யோபு 22

முந்திய அடுத்த
1⁽பின்னர் தேமானியனான எலிப்பாசு␢ பேசத் தொடங்கினான்:⁾ 2⁽மனிதரால் இறைவனுக்குப் பயன் உண்டா?␢ மதிநுட்பம் உடையவரால்␢ அவருக்குப் பயன் உண்டா?⁾ 3⁽நீர் நேர்மையாக இருப்பது␢ எல்லாம் வல்லவர்க்கு இன்பம் பயக்குமா?␢ நீர் உமது வழியைச் செம்மைப்படுத்துவது␢ அவர்க்கு நன்மை பயக்குமா?⁾ 4⁽நீர் அவரை அஞ்சி மதிப்பதாலா␢ அவர் உம்மைக் கண்டிக்கிறார்?␢ அதனை முன்னிட்டா␢ உம்மைத் தீர்ப்பிடுகிறார்?⁾ 5⁽உமது தீமை பெரிதல்லவா?␢ உமது கொடுமைக்கு முடிவில்லையா?⁾ 6⁽ஏனெனில், அற்பமானவற்றுக்கும்␢ உம் உறவின்முறையாரிடம் அடகு வாங்கினீர்;␢ ஏழைகளின் உடையை உரிந்து விட்டீர்!⁾ 7⁽தாகமுள்ளோர்க்குக்␢ குடிக்கத் தண்ணீர் தரவில்லை;␢ பசித்தோர்க்கு உணவு கொடுக்க␢ முன்வரவில்லை.⁾ 8⁽வலிய மனிதராகிய உமக்கு␢ வையகம் சொந்தமாயிற்று;.␢ உம் தயவு பெற்றவர்க்கே␢ அது குடியிருப்பாயிற்று.⁾ 9⁽விதவைகளை நீர்␢ வெறுங்கையராய் விரட்டினீர்;␢ .அனாதைகளின் கைகளை முறித்துப் போட்டீர்.⁾ 10⁽ஆகையால்,␢ கண்ணிகள் உம்மைச் சூழ்ந்துள்ளன;␢ கிலி உம்மைத் திடீரென ஆட்கொள்ளும்.⁾ 11⁽நீர் காணாவண்ணம் காரிருள் சூழ்ந்தது;␢ நீர்ப்பெருக்கு உம்மை மூழ்கடித்தது.⁾ 12⁽உயரத்தே விண்ணகத்தில்␢ கடவுள் இல்லையா?␢ வானிலிருக்கும் விண்மீன்களைப் பாரும்!␢ அவை எவ்வளவு உயரத்திலுள்ளன!⁾ 13⁽ஆனால், நீர் சொல்கின்றீர்;␢ ‘இறைவனுக்கு என்ன தெரியும்?␢ கார்முகிலை ஊடுருவிப் பார்த்து␢ அவரால் தீர்ப்பிட முடியுமா?⁾ 14⁽அவர் பார்க்காவண்ணம் முகில் மறைக்கின்றது;␢ அவர் வான்தளத்தில் உலவுகின்றார்’.⁾ 15⁽பாதகர் சென்ற பழைய நெறியில்␢ நீரும் செல்ல விழைகின்றீரோ!⁾ 16⁽நேரம் வருமுன்பே அவர்கள் பிடிப்பட்டனர்;␢ அவர்கள் அடித்தளத்தை␢ வெள்ளம் அடித்துச் சென்றது.⁾ 17⁽அவர்கள் இறைவனிடம்,␢ ‘எங்களைவிட்டு அகலும்; எல்லாம் வல்லவர்␢ எங்களுக்கு என்ன செய்ய முடியும்?’ என்பர்.⁾ 18⁽இருப்பினும், அவரே அவர்களின் இல்லத்தை␢ நம்மையினால் நிரப்பினார்; .␢ எனினும், தீயவரின் திட்டம்␢ எனக்குத் தொலைவாயிருப்பதாக!⁾ 19⁽நேர்மையுள்ளோர் அதைக் கண்டு␢ மனம் மகிழ்கின்றனர்; மாசற்றோர்␢ அவர்களை எள்ளி நகையாடுகின்றனர்;⁾ 20⁽‘இதோ! நம் பகைவர் வீழ்த்தப்பட்டனர்;␢ அவர்களின் சேமிப்பு␢ தீயால் விழுங்கப்பட்டது’␢ என்கின்றனர்.⁾ 21⁽இணங்குக இறைவனுக்கு;எய்துக அமைதி;␢ அதனால் உமக்கு நன்மை வந்தடையும்.⁾ 22⁽அவர் வாயினின்று அறிவுரை பெறுக;␢ அவர்தம் மொழிகளை␢ உம் நெஞ்சில் பொறித்திடுக;⁾ 23⁽நீர் எல்லாம் வல்லவரிடம்␢ திரும்பி வருவீராகில்,␢ நீர் கட்டியெழுப்பப்படுவீர்; தீயவற்றை␢ உம் கூடாரத்திலிருந்து அகற்றி விடும்!⁾ 24⁽பொன்னைப் புழுதியிலே எறிந்து,␢ ஓபீர்த் தங்கத்தை ஓடைக் கற்களிடை வீசிவிடும்!⁾ 25⁽எல்லாம் வல்லவரே உமக்குப் பொன்னாகவும்,␢ வெள்ளியாகவும், வலிமையாகவும் திகழ்வார்.⁾ 26⁽அப்போது எல்லாம் வல்லவரில்␢ நீர் நம்பிக்கை கொள்வீர்.␢ கடவுளைப் பார்த்து␢ உம் முகத்தை நிமிர்த்திடுவீர்.⁾ 27⁽நீர் அவரிடம் மன்றாடுவீர்;␢ அவரும் உமக்குச் செவி கொடுப்பார்.⁾ 28⁽நீர் நினைப்பது கைகூடும்;␢ உம் வழிகள் ஒளிமயமாகும்.⁾ 29⁽ஏனெனில், அவர் செருக்குற்றோரின்␢ ஆணவத்தை அழிக்கின்றார்;␢ தாழ்வாகக் கருதப்பட்டோரை மீட்கின்றார்.⁾ 30⁽குற்றவாளிகளையும் அவர் விடுவிப்பார்;␢ அவர்கள் உம் கைகளின்␢ தூய்மையால் மீட்கப்படுவர்.⁾