யோபு 14

முந்திய அடுத்த
1⁽பெண்ணிடம் பிறந்த மனிதருக்கு␢ வாழ்நாளோ குறைவு;␢ வருத்தமோ மிகுதி.⁾ 2⁽மலர்போல் பூத்து␢ அவர்கள் உலர்ந்து போகின்றனர்␢ ; நிழல்போல் ஓடி␢ அவர்கள் நிலையற்றுப் போகின்றனர்.⁾ 3⁽இத்தகையோர்மீதா உம் கண்களை வைப்பீர்?␢ தீர்ப்பிட அவர்களை உம்மிடம் கொணர்வீர்?⁾ 4⁽அழுக்குற்றதினின்று␢ அழுக்கற்றதைக் கொணர முடியுமா?␢ யாராலும் முடியவே முடியாது.⁾ 5⁽அவர்களுடைய நாள்கள்␢ உண்மையாகவே கணிக்கப்பட்டுள்ளன.␢ அவர்களுடைய திங்கள்களின் எண்ணிக்கை␢ உம்மிடம் உள்ளது;␢ அவர்கள் கடக்க இயலாத␢ எல்லையைக் குறித்தீர்.⁾ 6⁽எனவே அவர்களிடமிருந்து␢ உம் பார்வையைத் திருப்பும்;␢ அப்பொழுது, கூலியாள்கள்␢ தம் நாள் முடிவில் இருப்பது போல்,␢ அவர்கள் ஓய்ந்து மகிழ்வர்.⁾ 7⁽மரத்திற்காவது நம்பிக்கையுண்டு;␢ அது தறிக்கப்பட்டால் மீண்டும் துளிர்க்கும்;␢ அதன் குருத்துகள் விடாது துளிர்க்கும்.⁾ 8⁽அதன் வேர் மண்ணில் பழமை அடைந்தாலும்,␢ அதன் அடிமரம் நிலத்தில் பட்டுப்போனாலும்,⁾ 9⁽தண்ணீர் மணம் பட்டதும் அது துளிர்க்கும்;␢ இளஞ்செடிபோல் கிளைகள் விடும்.⁾ 10⁽ஆனால், மனிதர் மடிகின்றனர்;␢ மண்ணில் மறைகின்றனர்;␢ உயிர் போனபின் எங்கே அவர்கள்?⁾ 11⁽ஏரியில் தண்ணீர் இல்லாது போம்;␢ ஆறும் வறண்டு காய்ந்துபோம்.⁾ 12⁽மனிதர் படுப்பர்; எழுந்திருக்கமாட்டார்;␢ வானங்கள் அழியும்வரை␢ அவர்கள் எழுவதில்லை;␢ அவர்கள் துயிலிலிருந்து எழுப்பப்படுவதில்லை.⁾ 13⁽ஓ! என்னைப் பாதாளத்தில்␢ ஒளித்து வைக்கமாட்டீரா?␢ உமது சீற்றம் தணியும்வரை␢ மறைத்து வைக்கமாட்டீரா?␢ என்னை நினைக்க ஒருநேரம்␢ குறிக்கமாட்டீரா?⁾ 14⁽மனிதர் மாண்டால், மறுபடியும் வாழ்வரா?␢ எனக்கு விடிவு வரும்வரை,␢ என் போராட்ட நாள்களெல்லாம்␢ பொறுத்திருப்பேன்.⁾ 15⁽நீர் அழைப்பீர்; உமக்கு நான் பதிலளிப்பேன்;␢ உம் கைவினையாம் என்னைக்␢ காண விழைவீர்.⁾ 16⁽அப்பொழுது, என் காலடிகளைக்␢ கணக்கிடுவீர்;␢ என் தீமைகளைத் துருவிப் பார்க்கமாட்டீர்.⁾ 17⁽என் மீறுதலைப் பையிலிட்டு முத்திரையிட்டீர்;␢ என் குற்றத்தை மூடி மறைத்தீர்.⁾ 18⁽ஆனால் மலை விழுந்து நொறுங்கும்;ம்␢ பாறையும் தன் இடம்விட்டுப் பெயரும்.⁾ 19⁽கற்களைத் தண்ணீர் தேய்த்துக் கரைக்கும்;␢ நிலத்தின் மண்ணை வெள்ளம்␢ அடித்துப்போகும்; இவ்வாறே␢ ஒரு மனிதனின் நம்பிக்கையை அழிப்பீர்.⁾ 20⁽ஒடுக்குவீர் அவனை எப்பொழுதும்;␢ ஒழிந்துபோவான் அவனும்;␢ அவனது முகத்தை உருக்குலைத்து,␢ விரட்டியடிப்பீர்.⁾ 21⁽புதல்வர்கள் புகழ்பெறினும்␢ அவன் அறிந்தான் இல்லை; கதியிழந்தாலும்␢ அதை அவன் கண்டான் இல்லை.⁾ 22⁽அவன் உணர்வது தன் ஊனின் வலியையே;␢ அவன் புலம்புவது தன் பொருட்டே.⁾