யோபு 18

முந்திய அடுத்த
1⁽அதற்குச் சூகாவியனான பில்தாது␢ சொன்ன பதில்:⁾ 2⁽எப்பொழுது உமது சூழ்ச்சியுள்ள␢ சொற்பொழிவை முடிக்கப் போகிறீர்?␢ சிந்தித்திப் பாரும்; பின்னர் நாம் பேசுவோம்.⁾ 3⁽மாக்களாக நாங்கள் கருதப்படுவது ஏன்?␢ மதியீனர்களோ நாங்கள் உம் கண்களுக்கு?⁾ 4⁽சீற்றத்தில் உம்மையே நீர்␢ கீறிக்கொள்வதனால், உம்பொருட்டு␢ உலகம் கைவிடப்பட வேண்டுமா?␢ பாறையும் தன் இடம்விட்டு␢ நகர்த்தப்படவேண்டுமா?⁾ 5⁽தீயவரின் ஒளி அணைந்துபோம்;␢ அவர்களது தீக்கொழுந்து எரியாதுபோம்.⁾ 6⁽அவர்களின் கூடாரத்தில் ஒளி இருளாகும்;␢ அவர்கள்மீது ஒளிரும் விளக்கு␢ அணைந்துபோம்.⁾ 7⁽அவர்களின் பீடுநடை தளர்ந்துபோம்;␢ அவர்களின் திட்டமே␢ அவர்களைக் கவிழ்க்கும்.⁾ 8⁽அவர்களின் கால்களே␢ அவர்களை வலைக்குள் தள்ளும்;␢ அவர்கள் நடப்பதோ கண்ணிகள் நடுவில்தான்.⁾ 9⁽கண்ணி அவர்களின் குதிகாலைச்␢ சிக்கிப்பிடிக்கும்;␢ சுருக்கு அவர்களை மாட்டி இழுக்கும்.⁾ 10⁽மண்மீது அவர்களுக்குச் சுருக்கும்,␢ பாதையில் அவர்களுக்குப் பொறியும்␢ மறைந்துள்ளன.⁾ 11⁽எப்பக்கமும் திகில்␢ அவர்களை நடுங்க வைக்கும்;␢ கால் செல்லும் வழியில் துரத்தி விரட்டும்.⁾ 12⁽பட்டினி அவர்களின் வலிமையை␢ விழுங்கிடும்; தீங்கு அவர்களின்␢ வீழ்ச்சிக்குக் காத்திருக்கும்.⁾ 13⁽நோய் அவர்களின் தோலைத் தின்னும்;␢ சாவின் தலைப்பேறு␢ அவர்களின் உறுப்புகளை விழுங்கும்.⁾ 14⁽அவர்கள் நம்பியிருந்த கூடாரத்தினின்று␢ பிடுங்கப்படுவர்; அச்சம்தரும்␢ அரசன்முன் கொணரப்படுவர்.⁾ 15⁽அவர்களின் கூடாரங்களில் எதுவும் தங்காது;␢ அவர்களின் உறைவிடங்களில்␢ கந்தகம் தூவப்படுகின்றது.⁾ 16⁽கீழே அவர்களின் வேர்கள் காய்ந்துபோம்;␢ மேலே அவர்களின் கிளைகள் பட்டுப்போம்.⁾ 17⁽அவர்களின் நினைவே அவனியில்␢ இல்லாதுபோம்; மண்ணின் முகத்தே␢ அவனுக்குப் பெயரே இல்லாது போம்.⁾ 18⁽ஒளியிலிருந்து இருளுக்குள்␢ அவர்கள் தள்ளப்படுவர்; உலகிலிருந்தே␢ அவர்கள் துரத்தப்படுவர்.⁾ 19⁽அவர்களின் இனத்தாரிடையே␢ அவர்களுக்கு வழிமரபும்␢ வழித்தோன்றலுமில்லை;␢ அவர்கள் வாழ்ந்த இடத்தில்␢ அவர்கள்வழி எஞ்சினோர் யாருமில்லை.⁾ 20⁽அவர்கள் கதி கண்டு திடுக்கிட்டது␢ மேற்றிசை; திகிலுற்றது கீழ்த்திசை.⁾ 21⁽கொடியவரின் குடியிருப்பெல்லாம்␢ இத்தகையதே; இறைவனை␢ அறியாதவரின் நிலையும் இதுவே.⁾