1⁽இதோ! இவை என் கண்களே கண்டவை;␢ என் காதுகளே கேட்டு உணர்ந்தவை.⁾
2⁽நீங்கள் அறிந்திருப்பதை␢ நானும் அறிந்திருக்கின்றேன்;␢ நான் உங்களுக்கு␢ எதிலும் இளைத்தவன் இல்லை.⁾
3⁽ஆனால் நான் எல்லாம் வல்லவரோடு␢ சொல்லாடுவேன்;␢ கடவுளோடு வழக்காட விழைகின்றேன்,⁾
4⁽நீங்களோ பொய்யினால் மழுப்புகின்றவர்கள்;␢ நீங்கள் எல்லாருமே பயனற்ற மருத்துவர்கள்.⁾
5⁽ஐயோ! பேசாது␢ அனைவரும் அமைதியாக இருங்கள்;␢ அதுவே உங்களுக்கு ஞானமாகும்.⁾
6⁽இப்பொழுது என் வழக்கினைக் கேளுங்கள்;␢ என் இதழின் முறையீட்டைக் கவனியுங்கள்.⁾
7⁽இறைவன் பொருட்டு␢ முறைகேடாய்ப் பேசுவீர்களா?␢ அவர்பொருட்டு வஞ்சகமாய்ப் பேசுவீர்களா?⁾
8⁽கடவுள் பொருட்டு␢ ஒரு சார்பாகப் பேசுவீர்களா? அல்லது␢ அவர்க்காக வாதாடுவீர்களா?⁾
9⁽அவர் உங்களை ஆராய்ந்தால்␢ உங்களில் நல்லதைக் காண்பாரா?␢ அல்லது மனிதரை வஞ்சிப்பதுபோல,␢ அவரையும் வஞ்சிப்பீர்களா?⁾
10⁽நீங்கள் மறைவாக ஓரவஞ்சனை காட்டினால்␢ உங்களை உறுதியாக அவர் கண்டிப்பார்.⁾
11⁽அவருடைய மாட்சி உங்களை மருளவைக்காதா?␢ அவருடைய அச்சுறுத்தல்␢ உங்கள் மீது விழாதா?⁾
12⁽உங்களுடைய மூதுரைகள்␢ சாம்பலையொத்த முதுமொழிகள்;␢ உங்கள் எதிர்வாதங்கள் உண்மையில்␢ களிமண்ணையொத்த வாதங்கள்.⁾
13⁽பேசாதிருங்கள்; என்னைப் பேசவிடுங்கள்;␢ எனக்கு எது வந்தாலும் வரட்டும்.⁾
14⁽என் சதையை என் பற்களிடையே␢ ஏன் வைத்துக்கொள்ளவேண்டும்?␢ என் உயிரை என் கைகளால்␢ ஏன் பிடித்துக்கொள்ளவேண்டும்?⁾
15⁽அவர் என்னைக்␢ கொன்றாலும் கொல்லட்டும்;␢ இருப்பினும், என் வழிகள் குற்றமற்றவை என␢ எடுத்துரைப்பதில் நான் தளரேன்.⁾
16⁽இதுவே எனக்கு மீட்பு ஆகலாம்;␢ ஏனெனில், இறைப்பற்றில்லாதார்␢ அவர்முன் வர முடியாது.⁾
17⁽என் வார்த்தையைக் கவனித்துக்கேளுங்கள்;␢ என் கூற்று உங்கள் செவிகளில் ஏறட்டும்.⁾
18⁽இதோ! இப்பொழுது என் வழக்கை␢ வகைப்படுத்தி வைத்தேன்;␢ குற்றமற்றவன் என␢ மெய்ப்பிக்கப்படுவேன் என்று அறிவேன்.⁾
19⁽இறைவா! நீர்தாமோ␢ எனக்கெதிராய் வழக்காடுவது?␢ அவ்வாறாயின், இப்போதே␢ வாய்பொத்தி உயிர் நீப்பேன்.⁾
20⁽எனக்கு இரண்டு␢ செயல்களை மட்டும் செய்யும்;␢ அப்போது உமது முகத்திலிருந்து␢ ஒளியமாட்டேன்.⁾
21⁽உமது கையை␢ என்னிடமிருந்து எடுத்துவிடும்;␢ உம்மைப்பற்றிய திகில்␢ என்னைக் கலங்கடிக்காதிருக்கட்டும்.⁾
22⁽பின்னர் என்னைக் கூப்பிடும்;␢ நான் விடையளிப்பேன்;␢ அல்லது என்னைப் பேசவிடும்;␢ பின் நீர் மறுமொழி அருளும்.⁾
23⁽என்னுடைய குற்றங்கள், தீமைகள் எத்தனை?␢ என் மீறுதலையும் தீமையையும்␢ எனக்குணர்த்தும்.⁾
24⁽உம் முகத்தை ஏன் மறைக்கின்றீர்?␢ பகைவனாய் என்னை ஏன் கருதுகின்றீர்?⁾
25⁽காற்றடித்த சருகைப்␢ பறக்கடிப்பீரோ?␢ காய்ந்த கூளத்தைக் கடிது விரட்டுவீரோ?⁾
26⁽கசப்பானவற்றை␢ எனக்கெதிராய் எழுதுகின்றீர்;␢ என் இளமையின் குற்றங்களை␢ எனக்கு உடைமையாக்குகின்றீர்.⁾
27⁽என் கால்களைத் தொழுவில் மாட்டினீர்;␢ கண் வைத்தீர் என் பாதை எல்லாம்;␢ காலடிக்கு எல்லை குறித்துக்␢ குழிதோண்டினீர்.⁾
28⁽மனிதர் உளுத்தமரம்போல்␢ விழுந்து விடுகின்றனர்; அந்துப்பூச்சி␢ அரிக்கும் ஆடைபோல் ஆகின்றனர்.⁾