1⁽ஞானம் — ஒரு கோடி முதல்␢ மறு கோடிவரை␢ ஆற்றலோடு செல்கிறது;␢ எல்லாவற்றையும் முறையாக␢ ஒழுங்குபடுத்துகிறது.⁾
2⁽ஞானத்தின் மேல் நான் அன்பு கூர்ந்தேன்;␢ என் இளமைமுதல் அதைத் தேடினேன்;␢ என் வாழ்க்கைத் துணையாக␢ ஏற்றுக் கொள்ள விரும்பினேன்;␢ அதன் அழகில் மயங்கினேன்.⁾
3⁽கடவுளோடு ஒன்றுபட்ட வாழ்வினால்␢ ஞானம் தன் உயர்குடிப்பிறப்பில்␢ மேன்மை பாராட்டுகிறது.␢ அதனால் அனைத்துலகின் ஆண்டவர்␢ அதன்மேல் அன்புகூர்ந்தார்.⁾
4⁽ஞானமே கடவுளைப் பற்றிய மெய்யறிவுக்குப்␢ புகுமுகம் செய்து வைக்கிறது;␢ அவருடைய செயல்களைத்␢ தேர்வுசெய்வதும் அதுவே.⁾
5⁽வாழ்வில் விரும்பத்தக்க␢ உடைமையாகச்␢ செல்வம் விளங்குமாயின்,␢ அனைத்தையும் ஆக்கும்␢ ஞானத்தைவிடச்␢ சிறந்த செல்வம் ஏது?⁾
6⁽அறிவுத்திறன் ஆற்றல் மிக்கது␢ என்றால், ஞானத்தைவிட,␢ இருப்பவற்றை உருவாக்கும்␢ கலைஞன் வேறு யார்?⁾
7⁽ஒருவர் நீதியின்மேல்␢ அன்புகூர்கின்றாரோ?␢ ஞானத்தின் உழைப்பு அவரிடம்␢ நற்பண்புகளால் மிளிரும்.␢ ஏனெனில் தன்னடக்கம், விவேகம்,␢ நீதி, துணிவு ஆகியவற்றை␢ ஞானம் கற்பிக்கின்றது.␢ இவற்றைத் தவிர வாழ்வில்␢ மனிதருக்குப் பயனுள்ளவை␢ வேறு ஒன்றுமில்லை.⁾
8⁽ஒருவர் பரந்த பட்டறிவு␢ பெற ஏங்குகின்றாரோ?␢ ஞானம் இறந்த காலத்தை அறியும்;␢ எதிர்காலத்தை உய்த்துணரும்;␢ உரைகளின் நுட்பங்களையும்␢ புதிர்களின் விடைகளையும் அறியும்.␢ அடையாளங்களையும்␢ வியத்தகு செயல்களையும்␢ பருவங்கள், காலங்களின்␢ பயன்களையும் முன்னறியும்.⁾
9⁽ஆகையால் என்னோடு␢ கூடிவாழும் பொருட்டு␢ ஞானத்தைத் தேர்ந்தெடுக்க␢ முடிவு செய்தேன்;␢ ஏனெனில் நன்மை செய்ய␢ அது என்னை␢ ஆற்றுப்படுத்தும் என்றும்,␢ கவலைகளிலும் துயரத்திலும்␢ எனக்கு ஆறுதல் தரும்␢ என்றும் நான் அறிவேன்.⁾
10⁽அதை முன்னிட்டு␢ மக்கள் கூட்டத்தில்␢ நான் பெருமை பெறுவேன்;␢ இளைஞனாய் இருந்தாலும்␢ மூப்பர்களிடையே␢ நன்மதிப்பு அடைவேன்.⁾
11⁽நீதிவழங்கும்போது␢ அறிவுக்கூர்மையோடு␢ காணப்படுவேன்.␢ ஆள்வோர் என்னைக் கண்டு␢ வியப்புறுவர்.⁾
12⁽நான் பேசாமல் இருக்கும்பொழுது␢ நான் பேசும்படி␢ அவர்கள் காத்திருப்பார்கள்;␢ நான் பேசும்பொழுது␢ எனக்குச் செவிசாய்ப்பார்கள்;␢ நான் நீண்ட உரையாற்றும் பொழுது␢ வாயடைத்து நிற்பார்கள்.⁾
13⁽ஞானத்தினால் நான்␢ இறவாமை எய்துவேன்;␢ எனக்குப்பின் வருபவர்களுக்கு␢ என்றும் நீங்கா நினைவை␢ விட்டுச்செல்வேன்.⁾
14⁽நான் மக்கள்மீது␢ ஆட்சி செலுத்துவேன்;␢ நாடுகள் எனக்கு அடிபணியும்.⁾
15⁽அச்சுறுத்தும் மன்னர்கள்கூட␢ என்னைப்பற்றிக்␢ கேள்வியுற்று அஞ்சுவார்கள்.␢ மக்கள் நடுவில் நல்லவனாகவும்␢ போரில் வல்லவனாகவும் இருப்பேன்.⁾
16⁽நான் வீட்டிற்கு வந்தபின்␢ ஞானத்தோடு இளைப்பாறுவேன்.␢ ஏனெனில் அதன் தோழமையில்␢ கசப்பே இல்லை;␢ அதனோடு வாழ்வதில்␢ துன்பமே இல்லை.␢ அது தருவதெல்லாம்␢ இன்பமும் மகிழ்ச்சியுமே!⁾
17❮17-18❯⁽இவற்றைப்பற்றியயெல்லாம்␢ எனக்குள் எண்ணிப் பார்த்தபொழுது —␢ ஞானத்துடன் கொள்ளும் உறவால்␢ இறவாமை கிட்டும்;␢ அதனுடைய நட்புறவில்␢ தூய மகிழ்ச்சி பிறக்கும்;␢ அதனுடைய உழைப்பால்␢ குறைபடாத செல்வம் கொழிக்கும்;␢ அதன் தோழமையில்␢ பயிற்சி பெறுவதால்␢ அறிவுத்திறன் உண்டாகும்;␢ அதனோடு கலந்துரையாடுவதால்␢ பெரும்புகழ் கிடைக்கும்␢ என்றெல்லாம் என் உள்ளத்தில்␢ எண்ணிப் பார்த்த பொழுது —␢ அதை எனக்கென அடைவது␢ எப்படி என்று தேடி அலைந்தேன்.⁾
18Same as above
19⁽நான் குழந்தையாய்␢ இருந்த பொழுது␢ நல்லியல்புடன் இருந்தேன்.␢ நல்ல உள்ளம்␢ என் பங்காய் அமைந்தது.⁾
20⁽நல்லவனாய் இருந்ததால்␢ மாசற்ற உடலினுள் புகுந்தேன்.⁾
21⁽ஆனால், கடவுள் எனக்கு␢ ஞானத்தை ஈந்தாலொழிய␢ அதை அடைய முடியாது என்று␢ நான் உணர்ந்துகொண்டேன்.␢ அது யாருடைய கொடை என␢ அறிவது அறிவுத்திறனின்␢ அடையாளம். எனவே நான்␢ ஆண்டவரை வேண்டினேன்;␢ கெஞ்சி மன்றாடினேன்.␢ என் முழு உள்ளத்தோடு சொன்னேன்;⁾