சாலமோனின் ஞானம் 4

முந்திய அடுத்த
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19
1⁽ஒருவருக்கு மகப்பேறு இல்லாவிடினும்,␢ நற்பண்பு இருந்தால் அதுவே சிறந்தது;␢ நற்பண்பின் நினைவு␢ என்றும் அழியாதது;␢ அது கடவுளாலும் மனிதராலும்␢ கண்டுணரப்படும்.⁾ 2⁽அந்நினைவு␢ பசுமையாய் இருக்கும்பொழுது␢ மாந்தர் அதனைப் பின்பற்றி நடப்பர்;␢ அது நீங்கியதும் அதற்காக ஏங்குவர்.␢ மாசற்ற பரிசுகளுக்காக␢ நற்பண்பு போராடி,␢ வெற்றி வாகை சூடி,␢ காலமெல்லாம் பீடுநடை போடுகிறது.⁾ 3⁽இறைப்பற்றில்லாதவர்கள்␢ எண்ணற்ற பிள்ளைகளை␢ ஈன்றபோதிலும்␢ அவர்கள் தளிர்ப்பதில்லை;␢ மணவாழ்க்கைக்குப்␢ புறம்பே பிறந்த வழிமரபு␢ ஆழமாய் வேரூன்றுவதில்லை;␢ உறுதியாய் நிற்பதுமில்லை.⁾ 4⁽சிறிது காலம் அவர்கள்␢ கிளைவிட்டுச் செழித்தாலும்,␢ உறுதியற்றவர்களாய்க்␢ காற்றினால்␢ அலைக்கழிக்கப்படுவார்கள்;␢ காற்றின் சீற்றத்தால்␢ வேரோடு களைந்தெறியப்படுவார்கள்.⁾ 5⁽அவர்களுடைய கிளைகள்␢ வளர்ச்சி அடையுமுன்பே␢ முறிக்கப்படும்.␢ அவர்களுடைய கனிகள் பயனற்றவை;␢ உண்பதற்கு ஏற்ற அளவு␢ பழுக்காமையால்␢ அவை பாழாய்ப் போகும்.⁾ 6⁽முறைகேடாகப் பிறந்த பிள்ளைகளே␢ தீர்ப்பு நாளில்␢ தங்கள் பெற்றோரின்␢ கூடா ஒழுக்கத்திற்குச்␢ சாட்சிகளாய் இருப்பார்கள்.⁾ 7⁽நீதிமான்கள்␢ உரிய காலத்துக்கு முன் இறந்தாலும்,␢ இளைப்பாற்றி அடைவார்கள்.⁾ 8⁽முதுமையின் மதிப்பு␢ நீடிய வாழ்வினால் வருவதன்று;␢ ஆண்டுகளின் எண்ணிக்கை␢ அதற்கு அளவுகோலன்று.⁾ 9⁽ஞானமே மனிதர்க்கு␢ உண்மையான நரைதிரை;␢ குற்றமற்ற வாழ்க்கையே␢ உண்மையான பழுத்த முதுமை.⁾ 10⁽நீதிமான் ஒருவர்␢ இறைவனுக்கு ஏற்புடையவராகி,␢ அவருடைய அன்பைப் பெற்றார்;␢ பாவிகள் நடுவில்␢ வாழ்ந்து கொண்டிருந்தபொழுதே␢ அவரால் எடுத்துக் கொள்ளப்பெற்றார்.⁾ 11⁽தீமை அவரது அறிவுக்கூர்மையைத்␢ திசைதிருப்பாமல் இருக்கவும்,␢ வஞ்சகம் அவரது உள்ளத்தை␢ மாசுபடுத்தாமல் இருக்கவுமே␢ அவர் எடுத்துக்கொள்ளப்பெற்றார்.⁾ 12⁽தீமையின் கவர்ச்சி␢ நன்மையானவற்றை␢ மறைத்துவிடுகிறது;␢ அலைக்கழிக்கும் இச்சை␢ மாசற்ற மனத்தைக்␢ கெடுத்துவிடுகிறது.⁾ 13⁽அந்த நீதிமான் குறுகிய காலத்தில்␢ நிறைவு எய்தினார்;␢ நீண்டவாழ்வின் பயனை அடைந்தார்.⁾ 14⁽அவரது ஆன்மா ஆண்டவருக்கு␢ ஏற்புடையதாய் இருந்தது.␢ தீமை நடுவினின் று␢ ஆண்டவர் அவரை␢ விரைவில் எடுத்துக்கொண்டார்.⁾ 15⁽மக்கள் இதைப் பார்த்தார்கள்;␢ ஆனால் புரிந்துகொள்ளவில்லை.␢ ஆண்டவர்␢ தாம் தேர்ந்துகொண்டோர்மீது␢ அருளும் இரக்கமும் காட்டுகின்றார்;␢ தம் தூயவர்களைச் சந்தித்து␢ மீட்கிறார் என்பதை␢ அவர்கள் மனத்தில் ஏற்கவுமில்லை.⁾ 16⁽இறந்துபோன நீதிமான்கள்␢ உயிர் வாழ்கின்ற␢ இறைப்பற்றில்லாதவர்களைக்␢ கண்டனம் செய்வார்கள்;␢ விரைவில் பக்குவம் அடைந்த␢ இளைஞர்கள்␢ நீண்ட நாள் வாழும்␢ தீய முதியவர்களைக்␢ கண்டனம் செய்வார்கள்.⁾ 17⁽இறைப்பற்றில்லாதவர்கள்␢ ஞானிகளின் முடிவைக் காண்பார்கள்;␢ ஆனால், ஆண்டவர் அவர்களுக்காக␢ எத்தகைய திட்டம்␢ வகுத்துள்ளார் என்றும்␢ எந்த நோக்கத்திற்காக␢ அவர்களுக்குப் பாதுகாப்பு␢ அளித்துள்ளார் என்றும்␢ அறிந்துகொள்ளமாட்டார்கள்.⁾ 18⁽அவர்கள் ஞானிகளை கண்டு␢ ஏளனம் செய்வார்கள்.␢ ஆண்டவரோ அவர்களைப் பார்த்து␢ எள்ளி நகையாடுவார்.⁾ 19⁽ஏனெனில் இனி அவர்கள்␢ இழிந்த பிணம் ஆவார்கள்;␢ இறந்தோர் நடுவில் என்றென்றும்␢ அருவருப்புக்குரியோர் ஆவார்கள்.␢ ஆண்டவர் அவர்களைப்␢ பேச்சற்றுக் கீழே விழச் செய்வார்;␢ அடியோடு கலங்கவைப்பார்.␢ அவர்கள் முழுவதும்␢ அழித்தொழிக்கப்படுவார்கள்;␢ ஆழ்துயரில் மூழ்கடிக்கப்படுவார்கள்.␢ அவர்களின் நினைவுகூட␢ மறைந்துவிடும்.⁾ 20⁽இறைப்பற்றில்லாதவர்களின்␢ பாவங்களைக் கணக்கிடும்போது,␢ அவர்கள் நடுங்கிக்கொண்டு␢ வருவார்கள்;␢ அவர்களுடைய நெறிகெட்ட செயல்கள்␢ அவர்களுக்கு எதிராக நின்று␢ குற்றம்சாட்டும்.⁾