1⁽கடவுளை அறியாத மனிதர்␢ அனைவரும் இயல்பிலேயே␢ அறிவிலிகள் ஆனார்கள்.␢ கண்ணுக்குப் புலப்படும்␢ நல்லவற்றினின்று␢ இருப்பவரைக் கண்டறிய␢ முடியாதோர் ஆனார்கள்.␢ கைவினைகளைக்␢ கருத்தாய் நோக்கியிருந்தும்␢ கைவினைஞரை அவர்கள்␢ கண்டு கொள்ளவில்லை.⁾
2⁽மாறாக, தீயோ, காற்றோ,␢ சூறாவளியோ,␢ விண்மீன்களின் சுழற்சியோ,␢ அலைமோதும் வெள்ளமோ,␢ வானத்தின் சுடர்களோதாம்␢ உலகை ஆளுகின்ற தெய்வங்கள்␢ என்று அவர்கள் கருதினார்கள்.⁾
3⁽அவற்றின் அழகில் மயங்கி␢ அவற்றை அவர்கள்␢ தெய்வங்களாகக்␢ கொண்டார்கள் என்றால்,␢ அவற்றிற்கெல்லாம் ஆண்டவர்␢ அவற்றினும் எத்துணை மேலானவர்␢ என அறிந்துகொள்ளட்டும்;␢ ஏனெனில் அழகின்␢ தலையூற்றாகிய கடவுளே␢ அவற்றை உண்டாக்கினார்.⁾
4⁽அவற்றின் ஆற்றலையும்␢ செயல்பாட்டையும் கண்டு␢ அவர்கள் வியந்தார்கள் என்றால்,␢ அவற்றையெல்லாம் உருவாக்கியவர்␢ அவற்றைவிட எத்துணை␢ வலிமையுள்ளவர் என்பதை␢ அவற்றிலிருந்து அறிந்து கொள்ளட்டும்.⁾
5⁽ஏனெனில் படைப்புகளின்␢ பெருமையினின்றும் அழகினின்றும்␢ அவற்றைப் படைத்தவரை␢ ஒப்புநோக்கிக் கண்டுணரலாம்.⁾
6⁽இருப்பினும், இம்மனிதர்கள்␢ சிறிதளவே குற்றச்சாட்டுக்கு␢ உரியவர்கள். ஏனெனில்␢ கடவுளைத் தேடும்போதும்␢ அவரைக் கண்டடைய␢ விரும்பும்போதும்␢ ஒருவேளை அவர்கள் தவறக்கூடும்.⁾
7⁽அவருடைய␢ வேலைப்பாடுகளின் நடுவே␢ வாழும்பொழுது␢ கடவுளை அவர்கள்␢ தேடிக்கொண்டிருக்கின்றார்கள்.␢ தாங்கள் காண்பதையே␢ நம்பிவிடுகின்றார்கள்;␢ ஏனெனில் அவை அழகாக உள்ளன.⁾
8⁽இருப்பினும், அவர்களுக்கும்␢ மன்னிப்பே கிடையாது;⁾
9⁽உலகை ஆராய்ந்தறியும் அளவுக்கு␢ ஆற்றல் அவர்களுக்கு இருந்த␢ போதிலும், இவற்றுக்கெல்லாம்␢ ஆண்டவரை␢ இன்னும் மிக விரைவில்␢ அறியத் தவறியது ஏன்?⁾
10⁽ஆனால் பொன், வெள்ளியால்␢ திறமையாக உருவாக்கப்பட்டவையும்,␢ விலங்குகளின் சாயலாய்ச்␢ செய்யப்பட்டவையுமான␢ மனிதக் கைவேலைப்பாடுகளையோ␢ பண்டைக் காலக் கைவேலைப்பாடாகிய␢ பயனற்றக் கல்லையோ␢ தெய்வங்கள் என்று அழைத்தவர்கள்␢ இரங்கத் தக்கவர்கள்;␢ செத்துப் போனவற்றின்மீது␢ அவர்கள் நம்பிக்கை வைக்கிறார்கள்.⁾
11⁽திறமையுள்ள தச்சர் ஒருவர்␢ எளிதில் கையாளக்கூடிய␢ மரம் ஒன்றை வெட்டுகிறார்;␢ அதன் மேற்பட்டைகளையெல்லாம்␢ நன்றாக உரிக்கிறார்;␢ பிறகு அதைக் கொண்டு␢ வாழ்வின் தேவைகளுக்குப்␢ பயன்படும் ஒரு பொருளைச்␢ சிறந்த வேலைப்பாடுகளுடன் செய்கிறார்.⁾
12⁽வேலைக்குப் பயன்படாத␢ மரக்கழிவுகளை எரித்து,␢ உணவு தயாரித்து,␢ வயிறார உண்கிறார்.⁾
13⁽ஆயினும் அவற்றுள் எஞ்சியதும்,␢ ஒன்றுக்கும் உதவாததும்,␢ கோணலும் மூட்டுமுடிச்சுகளும்␢ நிறைந்ததுமான ஒரு மரத்துண்டை␢ அவர் எடுத்து, ஓய்வு நேரத்தில்␢ அதைக் கருத்தாய்ச் செதுக்கி,␢ கலைத்திறனோடு அதை இழைத்து,␢ மனிதரின் சாயலில்␢ அதை உருவாக்குகிறார்.⁾
14⁽அல்லது ஒரு பயனற்ற␢ விலங்கின் உருவத்ததைச் செய்து,␢ செந்நிறக் கலவையால் அதைப் பூசி,␢ அதன் மேற்பரப்பில் உள்ள␢ சிறு பள்ளங்களை␢ அவர் சிவப்பு வண்ணம் பூசி␢ மறைக்கிறார்.⁾
15⁽அதற்குத் தகுந்ததொரு␢ மாடம் செய்து,␢ அதைச் சுவரில் ஆணியால்␢ பொருத்தி,␢ அதில் சிலையை வைக்கிறார்;⁾
16⁽தனக்குத்தானே␢ உதவி செய்ய முடியாது␢ என்பதை அறிந்து,␢ அது விழாதபடி பார்த்துக்␢ கொள்கிறார்; ஏனெனில்␢ அது வெறும் சிலைதான்;␢ அதற்கு உதவி தேவை.⁾
17⁽அவர் தம்முடைய உடைமைகளுக்காகவும்␢ திருமணத்துக்காகவும்␢ குழந்தைகளுக்காகவும்␢ வேண்டும்போது␢ உயிரற்ற ஒரு சிலையுடன்␢ பேச வெட்கப்படுவதில்லை;␢ வலிமையற்ற ஒன்றிடம்␢ உடல்நலத்திற்காக வேண்டுகிறார்.⁾
18⁽செத்துப்போன ஒன்றிடம்␢ வாழ்வுக்காக மன்றாடுகிறார்;␢ பட்டறிவு இல்லாத ஒன்றிடம்␢ உதவி கேட்கிறார்; ஓர் அடிகூட␢ எடுத்து வைக்கமுடியாத ஒன்றிடம்␢ நல்ல பயணத்திற்காக இறைஞ்சுகிறார்.⁾
19⁽பொருள் ஈட்டலிலும் அலுவலிலும்␢ செயல்பாட்டிலும் வெற்றி தரும்படி␢ வலுவற்ற ஒன்றிடம் அவர் வேண்டுகிறார்.⁾