1⁽அப்பொழுது நீதிமான்கள் தங்களைத்␢ துன்புறுத்தியோர் முன்பும்␢ தங்கள் உழைப்பைப்␢ பொருட்படுத்தாதோர் முன்பும்␢ துணிவோடு நிற்பார்கள்.⁾
2⁽இறைப்பற்றில்லாதவர்கள்␢ அவர்களைக் கண்டு␢ பேரச்சத்தால் நடுங்குவார்கள்;␢ எதிர்பாரா வகையில்␢ அவர்கள் அடைந்த மீட்பைப்பற்றித்␢ திடுக்கிடுவார்கள்.⁾
3⁽அவர்கள் உளம் வருந்தி,␢ ஒருவரோடு ஒருவர்␢ பேசிக்கொள்வார்கள்;␢ மிகுந்த மனத்துயருடன்␢ பெருமூச்சு விட்டுப்␢ பின்வருமாறு சொல்வார்கள்;⁾
4⁽“இவர்களைத் தானே நாம் முன்பு␢ எள்ளி நகையாடினோம்;␢ வசை மொழிக்கு ஆளாக்கினோம்.␢ நாம் மூடர்கள்,␢ அவர்களது வாழ்க்கை மடமையானது␢ என்று எண்ணினோம்;␢ அவர்களது முடிவு இழிவானது␢ என்று கருதினோம்.⁾
5⁽கடவுளின் மக்களாக அவர்கள்␢ எவ்வாறு எண்ணப்பட்டார்கள்?␢ தூயவர்கள் நடுவில் அவர்களுக்கு␢ எவ்வாறு பங்கு கிடைத்தது?⁾
6⁽எனவே, நாமே␢ உண்மையின் வழியிலிருந்து␢ தவறிவிட்டோம்.␢ நீதியின் ஒளி நம்மீது படரவில்லை;␢ கதிரவன் நம்மீது எழவில்லை.⁾
7⁽நெறிகேடும் அழிவும் நிறைந்த வழியில்␢ நாம் மனமுவந்து நடந்தோம்;␢ பாதை இல்லாப் பாலைநிலங்களில்␢ பயணம் செய்தோம்;␢ ஆண்டவரின் வழியையோ அறிந்திலோம்!⁾
8⁽இறுமாப்பால் நமக்குக் கிடைத்த␢ பயன் என்ன?␢ செல்வச் செருக்கால்␢ நமக்கு விளைந்த நன்மை என்ன?⁾
9⁽இவை அனைத்தும்␢ நிழல்போலக் கடந்துபோயின;␢ புரளி போல விரைந்து சென்றன.⁾
10⁽அலைமோதும் நீர்ப்பரப்பைக்␢ கிழித்துக்கொண்டு கப்பல் செல்கிறது.␢ அது சென்ற தடத்தை␢ யாரும் காணமுடியாது;␢ அதன் அடித்தட்டின் சுவடுகள்␢ அலைகளில் புலப்படுவதில்லை.⁾
11⁽பறவை, காற்றில் பறந்து செல்கிறது.␢ அது சென்ற வழியின்␢ அடையாளமே தெரிவதில்லை.␢ அது சிறகடித்துச் செல்லும்போது␢ மென்காற்றின்மீது மோதுகிறது;␢ அது பறந்தோடும் வேகத்தில்␢ காற்றைக் கிழித்துக்கொண்டு␢ செல்கிறது;␢ இறக்கைகளை அசைத்துக்␢ காற்றை ஊடுருவிச் செல்கிறது.␢ பின்னர் அதன் போக்கினது சுவடே தென்படுவதில்லை.⁾
12⁽இலக்கை நோக்கி எய்த அம்பு␢ காற்றைக் கிழித்துக்கொண்டு␢ செல்கிறது.␢ பிளவுண்ட காற்று␢ உடனே கூடிவிடுகிறது.␢ ஆனால் அம்பு சென்ற வழியை␢ ஒருவரும் அறிவதில்லை.⁾
13⁽இவற்றைப் போன்றதே நம் நிலையும்!␢ நாம் பிறந்தோம்;␢ உடனே இறந்துபட்டோம்.␢ பிறரிடம் காட்டுவதற்கு நம்மிடம்␢ நற்பண்பின் அடையாளம்␢ எதுவுமில்லை.␢ நம்முடைய தீமையால் நம்மையே␢ அழித்துக்கொண்டோம்.”⁾
14⁽இறைப்பற்றில்லாதவர்களின் நம்பிக்கை␢ காற்றில் அடித்துச் செல்லும்␢ பதர்போன்றது;␢ புயலால் சிதறடிக்கப்படும்␢ உறைபனிபோன்றது;␢ காற்றால் அங்கும் இங்கும்␢ கலைக்கப்படும் புகைபோன்றது.␢ ஒரே நாள் தங்கும் விருந்தினர்களின்␢ நினைவுபோல் அது மறக்கப்படும்.⁾
15⁽நீதிமான்களோ␢ என்றென்றும் வாழ்கிறார்கள்.␢ அவர்களுக்குரிய கைம்மாறு␢ ஆண்டவரிடம் உள்ளது.␢ அவர்களைப்பற்றிய கவலை␢ உன்னத இறைவனுக்கு உண்டு.⁾
16⁽அவர்கள் மாட்சிமிக்க␢ பொன்முடியைப் பெறுவார்கள்;␢ ஆண்டவருடைய கையிலிருந்து␢ மணிமுடியைப் பெறுவார்கள்.␢ அவர் தம் வலக்கையால்␢ அவர்களை அரவணைப்பார்;␢ தம் புயத்தால் அவர்களைப் பாதுகாப்பார்.⁾
17⁽ஆர்வம் என்னும் படைக்கலத்தால்␢ அவர் தம்மை முழுதும்␢ மூடிக்கொள்வார்;␢ தம் எதிரிகளைப் பழிவாங்கப்␢ படைப்பினைப் படைக்கலமாகக்␢ கொள்வார்.⁾
18⁽நீதியை அவர் மார்புக்கவசமாக␢ அணிந்து கொள்வார்;␢ நடுநிலை தவறாத தீர்ப்பைத்␢ தலைக்கவசமாகப் புனைந்து கொள்வார்.⁾
19⁽வெல்ல முடியாத கேடயமாகத்␢ தூய்மையை அவர் கொண்டிருப்பார்.⁾
20⁽அவர் கடுஞ்சினத்தைக்␢ கூரிய வாளாகக் கொள்வார்.␢ உலகம் அவரோடு சேர்ந்து␢ அறிவிலிகளை எதிர்த்துப் போராடும்.⁾
21⁽மின்னல் கீற்று␢ இலக்கை நோக்கி நேராகப் பாயும்;␢ நாணேற்றிய வில்லினின்று␢ புறப்படும் அம்புபோல்␢ அது முகில்களிலிருந்து␢ குறியை நோக்கித் தாவும்.⁾
22⁽எறியப்படும் கவண்கல்லைப் போலச்␢ சினம் செறிந்த கல்மழை விழும்.␢ கடல் நீர் அவர்கள்மீது சீறிப்பாயும்.␢ ஆறுகள் இரக்கமின்றி␢ அவர்களை மூழ்கடிக்கும்.⁾
23⁽புயல் அவர்களை எதிர்த்து வீசும்;␢ அது சூறாவளிபோல்␢ அவர்களைப் புடைத்தெடுக்கும்.␢ முறைகேடு␢ மண்ணுலகையே பாழாக்கும்.␢ தீவினை, வலியோரின்␢ அரியணைகளைக் கவிழ்க்கும்.⁾