யோபு 7

முந்திய அடுத்த
1⁽மண்ணில் வாழ்வது␢ மனிதருக்குப் போரட்டந்தானே?␢ அவர்களின் நாள்கள் கூலியாள்களின்␢ நாள்களைப் போன்றவைதாமே?⁾ 2⁽நிழலுக்கு ஏங்கும் அடிமை போலவும்,␢ கூலிக்குக் காத்திருக்கும்␢ வேலையாள் போலவும்,⁾ 3⁽வெறுமையான திங்கள்கள்␢ எனக்கு வாய்த்தன;␢ இன்னல்மிகு இரவுகள் எனக்குப் பங்காயின.⁾ 4⁽படுக்கும்போது எப்போது எழலாம் என்பேன்!␢ இரவோ நீண்டிருக்கும்;␢ விடியும்வரை புரண்டு உழல்வேன்,⁾ 5⁽புழுவும் புழுதிப்படலமும் போர்த்தின␢ என் உடலை; வெடித்தது என் தோல்;␢ வடிந்தது சீழ்.⁾ 6⁽என் நாள்கள் தறியின் ஓடுகட்டையினும்␢ விரைந்தோடுகின்றன; அவை␢ நம்பிக்கையின்றி முடிவடைகின்றன.⁾ 7⁽என் உயிர் வெறுங்காற்றே என்பதை␢ நினைவுகூர்வீர்; என் கண்கள்␢ மீண்டும் நன்மையைக் காணா.⁾ 8⁽என்னைக் காணும் கண்␢ இனி என்னைப் பார்க்காது.␢ என் மேல் உம் கண்கள் இருக்கும்;␢ நானோ இரேன்.⁾ 9⁽கார்முகில் கலைந்து மறைவதுபோல்␢ பாதாளம் செல்வோர் ஏறி வாரார்.⁾ 10⁽இனி அவர்கள் தம் இல்லம் திரும்பார்;␢ அவர்களது இருப்பிடம்␢ அவர்களை அறியாது.⁾ 11⁽ஆகையால், நான் என் வாயை அடக்கமாட்டேன்;␢ என் மனத்தின் வேதனையை␢ எடுத்துரைப்பேன்;␢ உள்ளக் கசப்பில் முறையிடுவேன்.⁾ 12⁽கடலா நான்? அல்லது கடலின் பெருநாகமா?␢ காவல் என்மீது வைக்கலானீர்!⁾ 13⁽“என் படுக்கை ஆறுதல் அளிக்கும்;␢ என் மெத்தை முறையீட்டைத்␢ தணிக்கும்” என்பேனாகில்,⁾ 14⁽கனவுகளால் என்னைக்␢ கலங்க வைக்கின்றீர்;␢ காட்சிகளால் என்னைத்␢ திகிலடையச் செய்கின்றீர்.⁾ 15⁽ஆதலால் நான் குரல்வளை␢ நெரிக்கப்படுவதையும்␢ வேதனையைவிடச் சாவதையும்␢ விரும்புகின்றேன்.⁾ 16⁽வெறுத்துப்போயிற்று; என்றென்றும்␢ நான் வாழப்போவதில்லை;␢ என்னைவிட்டுவிடும். ஏனெனில்␢ என் வாழ்நாள்கள் காற்றுப்போன்றனவே.⁾ 17⁽மனிதர் எம்மாத்திரம், நீர் அவர்களை␢ ஒரு பொருட்டாய் எண்ண?␢ உமது இதயத்தை அவர்கள்மேல் வைக்க?⁾ 18⁽காலைதோறும் நீர் அவர்களைச் ஆய்ந்தறிய?␢ மணித்துளிதோறும் அவர்களைச் சோதிக்க?⁾ 19⁽எவ்வளவு காலம் என்மேல்␢ வைத்த கண்ணை எடுக்காதிருப்பீர்?␢ என் எச்சிலை விழுங்குமளவுக்குக் கூட␢ என்னை விடமாட்டீரா?⁾ 20⁽மானிடரின் காவலரே!␢ நான் பாவம் இழைத்துவிட்டேனா?␢ உமக்கு நான் செய்ததென்னவோ?␢ என்னை உம் இலக்காக ஆக்கியதேன்?␢ உமக்கு நான் சுமையாய்ப் போனதேன்?⁾ 21⁽என் மீறலை மன்னியாதது ஏன்?␢ என் அக்கிரமங்களை அகற்றாதது ஏன்?␢ இப்பொழுதோ நான் மண்ணுக்குள்␢ உறங்கப் போகின்றேன்;␢ நீர் என்னைத் தேடுவீர்; நான் இல்லாதுபோவேன்.⁾