1⁽தூய இறைவாக்கினர்␢ ஒருவரின் வாயிலாக␢ இஸ்ரயேலர்களுடைய செயல்களை␢ ஞானம் சிறப்புறச் செய்தது.⁾
2⁽குடியிருப்பாரற்ற பாழ்வெளி வழியாக␢ அவர்கள் பயணம் செய்தார்கள்;␢ மனித நடமாட்டமற்ற இடங்களில்␢ தங்கள் கூடாரங்களை␢ அமைத்தார்கள்.⁾
3⁽தங்கள் பகைவர்களை␢ எதிர்த்து நின்றார்கள்;␢ போரிட்டு எதிரிகளைத்␢ துரத்தினார்கள்.⁾
4⁽இஸ்ரயேலர்களுக்குத்␢ தாகம் எடுத்தபோது␢ உம்மை மன்றாடினார்கள்.␢ உடனே செங்குத்தான␢ பாறைகளிலிருந்து␢ தண்ணீர் வழிந்தோடியது.␢ கடினமான பாறையிலிருந்து␢ அவர்கள் தாகத்தைத்␢ தணித்துக் கொண்டார்கள்.⁾
5⁽எவற்றால் பகைவர்கள்␢ தண்டிக்கப்பட்டார்களோ␢ அவற்றாலேயே சிக்கலான␢ நேரங்களில் இஸ்ரயேலர்␢ நன்மை அடைந்தார்கள்.⁾
6❮6-7❯⁽குழந்தைகளைக் கொல்லவேண்டும்␢ என்று எதிரிகள் பிறப்பித்திருந்த␢ ஆணையைக் கண்டிக்க,␢ வற்றாத ஊற்றிலிருந்து ஓடும்␢ ஆற்று நீருக்கு மாறாக,␢ குருதியால் கலங்கி மாசுபட்ட நீரை␢ அவர்களுக்குக் கொடுத்தீர்;␢ இஸ்ரயேலருக்கோ␢ எதிர்பாரா வகையில்␢ மிகுதியான தண்ணீர் வழங்கினீர்.⁾
7Same as above
8⁽அவர்களுடைய பகைவரை␢ எவ்வாறு தண்டித்தீர் என்பதை␢ அவ்வேளையில் அவர்களை␢ வாட்டிய தாகத்தால் காட்டினீர்.⁾
9⁽இஸ்ரயேலர் சோதிக்கப்பட்ட பொழுது␢ இரக்கத்தால்␢ பயிற்றுவிக்கப்பட்டனர் என்றும்,␢ கடவுள் சினம்கொண்டு␢ தீர்ப்பளிக்கும்பொழுது␢ இறைப்பற்றில்லாதவர்கள்␢ எவ்வாறு வதைக்கப்படுவார்கள்␢ என்றும் இதன் வாயிலாக␢ அவர்கள் புரிந்துகொண்டார்கள்.⁾
10⁽ஏனெனில்␢ ஒரு தந்தை எச்சரிப்பதுபோல,␢ நீர் இஸ்ரயேலரைச் சோதித்தீர்.␢ ஆனால் இரக்கமற்ற மன்னர்␢ தீர்ப்பு அளிப்பதுபோல,␢ நீர் எதிரிகளைக் கூர்ந்து␢ சோதித்துப் பார்த்தீர்.⁾
11⁽இஸ்ரயேலர்களுக்கு␢ அருகில் இருந்தபோதும்,␢ தொலைவில் இருந்தபோதும்,␢ எகிப்தியர்கள் பெருந்துயருற்றார்கள்.⁾
12⁽இருமடங்கு துயரம்␢ அவர்களை ஆட்கொண்டது.␢ கடந்த கால நிகழ்ச்சிகளை நினைத்து,␢ ஏங்கிப் பெருமூச்சு விட்டார்கள்.⁾
13⁽தங்களுக்கு வந்துற்ற␢ தண்டனைகளால் நீதிமான்கள்␢ நன்மை அடைந்தார்கள் என்று␢ எகிப்தியர்கள் கேள்வியுற்றபோது,␢ அது ஆண்டவரின் செயல் என்று␢ உணர்ந்து கொண்டார்கள்.⁾
14⁽எவரை முன்னொரு காலத்தில்␢ குழந்தையாக இருந்தபோது␢ அவர்கள் வெளியே எறிந்தார்களோ,␢ எவரை நகைத்துப் புறக்கணித்தார்களோ,␢ அவரைக் குறித்தே நிகழ்ச்சிகளின்␢ முடிவில் வியப்புற்றார்கள்.␢ ஏனெனில், நீதிமான்கள்␢ கண்டிராத தாகத்தை எதிரிகள்␢ கொண்டிருந்தார்கள்.⁾
15⁽எகிப்தியர்கள்␢ பகுத்தறிவற்ற பாம்புகளையும்␢ பயனற்ற விலங்குகளையும்␢ வணங்கினார்கள்.␢ இவ்வாறு நெறி தவறத் தூண்டிய␢ அவர்களுடைய அறிவற்ற தீய␢ எண்ணங்களுக்காக அவர்களைப்␢ பழிவாங்கும் பொருட்டு,␢ பகுத்தறிவில்லா␢ உயிரினங்களின் கூட்டத்தை␢ அவர்கள்மீது நீர் ஏவி விட்டீர்.⁾
16⁽ஒருவர் எதனால்␢ பாவம் செய்கிறாரோ␢ அதனாலேயே அழிந்து போவார்␢ என்பதை இதனால்␢ அவர்களுக்கு அறிவுறுத்தினீர்.⁾
17⁽ஏனெனில் உருவமற்ற␢ பருப்பொருளைக் கொண்டு␢ உலகைப் படைத்த எல்லாம் வல்ல␢ உமது கைவன்மைக்கு␢ கரடிகளின் கூட்டத்தையோ␢ துணிவுள்ள சிங்கங்களையோ␢ அவர்கள்மிது அனுப்பி வைப்பது␢ முடியாததன்று.⁾
18⁽புதிதாகப் படைக்கப்பட்ட␢ முன்பின் பார்த்திராத,␢ சீற்றம் நிறைந்த␢ காட்டு விலங்குகளையோ,␢ வெப்ப மூச்சுவிடும் விலங்குகளையோ,␢ ஏப்பமாக அடர்ந்த புகைப்படலத்தை␢ வெளியிடும் விலங்குகளையோ,␢ கண்களில் தீப்பொறி பறக்கும்␢ விலங்குகளையோ,␢ அவர்கள்மீது அனுப்பி வைப்பது␢ உம் கைவன்மைக்கு இயலாததன்று.⁾
19⁽அவை மனிதர்களைத் தாக்கி␢ முற்றிலும் அழித்துவிடக் கூடியவை␢ மட்டுமல்ல,␢ தங்கள் தோற்றத்தாலேயே␢ அவர்களை அச்சுறுத்திக்␢ கொன்றுவிடக்கூடியவை.⁾
20⁽இவை இன்றியே மனிதர்கள்␢ ஒரே மூச்சினால்␢ வீழ்த்தப்பட்டிருப்பார்கள்.␢ நீதியால் துரத்தப்பட்டு,␢ உமது ஆற்றலின் மூச்சினால்␢ சிதறடிக்கப்பட்டிருப்பார்கள்.␢ ஆயினும் நீர் அனைத்தையும்␢ அளவோடும் கணக்கோடும்␢ நிறையோடும் ஏற்பாடு செய்தீர்.⁾
21⁽உமது மாபெரும் ஆற்றலை␢ எப்போது நீர் காட்ட இயலும்.␢ உமது கைவன்மையை␢ எதிர்த்து நிற்க எவரால் இயலும்?⁾
22⁽தராசில் மிக நுண்ணிய␢ எடை வேறுபாடு காட்டும்␢ தூசிபோலவும் நிலத்தின் மீது விழும்␢ காலைப்பனியின்␢ ஒரு சிறு துளி போலவும்␢ உலகம் முழுவதும்␢ உம் கண்முன் உள்ளது.⁾
23⁽நீர் எல்லாம் வல்லவராய்␢ இருப்பதால்␢ எல்லார்மீதும் இரங்குகின்றீர்;␢ மனிதர்கள் தங்களுடைய␢ பாவங்களைவிட்டு மனந்திரும்பும்␢ பொருட்டே நீர் அவற்றைப்␢ பார்த்ததும் பாராமல் இருக்கின்றீர்.⁾
24⁽படைப்புகள் அனைத்தின்மீதும்␢ நீர் அன்புகூர்கிறீர்.␢ நீர் படைத்த எதையும்␢ வெறுப்பதில்லை.␢ ஏனெனில் நீர் எதையாவது␢ வெறுத்திருந்தால்␢ அதைப் படைத்திருக்கவே மாட்டீர்!⁾
25⁽உமது திருவுளமின்றி␢ எதுதான் நீடித்திருக்க முடியும்?␢ அல்லது, உம்மால்␢ உண்டாக்கப்படாதிருந்தால்␢ எதுதான் காப்பாற்றப்படக்கூடும்?⁾
26⁽ஆண்டவரே, உயிர்கள்மீது␢ அன்புகூர்கின்றவரே,␢ நீர் எல்லாவற்றையும்␢ வாழவிடுகின்றீர்;␢ ஏனெனில் அவை யாவும்␢ உம்முடையன.⁾