1⁽மண்ணுலகை ஆள்பவர்களே,␢ நீதியின்மேல் அன்பு செலுத்துங்கள்;␢ நன்மனத்துடன் ஆண்டவரைப் பற்றி␢ நினைந்திடுங்கள்;␢ நேர்மையான உள்ளத்துடன்␢ அவரைத் தேடுங்கள்.⁾
2⁽அவரைச் சோதியாதோர்␢ அவரைக் கண்டடைகின்றனர்;␢ அவரை நம்பினோர்க்கு␢ அவர் தம்மை வெளிப்படுத்துகின்றார்.⁾
3⁽நெறிகெட்ட எண்ணம் மனிதரைக்␢ கடவுளிடமிருந்து பிரித்துவிடும்.␢ அவரது ஆற்றல் சோதிக்கப்படும் பொழுது,␢ அது அறிவிலிகளை␢ அடையாளம் காட்டிவிடும்.⁾
4⁽வஞ்சனை நிறைந்த ஆன்மாவில்␢ ஞானம் நுழைவதில்லை;␢ பாவத்திற்கு அடிமையான உடலில்␢ ஞானம் குடிகொள்வதில்லை.⁾
5⁽நற்பயிற்சி பெற்ற உள்ளம்␢ வஞ்சனையினின்று விலகியோடும்;␢ அறிவற்ற எண்ணங்களை விட்டு அகலும்;␢ அநீதி அணுகுகையில்␢ அது நாணி ஒதுங்கும்.⁾
6⁽ஞானம் மனிதநேயமுள்ள ஆவி;␢ ஆயினும் இறைவனைப் பழிப்போரை␢ அது தண்டியாமல் விடாது.␢ கடவுள் அவர்களுடைய␢ உள்ளுணர்வுகளின் சாட்சி;␢ உள்ளத்தை உள்ளவாறு␢ உற்று நோக்குபவர்;␢ நாவின் சொற்களைக்␢ கேட்பவரும் அவரே.⁾
7⁽ஆண்டவரின் ஆவி␢ உலகை நிரப்பியுள்ளது;␢ அனைத்தையும் ஒருங்கிணைக்கும்␢ அந்த ஆவி␢ ஒவ்வொரு சொல்லையும் அறிகின்றது.⁾
8⁽நேர்மையற்றதைப் பேசுவோர்␢ மறைந்திருக்க முடியாது;␢ தண்டனை வேளையில்␢ நீதியினின்று தப்பமுடியாது.⁾
9⁽இறைப்பற்றில்லாதோரின் சூழ்ச்சிகள்␢ நுணுகி ஆராயப்படும்;␢ அவர்களுடைய சொற்கள்␢ ஆண்டவரின் காதுக்கு எட்டும்;␢ அவர்களுடைய நெறிகெட்ட செயல்கள்␢ கண்டிக்கப்படும்.⁾
10⁽விழிப்புடைய காது␢ அனைத்தையும் கேட்கின்றது.␢ முறையீடுகளின் முணுமுணுப்பு␢ செவிக்கு எட்டாமல் போவதில்லை.⁾
11⁽பயனற்ற முணுமுணுப்புப்பற்றி␢ எச்சரிக்கையாக இருங்கள்;␢ பழிச்சொல் கூறாது␢ உங்கள் நாவை அடக்குங்கள்.␢ ஏனெனில் மறைவாய்ப் பேசிய எதுவும்␢ விளைவின்றிப் போகாது.␢ பொய் சொல்லும் வாய்␢ ஆன்மாவைக் கொல்லும்.⁾
12⁽நெறிதவறிய வாழ்வால்␢ சாவை வரவேற்றுக்கொள்ளாதீர்கள்;␢ உங்கள் செயல்களாலேயே␢ அழிவை வருவித்துக்கொள்ளாதீர்கள்.⁾
13⁽சாவைக் கடவுள் உண்டாக்கவில்லை;␢ வாழ்வோரின் அழிவில்␢ அவர் மகிழ்வதில்லை.⁾
14⁽இருக்கவேண்டும் என்பதற்காகவே␢ அவர் அனைத்தையும் படைத்தார்.␢ உலகின் உயிர்கள் யாவும்␢ நலம் பயப்பவை;␢ அழிவைத் தரும் நஞ்சு எதுவும்␢ அவற்றில் இல்லை;␢ கீழுலகின் ஆட்சி மண்ணுலகில் இல்லை.⁾
15⁽நீதிக்கு இறப்பு என்பது இல்லை.⁾
16⁽இறைப்பற்றில்லாதவர்கள்␢ தங்கள் செயலாலும் சொல்லாலும்§இறப்பை வரவழைத்தார்கள்;␢ அதை நண்பனாகக் கருதி␢ அதற்காக ஏங்கினார்கள்;␢ அதனோடு␢ ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்;␢ அதனோடு தோழமை கொள்ள␢ அவர்கள் பொருத்தமானவர்களே.⁾