சாலமோனின் ஞானம் 12

முந்திய அடுத்த
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19
1⁽உம்முடைய அழியா ஆவி␢ எல்லாவற்றிலும் உள்ளது.⁾ 2⁽ஆகையால், தவறு செய்பவர்களைச்␢ சிறிது சிறிதாய்ச் திருத்துகின்றீர்;␢ அவர்கள் எவற்றால் பாவம்␢ செய்கிறார்களோ␢ அவற்றை நினைவுபடுத்தி␢ அவர்களை எச்சரிக்கின்றீர்;␢ ஆண்டவரே,␢ அவர்கள் தீமையிலிருந்து விடுபடவும்␢ உம்மேல் நம்பிக்கை கொள்ளவுமே␢ இவ்வாறு செய்கின்றீர்.⁾ 3⁽உமது திருநாட்டில்␢ பண்டுதொட்டே வாழ்ந்து␢ வந்தோரின்⁾ 4⁽அருவருப்புக்குரிய நடத்தை,␢ மந்திரவாதச் செயல்கள்,␢ நெறிகெட்ட வழிபாட்டுமுறைகள்␢ ஆகியவற்றுக்காக அவர்களை␢ வெறுத்தீர்.⁾ 5⁽இரக்கமின்றிக்␢ குழந்தைகளைக் கொலைசெய்தோர்,␢ மனித சதையையும் குருதியையும்␢ பலிவிருந்தாக உண்டோர்.␢ வேற்றின வழிபாட்டுச் சடங்குகளில்␢ புகுமுகம் செய்யப்பட்டோர்.⁾ 6⁽தற்காப்பற்ற தங்கள் பிள்ளைகளைக்␢ கொலைசெய்த பெற்றோர் ஆகியோரை␢ எங்கள் மூதாதையரின் கைகளால்␢ அழிக்கத் திருவுளங்கொண்டீர்.⁾ 7⁽நாடுகளிலெல்லாம்␢ நீர் மிகுதியாக மதிக்கின்ற நாடு␢ கடவுளின் மக்கள் குடியேறுவதற்குத்␢ தகுதியாகும்படி இவ்வாறு செய்தீர்.⁾ 8⁽இருப்பினும்,␢ அவர்களும் மனிதர்களே என்பதால்␢ அவர்களை விட்டு வைத்தீர்;␢ உம் படைகளின் முன்னோடிகளாக␢ மலைக்குளவிகளை அனுப்பி வைத்தீர்;␢ இவ்வாறு அவர்களைச்␢ சிறிது சிறிதாக அழித்தீர்.⁾ 9⁽ஏனெனில்␢ இறைப்பற்றில்லாதவர்களைப்␢ போர்க்களத்தில் நீதிமான்களின்␢ கையில் ஒப்படைப்பதும்,␢ கொடிய காட்டு விலங்குகளாலோ,␢ ஒரு கடுஞ்சொல்லாலோ␢ ஒரே நொடியில் அழிப்பதும்␢ உம்மால் இயலாத செயலன்று.⁾ 10⁽அவர்கள்␢ தீய தலைமுறையினர் என்பதும்,␢ தீமை அவர்களது இயல்போடு␢ இணைந்துவிட்டது என்பதும்,␢ அவர்களது சிந்தனை முறை␢ ஒருபோதும் மாறாது என்பதும்␢ உமக்குத் தெரியாதனவல்ல.␢ இருப்பினும் நீர் அவர்களைச்␢ சிறிதுசிறிதாய்த் தண்டித்து,␢ மனந்திரும்ப அவர்களுக்கு␢ வாய்ப்புக் கொடுத்தீர்.⁾ 11⁽அவர்கள் ஆதிமுதலே சாபத்துக்கு␢ உட்பட்ட வழிமரபினர்.␢ அவர்களுடைய பாவங்களை நீர்␢ தண்டியாமல் விட்டீர்.␢ எவருக்கும் அஞ்சி நீர்␢ அவ்வாறு செயல்படவில்லை.⁾ 12⁽“நீர் என்ன செய்தீர்?”␢ என்று கேட்பவர் யார்?␢ உமது நீதித்தீர்ப்பை எதிர்ப்பவர் யார்?␢ நீர் உண்டாக்கிய மக்களினத்தாரின்␢ அழிவுபற்றி உம்மீது குற்றம்␢ சுமத்துபவர் யார்?␢ நீதியற்றோரை நீர் பழிவாங்கும்போது,␢ அவர்கள் சார்பாக உம் திருமுன்␢ பரிந்துரைப்பவர் யார்?⁾ 13⁽ஏனெனில் உம்மைத் தவிர␢ வேறு கடவுள் இல்லை.␢ எல்லாவற்றின்மீதும்␢ நீர் கருத்தாய் இருக்கிறீர்.␢ முறைகேடாக நீர்␢ தீர்ப்பு வழங்குவதில்லை␢ என்பதை யாரிடம் காட்டவேண்டும்?⁾ 14⁽நீர் தண்டித்தவர்கள் சார்பாக␢ உம்மை எதிர்த்து நிற்க␢ எந்த மன்னராலும் தலைவராலும்␢ முடியாது.⁾ 15⁽நீர் நேர்மையுள்ளவர்;␢ அனைத்தையும் நீதியோடு␢ ஆண்டுவருகின்றீர்.␢ தண்டிக்கத்தகாதவர்களைத்␢ தண்டிப்பது␢ உமது ஆற்றலுக்கு அப்பாற்பட்டது␢ என நீர் அறிவீர்.⁾ 16⁽உமது ஆற்றலே நீதியின் ஊற்று.␢ அனைத்தின்மீதும்␢ உமக்குள்ள ஆட்சியுரிமை␢ அனைத்தையும் வாழும்படி␢ விட்டு வைக்கிறது.⁾ 17⁽மனிதர்கள் உமது␢ வலிமையின் நிறைவை␢ ஐயுறும்போது␢ நீர் உம்முடைய ஆற்றலைக்␢ காட்டுகிறீர்;␢ அதை அறிந்திருந்தும்␢ செருக்குற்றிருப்போரை அடக்குகிறீர்.⁾ 18⁽நீர் ஆற்றல் மிக்கவராய் இருப்பதால்␢ கனிவோடு தீர்ப்பு வழங்குகிறீர்;␢ மிகுந்த பொறுமையோடு␢ எங்களை ஆள்கிறீர்.␢ ஏனெனில் நீர் விரும்பும்போதெல்லாம்␢ செயல்புரிய உமக்கு வலிமை உண்டு.⁾ 19⁽நீதிமான்கள்␢ மனிதநேயம் கொண்டவர்களாக␢ இருக்கவேண்டும் என்பதை␢ இச்செயல்கள் வாயிலாக␢ உம் மக்களுக்குக் கற்றுக் கொடுத்தீர்;␢ உம் மக்களை␢ நன்னம்பிக்கையால் நிரப்பினீர்;␢ ஏனெனில் பாவங்களிலிருந்து␢ மனமாற்றம் அருள்கிறீர்.⁾ 20⁽உம் ஊழியர்களின் பகைவர்கள்␢ சாவுக்குரியவர்களாய் இருந்தும்,␢ மிகுந்த கனிவோடும் இரக்கத்தோடும்␢ அவர்களைத் தண்டித்தீர்;␢ அவர்கள் தங்கள் தீச்செயல்களை␢ விட்டுவிடும் பொருட்டு,␢ காலமும் வாய்ப்பும்␢ அவர்களுக்குக் கொடுத்தீர்.⁾ 21⁽உம் மக்களுக்கு␢ நீர் எவ்வளவோ கண்டிப்போடு␢ தீர்ப்பு வழங்கினீர்!␢ அவர்களுடைய மூதாதையர்களுக்கு␢ நல்ல வாக்குறுதிகள் நிறைந்த␢ ஆணைகளையும் உடன்படிக்கைகளையும்␢ அளித்தீரன்றோ!⁾ 22⁽நீர் எங்களை␢ நல்வழிப்படுத்தக் கண்டிக்கிறீர்;␢ எங்கள் பகைவர்களையோ␢ பத்தாயிரம் மடங்கு மிகுதியாகத்␢ தண்டிக்கிறீர்.␢ நாங்கள் தீர்ப்பு வழங்கும்போது␢ உமது நன்மையை நினைவுகூரவும்,␢ நாங்களே தீர்ப்புக் உள்ளாகும்போது␢ உமது இரக்கத்தை எதிர் பார்க்கவும்␢ இவ்வாறு செய்கிறீர்.⁾ 23⁽அறிவின்மையிலும் நீதியின்மையிலும்␢ வாழ்க்கை நடத்தியவர்களை␢ அவர்களுடைய அருவருக்கத்தக்க␢ செயல்களாலேயே தண்டீத்தீர்.⁾ 24⁽அவர்கள் தவறான வழியல்␢ நெடுந்தொலை சென்றுவிட்டார்கள்;␢ விலங்குகளுக்குள்ளேயே␢ மிகவும் அருவருக்கத்தக்கவற்றைத்␢ தெய்வங்களாகக் கொண்டார்கள்;␢ அறிவில்லாக் குழந்தைகள்போல்␢ ஏமாந்து போனார்கள்.⁾ 25⁽எனவே அறிவுத்தெளிவு பெறாத␢ குழந்தைகளை ஏளனம் செய்வதுபோல்␢ அவர்களை ஏளனம் செய்ய␢ உமது தீர்ப்பை அனுப்பினீர்.⁾ 26⁽இத்தகைய சிறு கண்டிப்புகளினின்று␢ வரும் எச்சரிக்கைகளுக்குச்␢ செவிசாய்க்காதவர்கள்␢ கடவுளின் தக்க தண்டனைத்␢ தீர்ப்புக்கு உள்ளாக நேரிடும்.⁾ 27⁽அவர்கள் எந்தப் படைப்புகளைத்␢ தெய்வங்களாகக் கருதினார்களோ␢ அவற்றாலேயே தண்டிக்கப்பட்டார்கள்;␢ ஆகையால் துன்புற்று எரிச்சலுற்றார்கள்;␢ தாங்கள் ஒரு காலத்தில்␢ ஏற்றுக்கொள்ள மறுத்தவரையே␢ இப்பொழுது உண்மையான கடவுள்␢ என்று அறிந்து ஏற்றுக்கொண்டார்கள்.␢ எனவே மிகக் கடுந்தண்டனை␢ அவர்கள்மேல் வந்து விழுந்தது.⁾