யோபு 29

முந்திய அடுத்த
1⁽யோபு இன்னும் தொடர்ந்து␢ பேசிய உரை:⁾ 2⁽காண்பேனா முன்னைய திங்கள்களை;␢ கடவுள் என்னைக் கண்காணித்த நாள்களை!⁾ 3⁽அப்போது அவர் விளக்கு␢ என் தலைமீது ஒளிவீசிற்று;␢ அவரது ஒளியால் இருளில் நான் நடந்தேன்.⁾ 4⁽அப்போது என் இளமையின் நாள்களில்␢ நான் இருந்தேன்; கடவுளின் கருணை␢ என் குடிசை மீது இருந்தது.⁾ 5⁽அன்று வல்லவர் என்னோடு இருந்தார்;␢ என் மக்கள் என்னைச் சூழ்ந்திருந்தனர்.⁾ 6⁽அப்போது என் காலடிகள் நெய்யில் குளித்தன;␢ பாறையிலிருந்து எனக்கு எண்ணெய் ஆறாய்ப் பாய்ந்தது.⁾ 7⁽நகர வாயிலுக்கு நான் செல்கையிலும்,␢ பொது மன்றத்தில்␢ என் இருக்கையில் அமர்கையிலும்,⁾ 8⁽என்னைக் கண்டதும்␢ இளைஞர் ஒதுங்கிக்கொள்வர்;␢ முதிர்ந்த வயதினர் எழுந்து நிற்பர்.⁾ 9⁽உயர்குடி மக்கள் தம் பேச்சை நிறுத்துவர்;␢ கைகட்டி, வாய்பொத்தி வாளாவிருப்பர்.⁾ 10⁽தலைவர்தம் குரல் அடங்கிப்போம்;␢ அவர் நா அண்ணத்தோடு ஒட்டிக்கொள்ளும்.⁾ 11⁽என்னைக் கேட்ட செவி,␢ என்னை வாழ்த்தியது;␢ என்னைப் பார்த்த கண்␢ எனக்குச் சான்று பகர்ந்தது.⁾ 12⁽ஏனெனில், கதறிய ஏழைகளை␢ நான் காப்பாற்றினேன்;␢ தந்தை இல்லார்க்கு உதவினேன்.⁾ 13⁽அழிய இருந்தோர் எனக்கு ஆசி வழங்கினர்;␢ கைம்பெண்டிர்தம் உள்ளத்தைக்␢ களிப்பால் பாடச் செய்தேன்.⁾ 14⁽அறத்தை அணிந்தேன்;␢ அது என் ஆடையாயிற்று.␢ நீதி எனக்கு மேலாடையும் பாகையும் ஆயிற்று.⁾ 15⁽பார்வையற்றோர்க்குக் கண் ஆனேன்;␢ காலூனமுற்றோர்க்குக் கால் ஆனேன்.⁾ 16⁽ஏழைகளுக்கு நான் தந்தையாக இருந்தேன்;␢ அறிமுகமற்றோரின் வழக்குகளுக்காக␢ வாதிட்டேன்.⁾ 17⁽கொடியவரின் பற்களை உடைத்தேன்;␢ அவரின் பற்களுக்கு இரையானவரை␢ விடுவித்தேன்.⁾ 18⁽நான் எண்ணினேன்;␢ ‘மணல் மணியைப்போல்␢ நிறைந்த நாள் உடையவனாய்␢ என் இல்லத்தில் சாவேன்.⁾ 19⁽என் வேர் நீர்வரை ஓடிப் பரவும்;␢ இரவெல்லாம் என் கிளையில் பனி இறங்கும்.⁾ 20⁽என் புகழ் என்றும் ஓங்கும்;␢ என் வில் வளைதிறன் கொண்டது.’⁾ 21⁽எனக்குச் செவிகொடுக்க␢ மக்கள் காத்திருந்தனர்;␢ என் அறிவுரைக்காக அமைதி காத்தனர்.⁾ 22⁽என் சொல்லுக்கு மறுசொல்␢ அவர்கள் கூறவில்லை;␢ என் மொழிகள் அவர்களில் தங்கின.⁾ 23⁽மழைக்கென அவர்கள்␢ எனக்காய்க் காத்திருந்தனர்;␢ மாரிக்கெனத் தங்கள் வாயைத் திறந்தனர்.⁾ 24⁽நம்பிக்கை இழந்தோரை␢ என் புன்முறவல் தேற்றியது;␢ என் முகப்பொலிவு உரமூட்டியது.⁾ 25⁽நானே அவர்களுக்கு வழியைக் காட்டினேன்;␢ தலைவனாய்த் திகழ்ந்தேன்;␢ வீரர் நடுவே வேந்தனைப்போல் வாழ்ந்தேன்;␢ அழுகின்றவர்க்கு␢ ஆறுதல் அளிப்பவன் போல் இருந்தேன்.⁾