யோபு 40

முந்திய அடுத்த
1⁽பின்பு யோபைப் பார்த்து␢ ஆண்டவர் கூறினார்:⁾ 2⁽குற்றம் காண்பவன்,␢ எல்லாம் வல்லவரோடு வழக்காடுவானா?␢ கடவுளோடுவாதாடுபவன்␢ விடையளிக்கட்டும்.⁾ 3⁽யோபு ஆண்டவர்க்குக் கூறிய மறுமொழி:⁾ 4₍இதோ! எளியேன் யான்␢ இயம்புதற்குண்டோ? என் வாயைக்␢ கையால் பொத்திக் கொள்வேன்.₎ 5⁽ஒருமுறை பேசினேன்;␢ மறுமொழி உரையேன்; மீண்டும் பேசினேன்;␢ இனிப் பேசவேமாட்டேன்.⁾ 6⁽ஆண்டவர் சூறாவளியினின்று␢ யோபுக்கு அருளிய பதில்:⁾ 7⁽வீரனைப்போல்␢ இடையை இறுக்கிக் கட்டிக்கொள்;␢ வினவுவேன் உன்னிடம்;␢ விடையெனக்கு அளிப்பாய்.⁾ 8⁽என் தீர்ப்பிலேயே நீ குற்றம் காண்பாயா?␢ உன்னைச் சரியெனக் காட்ட␢ என்மீது குற்றம் சாட்டுவாயா?⁾ 9⁽இறைவனுக்கு உள்ளதுபோல்␢ உனக்குக் கையுண்டோ?␢ அவர்போன்று இடிக்குரலில் முழங்குவாயோ?⁾ 10⁽சீர் சிறப்பினால்␢ உன்னை அணி செய்துகொள்;␢ மேன்மையையும், மாண்பினையும்␢ உடுத்திக்கொள்.⁾ 11⁽கொட்டு உன் கோபப் பெருக்கை!␢ செருக்குற்ற ஒவ்வொருவரையும்␢ நோக்கிடு; தாழ்த்திடு!⁾ 12⁽செருக்குற்ற எல்லாரையும்␢ நோக்கிடு; வீழ்த்திடு! தீயோரை␢ அவர்கள் இடத்திலேயே மிதித்திடு!⁾ 13⁽புழுதியில் அவர்களை␢ ஒன்றாய்ப் புதைத்திடு!␢ காரிருளில் அவர் முகங்களை மூடிடு.⁾ 14⁽அப்பொழுது, உனது வலக்கை␢ உன்னைக் காக்குமென்று␢ நானே ஒத்துக்கொள்வேன்.⁾ 15⁽இதோ பார், உன்னைப் படைத்ததுபோல்␢ நான் உண்டாக்கிய பெகிமோத்து␢ காளைபோல் புல்லைத் தின்கின்றது.⁾ 16⁽இதோ காண்,␢ அதன் ஆற்றல் அதன் இடுப்பில்;␢ அதன் வலிமை வயிற்றுத் தசைநாரில்.⁾ 17⁽அது தன் வாலைக்␢ கேதுருமரம்போல் விரைக்கும்;␢ அதன் தொடை நரம்புகள்␢ கயிறுபோல் இறுகியிருக்கும்;⁾ 18⁽அதன் எலும்புகள், வெண்கலக் குழாய்கள்;␢ அதன் உறுப்புகள் உருக்குக் கம்பிகள்.⁾ 19⁽இறைவனின் படைப்புகளில்␢ தலையாயது அதுவே! படைத்தவரே␢ அதைப் பட்டயத்துடன் நெருக்க முடியும்.⁾ 20⁽மலைகள் அதற்குப்␢ புற்பூண்டுகளை விளைவிக்கின்றன;␢ விலங்குகள் எல்லாம்␢ விளையாடுவதும் அங்கேதான்.⁾ 21⁽அது நிழற்செடிக்கு அடியிலும்␢ நாணல் மறைவிலும் உளைச் சேற்றிலும்␢ படுத்துக் கிடக்கும்.⁾ 22⁽அச்செடி தன் நிழலால் அதை மறைக்கும்;␢ ஓடையின் அலரி அதைச் சூழ்ந்து நிற்கும்.⁾ 23⁽ஆறு புரண்டோடினும் அது மிரண்டோடாது;␢ அதன் முகத்தே யோர்தான் மோதினும்␢ அசைவுறாது.⁾ 24⁽அதன் கண்காண அதனைக்␢ கட்டமுடியுமோ? கொக்கியால்␢ அதன் மூக்கைத் துளைக்க முடியுமோ?⁾