யோபு 6

முந்திய அடுத்த
1யோபு கூறிய பதிலுரையாவது: 2⁽ஓ! என் வேதனைகள்␢ உண்மையாகவே நிறுக்கப்பட்டு,␢ என் இன்னல்கள் அனைத்தும்␢ சீர்தூக்கப்படுமானால் நலமாயிருக்குமே!⁾ 3⁽கடற்கரை மணலிலும் இப்போது அவை␢ கனமானவை; பதற்றமான என்␢ சொற்களுக்குக் காரணமும் அதுவே;⁾ 4⁽எல்லாம் வல்லவரின் அம்புகள்␢ என்னில் தைத்துள்ளன; அவற்றின் நஞ்சு␢ என் உயிரைக் குடிக்கின்றது;␢ கடவுளின் அச்சுறுத்தல்கள்␢ எனக்கெதிராய் அணிவகுத்துள்ளன.⁾ 5⁽காட்டுக் கழுதைக்குப் புல் இருக்க,␢ அது கனைக்குமா?␢ காளைக்குத் தீனி இருக்க, அது கத்துமா?⁾ 6⁽சுவையற்றது உப்பின்றி உண்ணப்படுமா?␢ துப்பும் எச்சிலில் சுவை இருக்குமா?⁾ 7⁽அவற்றைத் தொட என் நெஞ்சம் மறுக்கிறது;␢ அவை எனக்கு அருவருப்புத்தரும் உணவாமே!⁾ 8⁽ஓ! என் வேண்டுதலுக்கு அருள்பவர் யார்?␢ நான் ஏங்குவதை␢ இறைவன் ஈந்திடமாட்டாரா?⁾ 9⁽அவர் என்னை நசுக்கிவிடக்கூடாதா?␢ தம் கையை நீட்டி எனைத் துண்டித்திடலாகாதா?⁾ 10⁽அதுவே எனக்கு ஆறுதலாகும்;␢ அழிக்கும் அல்லலிலும் அகமகிழ்வேன்;␢ தொடரும் துயரிலும் துள்ளி மகிழ்வேன்;␢ ஏனெனில் தூயவரின் சொற்களை␢ மறுத்தேனில்லை.⁾ 11⁽நான் இன்னும் பொறுத்திருக்க வலிமை ஏது?␢ என நெஞ்சம் காத்திருக்க நோக்கமேது?⁾ 12⁽என் வலிமை கல்லின் வலிமையோ?␢ என் சதை வெண்கலத்தாலானதோ?⁾ 13⁽இதோ! என்னில் உதவி ஏதுமில்லை;␢ என்னிலிருந்து உரம் நீக்கப்பட்டது.⁾ 14⁽அடுத்திருப்போர்க்கு கனிவு காட்டாதோர்␢ எல்லாம் வல்லவரையே புறக்கணிப்போர்.⁾ 15⁽காய்ந்துவிடும் காட்டாற்றுக்␢ கண்ணிகள் போலும் சிற்றாறுகள்போலும்␢ வஞ்சினத்தனர் என் உறவின் முறையார்.⁾ 16⁽அவற்றில் பனிக்கட்டி உருகிச் செல்லும்;␢ அவற்றின் மேற்பகுதியை␢ உறைபனி மூடி நிற்கும்.⁾ 17⁽வெப்பக் காலத்திலோ அவை␢ உருகி மறைந்துபோம்; வெயில் காலத்திலோ␢ அவை இடந்தெரியாது ஒழியும்.⁾ 18⁽வணிகர் கூட்டம் தம் வழியை மாற்றுகின்றது;␢ பாலையில் அலைந்து தொலைந்து மடிகின்றது.⁾ 19⁽தேடி நிற்கின்றனர் தேமாவின் வணிகர்;␢ நாடி நிற்கின்றனர் சேபாவின் வழிப்போக்கர்.⁾ 20⁽அவர்கள் நம்பியிருந்தனர்;␢ ஆனால், ஏமாற்றமடைகின்றனர்;␢ அங்கு வந்தடைந்தனர்;␢ ஆனால் திகைத்துப் போகின்றனர்.⁾ 21⁽இப்போது நீங்களும் எனக்கு␢ அவ்வாறே ஆனீர்கள்;␢ என் அவலம் கண்டீர்கள்;␢ அஞ்சி நடுங்குகின்றீர்கள்.⁾ 22⁽எனக்கு அன்பளிப்புத் தாரும் என்றோ,␢ உம் செல்வத்திலிருந்து␢ என் பொருட்டுக் கையூட்டுக் கொடும்␢ என்றோ சொன்னதுண்டா?⁾ 23⁽எதிரியின் கையினின்று␢ என்னைக் காப்பாற்றும் என்றோ,␢ கொடியவர் பிடியினின்று␢ என்னை மீட்டருளும் என்றோ␢ நான் எப்போதுதாவது வேண்டியதுண்டா?⁾ 24⁽அறிவு புகட்டுக! அமைதியடைவேன்;␢ என்ன தவறிழைத்தேன்? எடுத்துக்காட்டுக!⁾ 25⁽நேர்மையான சொற்கள்␢ எத்துணை ஆற்றலுள்ளவை? ஆனால்,␢ நீர் மெய்ப்பிப்பது எதை மெய்ப்பிக்கிறது?⁾ 26⁽என் வார்த்தைகளைக் கண்டிக்க␢ எண்ணலாமா? புலம்புவோரின்␢ சொற்கள் காற்றுக்கு நிகராமா?⁾ 27⁽திக்கற்றோர் மீது சீட்டுப் போடுவீர்கள்;␢ நண்பர்மீதும் பேரம் பேசுவீர்கள்.⁾ 28⁽பரிவாக இப்பொழுது என்னைப் பாருங்கள்;␢ உங்கள் முகத்திற்கெதிரே␢ உண்மையில் பொய் சொல்லேன்,⁾ 29⁽போதும் நிறுத்துங்கள்;␢ அநீதி செய்ய வேண்டாம்!␢ பொறுங்கள்! நீதி இன்னும் என் பக்கமே;⁾ 30⁽என் நாவில் அநீதி உள்ளதா? என்␢ அண்ணம் சுவையானதைப் பிரித்துணராதா?⁾