1⁽“மூதாதையரின் கடவுளே,␢ இரக்கத்தின் ஆண்டவரே,␢ நீர் எல்லாவற்றையும்␢ உமது சொல்லால் உண்டாக்கினீர்.⁾
2⁽நீர் உண்டாக்கிய␢ படைப்புகளின் மேல்␢ ஆட்சி செலுத்தவும்,␢ தூய்மையோடும் நீதியோடும்␢ உலகை ஆளவும்,⁾
3⁽நேர்மையான உள்ளத்தோடு␢ தீர்ப்பு வழங்கவும்,␢ உமது ஞானத்தால்␢ மானிடரை உருவாக்கினீர்.⁾
4⁽உமது அரியணை அருகில்␢ வீற்றிருக்கும் ஞானத்தை␢ எனக்கு அருளும்;␢ உம் பிள்ளைகளிடமிருந்து␢ என்னைத் தள்ளிவிடாதீர்.⁾
5⁽நான் உம் அடியான்;␢ உம்முடைய அடியவளின் மகன்;␢ வலுவற்ற மனிதன்; குறுகிய வாழ்வினன்;␢ நீதித்தீர்ப்பும், திருச்சட்டமும்␢ பற்றிச் சிற்றறிவு படைத்தவன்.⁾
6⁽மன்பதையில் ஒருவர் எத்துணை␢ நிறைவு உள்ளவராய் இருந்தாலும்,␢ உம்மிடமிருந்து வரும் ஞானம்␢ அவருக்கு இல்லையேல்,␢ அவர் ஒன்றும் இல்லாதவராய்க்␢ கருதப்படுவார்.⁾
7⁽“உம் மக்களுக்கு மன்னராகவும்,␢ உம் புதல்வர் புதல்வியருக்கு␢ நடுவராகவும் இருக்க␢ நீர் என்னைத் தெரிந்தெடுத்தீர்.⁾
8⁽தொடக்கத்திலிருந்தே நீர்␢ ஏற்பாடு செய்திருந்த தூய கூடாரத்ததை␢ மாதிரியாகக் கொண்டு␢ உம் தூய மலைமேல்␢ கோவில் கட்டவும்,␢ உமது உறைவிடமான நகரில்␢ பலிபீடம் எழுப்பவும்␢ நீர் எனக்கு ஆணையிட்டீர்.⁾
9⁽ஞானம் உம்மோடு இருக்கின்றது;␢ உம் செயல்களை அது அறியும்;␢ நீர் உலகத்தை உண்டாக்கியபோது␢ அது உடனிருந்தது;␢ உம் பார்வைக்கு உகந்ததை␢ அது அறியும்;␢ உம் கட்டளைகளின்படி␢ முறையானது எது எனவும்␢ அதற்குத் தெரியும்.⁾
10⁽உமது தூய விண்ணகத்திலிருந்து அதை அனுப்பியருளும்;␢ உமது மாட்சிமிக்க அரியணையிலிருந்து␢ அதை வழங்கியருளும்.␢ அது என்னோடு இருந்து␢ உழைக்கட்டும்.␢ அதனால் உமக்கு உகந்ததை␢ நான் அறிந்துகொள்வேன்.⁾
11⁽அது எல்லாவற்றையும்␢ அறிந்து உய்த்துணரும்;␢ என் செயல்களில் விவேகத்துடன்␢ என்னை வழி நடத்தும்;␢ தன் மாட்சியில் அது␢ என்னைப் பாதுகாக்கும்.⁾
12⁽அப்பொழுது என் செயல்கள்␢ உமக்கு ஏற்புடையனவாகும்.␢ உம்முடைய மக்களுக்கு நேர்மையுடன்␢ நீதி வழங்குவேன்;␢ என் தந்தையின்␢ அரியணையில் வீற்றிருக்கத்␢ தகுதி பெறுவேன்.⁾
13⁽“கடவுளின் திட்டத்தை␢ அறிபவர் யார்?␢ ஆண்டவரின் திருவுளத்தைக்␢ கண்டுபிடிப்பவர் யார்?⁾
14⁽நிலையற்ற மனிதரின்␢ எண்ணங்கள் பயனற்றவை;␢ நம்முடைய திட்டங்கள்␢ தவறக்கூடியவை.⁾
15⁽அழிவுக்குரிய உடல் ஆன்மாவைக்␢ கீழ்நோக்கி அழுத்துகிறது.␢ இந்த மண் கூடாரம்␢ கவலை தோய்ந்த மனதுக்குச்␢ சுமையாய் அமைகிறது.⁾
16⁽மண்ணுலகில் உள்ளவற்றையே␢ நாம் உணர்வது அரிது!␢ அருகில் இருப்பவற்றையே␢ கடும் உழைப்பால்தான்␢ கண்டுபிடிக்கிறோம்.␢ இவ்வாறிருக்க, விண்ணுலகில்␢ இருப்பவற்றைத் தேடிக்␢ கண்டுபிடிப்பவர் யார்?⁾
17⁽நீர் ஞானத்தை அருளாமலும்,␢ உயர் வானிலிருந்து␢ உம் தூய ஆவியை␢ அனுப்பாமலும் இருந்தால்,␢ உம் திட்டத்தை யாரால்␢ அறிந்து கொள்ள இயலும்?⁾
18⁽இவ்வாறு மண்ணுலகில்␢ வாழ்வோருடைய வழிகள்␢ செம்மைப்படுத்தப்பட்டன.␢ உமக்கு உகந்தவற்றை␢ மனிதர் கற்றுக்கொண்டனர்;␢ ஞானத்தால் மீட்பு அடைந்தனர்.”⁾