1இதன்பிறகு யோபு வாய்திறந்து, தாம் பிறந்த நாளைப் பழிக்கத் தொடங்கினார்.
2யோபு கூறியது:
3⁽“ஒழிக நான் பிறந்த அந்த நாளே!␢ ஓர் ஆண்மகவு கருவுற்றதெனச்␢ சொல்லிய அந்த இரவே!⁾
4⁽அந்த நாள் இருளாகட்டும்;␢ மேலிருந்து கடவுள் அதை␢ நோக்காதிருக்கட்டும்; ஒளியும்␢ அதன்மேல் வீசாதிருக்கட்டும்.⁾
5⁽காரிருளும் சாவிருட்டும்␢ அதைக் கவ்விக்கொள்ளட்டும்;␢ கார்முகில் அதனை மூடிக் கொள்ளட்டும்;␢ பகலை இருளாக்குபவை␢ அதனை அச்சுறுத்தட்டும்.⁾
6⁽அவ்விரவைக் பேயிருட்டு பிடிப்பதாக!␢ ஆண்டின் நாள்கணக்கினின்று␢ அது அகற்றப்படுவதாக!␢ திங்கள் எண்ணிக்கையிலும்␢ அது சேரா தொழிக!⁾
7⁽அவ்விரவு வெறுமையுற்றுப் பாழாகட்டும்;␢ மகிழ்ச்சியொலி ஒன்றும்␢ அதில் எழாதிருக்கட்டும்;⁾
8⁽பகலைப் பழிப்போரும்␢ லிவியத்தானைக் தூண்டி எழுப்புவோரும்␢ அதனைப் பழிக்கட்டும்.⁾
9⁽அதன் விடியற்காலை விண்மீன்கள்␢ இருண்டு போகட்டும்;␢ அது விடியலொளிக்குக் காத்திருக்க␢ அதுவும் இல்லாமற்போகட்டும்;␢ அது வைகறையின் கண்விழிப்பைக்␢ காணாதிருக்கட்டும்.⁾
10⁽ஏனெனில் என் தாயின் கருப்பையை␢ அவ்விரவு அடைக்காமற்போயிற்றே!␢ என் கண்களினின்று வேதனையை␢ அது மறைக்காமற் போயிற்றே!⁾
11⁽கருப்பையிலேயே நான் இறந்திருக்கலாகாதா?␢ கருவறையினின்று வெளிப்பட்டவுடனே␢ நான் ஒழிந்திருக்கலாகாதா?⁾
12⁽என்னை ஏந்த முழங்கால்கள்␢ முன் வந்ததேன்?␢ நான் பாலுண்ண முலைகள் இருந்தேன்?⁾
13⁽இல்லாதிருந்திருந்தால்,␢ நான் வெறுமனே கிடந்து␢ துயில் கொண்டிருப்பேன்.⁾
14⁽பாழானவைகளைத்␢ தமக்குக் கட்டிக்கொண்ட␢ மாநிலத்து மன்னர்களோடும்␢ அமைச்சர்களோடும்⁾
15⁽அல்லது பொன்னை␢ மிகுதியிருக்கக் கொண்டு,␢ வெள்ளியால் தங்கள் இல்லங்களை நிரப்பின␢ உயர்குடி மக்களோடும்␢ நான் உறங்கியிருந்திருப்பேன்.⁾
16⁽அல்லது முழுமை பெறாக்␢ கருவைப் போலவும்␢ ஒளியைக் காணாக்␢ குழவியைப் போலவும் அழிந்திருப்பேன்.⁾
17⁽அங்குத் தீயவர் தீங்கு செய்வதை நிறுத்துவர்.␢ களைப்புற்றோரும் அங்கு இளைப்பாறுவர்.⁾
18⁽சிறைப்பட்டோர் அங்கு␢ நிம்மதியாகக் கூடியிருப்பர்;␢ ஒடுக்குவோரின் அதட்டலைக் கேளாதிருப்பர்.⁾
19⁽சிறியவரும் பெரியவரும் அங்கு இருப்பர்;␢ அடிமை தம் ஆண்டான் பிடியில் இரான்.⁾
20⁽உறுதுயர் உற்றோர்க்கு ஒளி தருவானேன்?␢ உள்ளம் கசந்தோர்க்கு␢ உயிர் கொடுப்பானேன்?⁾
21⁽சாவுக்கு அவர்கள் ஏங்குகிறார்கள்;␢ அதைப் புதையலினும் மேலாய்க்␢ கருதித் தேடுகிறார்கள்.␢ ஆனால் அதுவோ வந்த பாடில்லை.⁾
22⁽கல்லறை காணின் களிப்பெய்தி␢ அகமகிழ்வோர்க்கு,␢ வாழ்வு வழங்கப்படுவதேன்?⁾
23⁽எவருக்கு வழி மறைக்கப்பட்டுள்ளதோ,␢ எவரைச் சுற்றிலும் கடவுள்␢ தடைச்சுவர் எழுப்பியுள்ளாரோ,␢ அவருக்கு ஒளியால் என்ன பயன்?⁾
24⁽பெருமூச்சு எனக்கு உணவாயிற்று;␢ வேதனைக்கதறல் வெள்ளமாய் ஓடிற்று.⁾
25⁽ஏனெனில் நான் அஞ்சியது எதுவோ?␢ அதுவே எனக்கு நேர்ந்தது;␢ திகிலுற்றது எதுவோ␢ அதுவே என்மேல் விழுந்தது.⁾
26⁽எனக்கு நிம்மதி இல்லை; ஓய்வு இல்லை;␢ அமைதி இல்லை; அல்லலே வந்துற்றது.”⁾