1⁽ மேலும், கடற்பயணம் செய்யும்␢ நோக்குடன்␢ கொந்தளிக்கும் அலை கடலைக்␢ கடக்கவிருக்கும் ஒருவர்␢ தம்மைத் தாங்கிச் செல்லும்␢ மரக்கலத்தைவிட␢ எளிதில் உடைபடும்␢ மரக்கட்டையிடம் மன்றாடுகிறார்.⁾
2⁽செல்வம் சேர்க்கும் ஆவல்␢ அந்த மரக்கலத்தைக் கட்டத்␢ திட்டமிட்டது.␢ ஞானம் கைவினைஞராகச்␢ செயல்பட்டு␢ அதைக் கட்டி முடித்தது.⁾
3⁽ஆனால், தந்தையே␢ உமது பாதுகாப்பு␢ அதை இயக்கி வருகிறது;␢ ஏனெனில் கடலில்␢ அதற்கு ஒரு வழி அமைத்தீர்;␢ அலைகள் நடுவே␢ பாதுகாப்பான பாதை வகுத்தீர்.⁾
4⁽இவ்வாறு எல்லா இடர்களிலிருந்தும்␢ நீர் காப்பாற்ற முடியும்␢ எனக் காட்டினீர்.␢ இதனால், திறமையற்றோர் கூடக்␢ கடலில் பயணம் செய்யமுடியும்.⁾
5⁽உமது ஞானத்தின் செயல்கள்␢ பயனற்றவை ஆகக்கூடா என்பது␢ உமது திருவுளம்.␢ எனவே மனிதர்கள்␢ மிகச் சிறிய மரக்கட்டையிடம்␢ தங்கள் உயிரையே ஒப்படைத்து,␢ கொந்தளிக்கும் கடலில்␢ அதைத் தெப்பமாகச் செலுத்தி,␢ பாதுகாப்புடன் கரை சேர்கின்றார்கள்.⁾
6⁽ஏனெனில் தொடக்க காலத்தில் கூட,␢ செருக்குற்ற அரக்கர்கள்␢ அழிந்தபோது,␢ உலகின் நம்பிக்கை␢ ஒரு தெப்பத்தில் புகலிடம் கண்டது.␢ உமது கை வழிகாட்ட,␢ அந்நம்பிக்கை␢ புதிய தலைமுறைக்கு வித்திட்டது.⁾
7⁽நீதியை உருவாக்கும் மரம்␢ வாழ்த்துக்குரியது.⁾
8⁽ஆனால் கைவேலைப்பாடாகிய␢ சிலை சபிக்கப்பட்டது.␢ அதைச் செய்தவரும்␢ அவ்வாறே சபிக்கப்பட்டவர்.␢ ஏனெனில் அவரே அதைச் செய்தார்.␢ அது அழியக்கூடியதாயிருந்தும்,␢ தெய்வம் என்று அழைக்கப்பட்டது.⁾
9⁽இறைப்பற்றில்லாதோரையும்␢ அவர்களது இறைப்பற்றின்மையையும்␢ கடவுள் ஒருங்கே வெறுக்கின்றார்.⁾
10⁽ஏனெனில் செய்தவரோடு␢ அவர் செய்த வேலையும்␢ ஒருமிக்கத் தண்டிக்கப்படும்.⁾
11⁽எனவே வேற்றினத்தாரின்␢ சிலைகளும்␢ தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாகும்;␢ ஏனெனில்,␢ கடவுளின் படைப்புகளேயாயினும்,␢ அவை மிக அருவருப்பானவையாக␢ மாறிவிட்டன;␢ அவை மனிதரின்␢ ஆன்மாக்களுக்கு இடறல்கள்;␢ அறிவிலிகளின்␢ கால்களுக்குக் கண்ணிகள்.⁾
12⁽சிலைகள் செய்யத் திட்டமிட்டதே␢ விபசாரத்தின்* தொடக்கம்.␢ அவற்றைக் கண்டுபிடித்ததே␢ வாழ்வின் அழிவு.⁾
13⁽அவை தொடக்கமுதல்␢ இருந்ததில்லை;␢ என்றென்றும் இருக்கப்␢ போவதுமில்லை.⁾
14⁽மனிதரின் வீண்பெருமையினால்␢ அவை உலகில் நுழைந்தன;␢ எனவே அவை விரைவில் முடியும்␢ எனத் திட்டமிடப்பட்டுள்ளது.⁾
15⁽இளமையில் தம் மகன் இறந்ததால்,␢ ஆறாத்துயரில் மூழ்கியிருந்த␢ தந்தை ஒருவர் விரைவில்␢ தம்மிடமிருந்து எடுத்துக்கொள்ளப்பட்ட␢ அவனது சிலையைச் செய்தார்.␢ முன்பு இறந்து விட்ட மனிதப் பிறவியைப்␢ பின்பு தெய்வப் பிறவியாகக்␢ கொண்டாடினார்.␢ மறைவான சமயச் சடங்குகளையும்␢ வழிபாடுகளையும் வழிவழியாகச்␢ செய்யுமாறு தம் பணியாளரைப்␢ பணித்தார்.⁾
16⁽இந்தத் தீய பழக்கம்␢ காலப் போக்கில் வேரூன்றி␢ சட்டம்போலப்␢ பின்பற்றப்படலாயிற்று.⁾
17⁽மன்னர்களின் ஆணைப்படி␢ மக்கள் சிலைகளை␢ வணங்கலானார்கள்.␢ தாங்கள்␢ தொலையில் வாழ்ந்துவந்த␢ காரணத்தால்,␢ தங்கள் மன்னரை␢ நேரில் பெருமைப்படுத்த␢ முடியாத மக்கள்␢ தொலையிலிருந்தே␢ அவருடைய உருவத்தைக்␢ கற்பனை செய்தார்கள்;␢ அதைக் காணக்கூடிய␢ சிலையாக வடித்து அதற்கு␢ வணக்கம் செலுத்தினார்கள்;␢ இவ்வாறு, தொலைவில் இருந்தவரை␢ எதிரில் இருந்தவர் போலக் கருதி,␢ தங்கள் ஆர்வத்தில் அவரை␢ மிகைப்படப் புகழ்ந்தார்கள்.⁾
18⁽மன்னரை அறியாதவர்கள்␢ நடுவிலும்␢ ‘மன்னர் வழிபாட்டைப்’ பரப்ப,␢ சிற்பியின் புகழார்வம்␢ அவர்களைத் தூண்டிற்று.⁾
19⁽ஏனெனில் சிற்பி தம்மை ஆள்பவரை␢ மகிழ்ச்சிப்படுத்தும் நோக்குடன்␢ தம் திறமையெல்லாம் கூட்டி,␢ அச்சிலையை மிக அழகாகச்␢ செய்திருக்கலாம்.⁾
20⁽அவருடைய வேலைப்பாட்டின்␢ அழகில் மயங்கிய மக்கள்திரள்␢ சற்றுமுன்பு வெறும் மனிதராகப்␢ போற்றிய ஒருவரைப்␢ பின்னர் வழிபாட்டுக்குரியவராகக்␢ கருதியிருக்கலாம்.⁾
21⁽இது மன்பதையே வீழ்த்தும்␢ ஒரு சூழ்ச்சி ஆயிற்று.␢ ஏனெனில் மனிதர் பேரிடருக்கோ␢ கொடுங்கோன்மைக்கோ ஆளாகி,␢ கடவுளுக்கே உரிய பெயரைக்␢ கற்களுக்கும் மரங்களுக்கும்␢ கொடுத்தனர்.⁾
22⁽கடவுளைப்பற்றிய அறிவில்␢ மனிதர்கள் தவறியது மட்டுமன்றி,␢ அறியாமையால் பெரும்␢ போராட்டத்தில் வாழ்கிறார்கள்;␢ இத்தகைய தீமைகளை␢ ‘அமைதி’ என்று அழைக்கிறார்கள்.⁾
23⁽புகுமுகச் சடங்குகளில்␢ அவர்கள் குழந்தைகளைப்␢ பலியிட்டாலும்,␢ மறைவான சமயச் சடங்குகளைக்␢ கொண்டாடினாலும்,␢ வேற்றினப் பழக்கவழக்கங்கள்␢ கொண்ட வெறியூட்டும்␢ களியாட்டங்களை நடத்தினாலும்,⁾
24⁽தங்கள் வாழ்வையும்␢ திருமணத்தையும்␢ மாசுபடாமல் காப்பதில்லை.␢ அவர்கள் நயவஞ்சமாக␢ ஒருவரை ஒருவர் கொல்கிறார்கள்;␢ அல்லது விபசாரத்தால்␢ ஒருவர் மற்றவருக்குத்␢ துயர் விளைவிக்கிறார்கள்.⁾
25⁽இதன் விளைவாக எங்கும்␢ ஒரே குழப்பம்,␢ குருதி, கொலை, களவு, வஞ்சகம்,␢ ஊழல், பற்றுறுதியின்மை, கிளர்ச்சி, பொய்யாணை.⁾
26⁽நல்லவைப் பற்றிய குழப்பம்,␢ செய்நன்றி மறத்தல்,␢ ஆன்மாக்களைக் கறைப்படுத்துதல்,␢ இயல்புக்கு மாறான␢ காமவேட்கை,␢ மணவாழ்வில் முறைகேடு,␢ விபசாரம், வரம்புமீறிய␢ ஒழுக்கக்கேடு!⁾
27⁽பெயரைக்கூடச் சொல்லத் தகாத␢ சிலைகளின் வழிபாடே␢ எல்லாத் தீமைகளுக்கும் முதலும்␢ காரணமும் முடிவும் ஆகும்.⁾
28⁽அவற்றை வணங்குவோர்␢ மகிழ்ச்சியால் வெறிபிடித்தவர்␢ ஆகின்றனர்;␢ அல்லது பொய்யை␢ இறை வாக்காக உரைக்கின்றனர்.␢ அல்லது நேர்மையாக வாழ்வதில்லை;␢ அல்லது எளிதாகப்␢ பொய்யாணையிடுகின்றனர்.⁾
29⁽உயிரற்ற சிலைகள் மீது␢ நம்பிக்கை வைப்பதால்,␢ அவர்களை பொய்யாணையிட்டாலும்␢ தங்களுக்குத் தீங்கு நேரிடும் என␢ எதிர்பார்ப்பதில்லை.⁾
30⁽இரு காரணங்களுக்காக அவர்கள்␢ நீதியுடன் தண்டிக்கப்படுவார்கள்;␢ சிலைகளுக்குத் தங்களை␢ அர்ப்பணித்ததன்மூலம்␢ கடவுளைப்பற்றிய தவறான எண்ணம்␢ கொண்டிருந்தார்கள்;␢ தூய்மையை இகழ்ந்து,␢ வஞ்சகத்தோடு நீதிக்கு␢ முரணாக ஆணையிட்டார்கள்.⁾
31⁽ஏனெனில் எவற்றைக் கொண்டு␢ மனிதர்கள் ஆணையிடுகிறார்களோ␢ அவற்றின் ஆற்றல்␢ அவர்களைத் தண்டிப்பதில்லை.␢ மாறாக, பாவிகளுக்குரிய␢ நீதித் தீர்ப்பே␢ நெறிகெட்டோரின் குற்றங்களை␢ எப்பொழுதும் தண்டிக்கிறது.⁾