வடபுறத்தை அவர் விரித்தார்;␢ காற்றிடையே உலகைத் தொங்கவிட்டார்.⁾
8⁽நீரினை மேகத்துள் பொதித்துள்ளார்;␢ அதன் நிறைவால் முகிலும் கிழிவதில்லை.⁾
9⁽தம் அரியணையின் முகத்தை மூடுகின்றார்;␢ முகிலை அதன்மேல் பரப்புகின்றார்.⁾
10⁽நீர்ப்பரப்பின் மீது வட்டம் வரைந்து,␢ இருளுக்கும் ஒளிக்குமிடையில்␢ எல்லை அமைத்தார்.⁾
11⁽விண்ணின் தூண்கள் அதிர்கின்றன;␢ அவர் அதட்டலில் அதிர்ச்சியடைகின்றன.⁾
12⁽ஆழியைத் தம் ஆற்றலால் அடக்கினார்;␢ இராகாபை அழித்தார் அறிவுக்கூர்மையால்.⁾
13⁽தம் மூச்சால் வான்வெளியை ஒளிர்வித்தார்;␢ தம் கையால் விரைந்தோடும் பாம்பை␢ ஊடுருவக் குத்தினார்.⁾
14⁽ஓ! இவையாவும்␢ அவர்தம் செயல்களின் விளிம்புகளே!␢ எத்துணை மென்குரல் அவற்றில் கேட்கின்றது.␢ அவர்தம் வல்லமையின் இடிமுழக்கத்தை அறிய␢ யாரால் இயலும்?⁾