சாலமோனின் ஞானம் 15

முந்திய அடுத்த
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19
1⁽எங்கள் கடவுளே,␢ நீர் பரிவும் உண்மையும்␢ பொறுமையும் உள்ளவர்;␢ அனைத்தையும் இரக்கத்துடன்␢ ஆண்டுவருகின்றீர்.⁾ 2⁽நாங்கள் பாவம் செய்தாலும்␢ உம்முடையவர்களே;␢ ஏனெனில் உமது ஆற்றலை␢ அறிவோம்.␢ நாங்கள் இனிப் பாவம் செய்யமாட்டோம்;␢ ஏனெனில் உம்முடையவர்களாக␢ நீர் எங்களை எண்ணுவதை␢ நாங்கள் அறிவோம்.⁾ 3⁽உம்மை அறிதலே நிறைவான நீதி;␢ உமது ஆற்றலை அறிதலே␢ இறவாமைக்கு ஆணிவேர்.⁾ 4⁽தீய நோக்குடைய மனிதரின்␢ திறமைகள் எங்களைத்␢ திசைதிருப்பிவிடவில்லை;␢ ஓவியரின் பயனற்ற உழைப்பாகிய␢ பல வண்ணம் தீட்டிய உருவமும்␢ எங்களை ஏமாற்றிவிடவில்லை.⁾ 5⁽அறிவிலிகள் அவற்றின்மீது␢ பேராவல் கொள்ளுமாறு␢ அவற்றின் தோற்றமே␢ தூண்டி விடுகிறது.␢ அதனால் செத்துப்போன␢ சாயலின் உயிரற்ற உருவத்தை␢ அவர்கள் விரும்புகிறார்கள்.⁾ 6⁽அவற்றைச் செய்பவர்களும்␢ அவற்றின்மீது ஆவல்␢ கொள்பவர்களும்␢ அவற்றை வணங்குபவர்களும்␢ தீமையை விரும்புகிறார்கள்;␢ இத்தகைய சிலைகளில் அவர்கள்␢ நம்பிக்கைகொள்ளத் தகுந்தவர்களே.⁾ 7⁽குயவர்கள் வருந்தி உழைத்து,␢ மென்மையான களிமண்ணைப்␢ பிசைந்து, நம்முடைய தேவைக்காக␢ ஒவ்வொரு மண்கலத்தையும்␢ வனைகிறார்கள்;␢ ஒரே மண்ணைக் கொண்டுதான்␢ நல்ல வகையிலும்␢ மாறான வகையிலும்␢ பயன்படுகிற கலங்களைச்␢ செய்கிறார்கள்;␢ இவற்றில் ஒவ்வொன்றும் எவ்வகையில்␢ பயன்பட வேண்டும்␢ என்பதைக் குயவர்களே␢ முடிவு செய்கிறார்கள்.⁾ 8⁽வீணில் உழைத்து␢ அதே களிமண்ணால்␢ பயனற்ற தெய்வம் ஒன்றை␢ உருவாக்குகிறார்கள்.␢ ஆனால், அவர்களே␢ சிறிது காலத்திற்குமுன்␢ அதே மண்ணிலிருந்து␢ உருவாக்கப்பட்டவர்கள்;␢ சிறிது காலத்திற்குப்பின்,␢ தங்களுக்குக் கடனாகக்␢ கொடுக்கப்பட்ட ஆன்மாக்களைத்␢ திருப்பிக் கொடுக்க␢ வேண்டிய பொழுது,␢ அவர்கள் எந்த மண்ணிலிருந்து␢ எடுக்கப்பட்டிருந்தார்களோ␢ அந்த மண்ணுக்கே␢ திரும்பிப் போகிறார்கள்.⁾ 9⁽ஆனால், தாம் சாகவேண்டும்␢ என்பதைப் பற்றியோ␢ தம் வாழ்நாள் குறுகியது␢ என்பதைப்பற்றியோ␢ அவர்கள் கவலைப்படுவதில்லை.␢ மாறாக, பொன், வெள்ளியில்␢ வேலை செய்பவர்களுடன்␢ போட்டியிடுகிறார்கள்.␢ வெண்கலத்தில்␢ வேலை செய்கிறவர்களைப்போலச்␢ செய்ய முயல்கிறார்கள்;␢ போலித் தெய்வங்களின் சிலைகளைச்␢ செய்வதில் பெருமை கொள்கிறார்கள்.⁾ 10⁽அவர்களுடைய இதயம்␢ வெறும் சாம்பல்.␢ அவர்களது நம்பிக்கை␢ புழுதியிலும் கீழானது.␢ அவர்களது வாழ்க்கை␢ களிமண்ணினும் இழிவானது.⁾ 11⁽ஏனெனில் தங்களை␢ உருவாக்கியவரும்␢ தங்களுக்குள் ஆற்றல்மிக்க␢ ஆன்மாவைப் புகுத்தியவரும்␢ உயிர்மூச்சை ஊதியவரும் யார்␢ என்று அவர்கள் அறியவில்லை.⁾ 12⁽அவர்களோ நம் வாழ்க்கையை␢ ஒருவகை விளையாட்டாகவும்,␢ நம்முடைய வாழ்நாளைப்␢ பணம் சேர்க்கக்கூடிய␢ ஒரு திருவிழாச் சந்தையாகவும்␢ கருதுகிறார்கள்; ஏனெனில்␢ ஒருவர் எவ்வழியாலும் ஏன்,␢ தீய வழியாலுங்கூட,␢ பணம் சேர்க்கவேண்டும்␢ எனச் சொல்லிக் கொள்கிறார்கள்.⁾ 13⁽உடையக்கூடிய மண்கலங்களையும்␢ வார்ப்புச் சிலைகளையும்␢ அவர்கள் செய்யும்போது␢ தாங்கள் பாவம் செய்வதை␢ மற்றெல்லாரையும்விட␢ நன்றாக அறிந்திருக்கிறார்கள்.⁾ 14⁽உம் மக்களை ஒடுக்கிய␢ பகைவர்கள் அனைவரும்␢ மற்ற யாவரினும் அறிவிலிகள்;␢ சிறு குழந்தைகளைவிட␢ இரங்குதற்குரியவர்கள்.⁾ 15⁽ஏனெனில் வேற்றினத்தாரின்␢ சிலைகள் கண்களால் காணவோ,␢ மூக்கினால் மூச்சு விடவோ,␢ காதுகளால் கேட்கவோ,␢ விரல்களால் தொட்டுணரவோ,␢ கால்களால் நடக்கவோ␢ முடியாத போதிலும்␢ அவற்றையெல்லாம் தெய்வங்கள்␢ என்று இவர்கள் எண்ணினார்கள்.⁾ 16⁽அவற்றைச் செய்தவர்கள்␢ வெறும் மனிதர்களே;␢ அவற்றை உருவாக்கியவர்கள்␢ தங்களது உயிரைக்␢ கடனாகப் பெற்றவர்கள்.␢ ஆனால் தங்களுக்கு இணையான␢ ஒரு தெய்வத்தை எந்த மனிதரும்␢ உருவாக்க முடியாது.⁾ 17⁽அவர்களோ சாகக்கூடியவர்கள்.␢ நெறிகெட்ட தங்கள் கைகளால்␢ அவர்கள் செய்வது உயிரற்றதே!␢ தாங்கள் வணங்குகிற சிலைகளை விட␢ அவர்கள் மேலானவர்கள்;␢ ஏனெனில் அவர்களுக்கு உயிர் உண்டு;␢ அவற்றுக்கோ ஒருபோதும் உயிரில்லை.⁾ 18⁽மேலும், உம் மக்களின் பகைவர்கள்␢ மிகவும் அருவருப்பான␢ விலங்குகளைக் கூட வணங்குகிறார்கள்;␢ அறிவின்மையை வைத்து␢ ஒப்பிடும்போது,␢ இவை மற்றவற்றைவிடத் தாழ்ந்தவை.⁾ 19⁽விலங்குகள் என்னும் அளவில்கூட,␢ மனிதர்கள் விரும்பும் அழகு␢ அவற்றின் தோற்றத்தில் இல்லை.␢ இறைவன் தம் படைப்பைப் பாராட்டி␢ ஆசி வழங்கியபொழுது,␢ அவை ஒதுங்கிப் போய்விட்டன.⁾