1⁽தூண்டிலால் லிவியத்தனைத்␢ தூக்கிடுவாயோ? கயிற்றினால்␢ அதன் நாக்கினைக் கட்டிடுவாயோ?⁾
2⁽அதன் மூக்கிற்குச் கயிறு இட␢ உன்னால் முடியுமோ? அதன் தாடையில்␢ கொக்கியினால் குத்த முடியுமோ?⁾
3⁽வேண்டுகோள் பல␢ அது உன்னிடம் விடுக்குமோ?␢ கனிவாக உன்னிடம் கெஞ்சுமோ?⁾
4⁽என்றும் உனக்கு ஏவல்புரிய␢ உன்னுடன் அது␢ உடன்படிக்கை செய்யுமோ?⁾
5⁽பறவைபோல் துள்ளி அதனுடன்␢ ஆடுவாயா? உம் மகளிர்க்கென␢ அதனைக் கட்டிவைப்பாயா?⁾
6⁽மீனவர் குழுவினர்␢ அதன்மேல் பேரம் பேசுவார்களோ?␢ அவர்கள் வணிகரிடையே␢ அதைக் கூறுபோடுவார்களோ?⁾
7⁽கூரிய முட்களால் அதன் தோலையும்␢ மீன் எறி வேல்களால் அதன் தலையையும்␢ குத்தி நிரப்புவாயோ?⁾
8⁽உன் கையை அதன்மேல் வைத்துப்பார்;␢ எழும் போராட்டத்தை மறக்கமாட்டாய்.␢ மீண்டும் அதைச் செய்ய மாட்டோம்.⁾
9⁽இதோ! தொடுவோர் நம்பிக்கை␢ தொலைந்துபோம்; அதனைக் கண்டாலே␢ ஒருவர் கதிகலங்குவார்.⁾
10⁽அதை எழுப்பும் வீரம் எவருக்கும் இல்லை;␢ பின்பு அதன்முன் நிற்கத் துணிபவர் யார்?⁾
11⁽அதனை எதிர்த்து உயிரோடிருந்தவர்␢ எவராவது உண்டோ?␢ விண்ணகத்தின்கீழ்␢ அப்படிப்பட்டவர் யாருமில்லை!⁾
12⁽அதன் உறுப்புகள், அதன் ஆற்றல்␢ அதன் அமைப்பின் அழகு␢ அனைத்தையும் பற்றி␢ அறிவிக்காது விடேன்.⁾
13⁽அதன் மேல்தோலை உரிப்பவர் யார்?␢ அதன் தாடை இரண்டுக்குமிடையே␢ நுழைபவர் யார்?⁾
14⁽அதன் முகத்தில் வாயிலைத் திறப்பவன் யார்?␢ அதன் பற்களைச் சூழ்ந்து பேரச்சமே உள்ளது.⁾
15⁽அதன் முதுகு கேடய வரிசையாம்;␢ நெருங்க மூடி முத்திரை இடப்பட்டதாம்.⁾
16⁽ஒன்றோடு ஒன்று ஒட்டி உள்ளது.␢ காற்றும் அதனிடையே கடந்திடாது;⁾
17⁽ஒன்றோடு ஒன்றாய் இணைந்துள்ளன;␢ பிரிக்கமுடியாதவாறு␢ ஒன்றாய்ப் பிடித்துள்ளன.⁾
18⁽துலங்கும் மின்னல் அதன் தும்மல்;␢ வைகறை இமைகள் அதன் கண்கள்.⁾
19⁽அதன் வாயினின்று புறப்படுவது தீப்பிழம்பு;␢ அங்கிருந்து பறப்பது நெருப்புப் பொறிகளே.⁾
20⁽நாணல் நெருப்புக்␢ கொதிகலனின்று வருவதுபோல்␢ அதன் நாசியினின்று புகை கிளம்பும்.⁾
21⁽அதன் மூச்சு கரிகளைப் பற்றவைக்கும்;␢ அதன் வாயினின்று தீப்பிழம்பு கிளம்பிவரும்.⁾
22⁽அதன் கழுத்தில் வலிமை வதிகின்றது;␢ நடுக்கம் அதன்முன் துள்ளியாடுகின்றது.⁾
23⁽அதன் தசைமடிப்புகள் ஒட்டியிருக்கும்;␢ கெட்டியாயிருக்கும் அவற்றை␢ அசைக்க ஒண்ணாது.⁾
24⁽அதன் நெஞ்சம் கல்லைப்போல்␢ கடினமானது;␢ திரிகையின் அடிக்கல்போல்␢ திண்மையானது.⁾
25⁽அது எழும்பொழுதே␢ தெய்வங்கள் அஞ்சுகின்றன;␢ அது அறையவரும்போதே␢ நிலைகுலைகின்றன.⁾
26⁽வாள் அதைத் தாக்கிடினும், ஊடுருவாது;␢ ஈட்டியோ அம்போ, எறிவேலோ␢ உட்செல்லாது.⁾
27⁽இரும்பை அது துரும்பெனக் கருதும்;␢ வெண்கலத்தை உளுத்த கட்டையெனக்␢ கொள்ளும்.⁾
28⁽வில்வீரன் அதை விரட்ட முடியாது;␢ கவண் கல்லும் கூளம்போல் ஆகுமே.⁾
29⁽பெருந்தடியைத் தாளடி எனக்கருதும்;␢ எறிவேல் ஒலிகேட்டு எள்ளி நகைக்கும்.⁾
30⁽அதன் வயிற்றுப்புறம்␢ ஒட்டுத் துண்டுகளின் அடுக்கு;␢ அது சேற்றில் படுத்துக்கிடக்கையில்␢ பரம்புக் கட்டை.⁾
31⁽கொதிகலமென அது␢ கடலைப் பொங்கச் செய்யும்;␢ தைலச் சட்டியென அது␢ ஆழியைக் கொப்பளிக்கச் செய்யும்.⁾
32⁽அது போனபிறகு பாதை பளபளக்கும்;␢ கடலே நரைத்ததெனக் கருதத்தோன்றும்.⁾
33⁽அகிலத்தில் அதற்கு இணையானது இல்லை;␢ அச்சம் கொண்டிலாப் படைப்பு அதுவே.⁾
34⁽செருக்குற்ற படைப்பு␢ அனைத்தையும் ஏளனமாய் நோக்கும்;␢ வீறுகொண்ட விலங்குகட்கு␢ வேந்தனும் அதுவே.⁾