சாலமோனின் ஞானம் 2

முந்திய அடுத்த
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19
1⁽இறைப்பற்றில்லாதவர்கள்␢ தவறாகக் கணித்து␢ உள்ளத்தில் பின்வருமாறு␢ சொல்லிக் கொண்டார்கள்;␢ “நம் வாழ்வு குறுகியது;␢ துன்பம் நிறைந்தது.␢ மனிதரின் முடிவுக்கு␢ மாற்று மருந்து எதுவுமில்லை.␢ கீழுலகிலிருந்து யாரும் மீண்டதாகக்␢ கேள்விப்பட்டதில்லை.⁾ 2⁽தற்செயலாய் நாம் பிறந்தோம்;␢ இருந்திராதவர்போல்␢ இனி ஆகிவிடுவோம்.␢ நமது உயிர்மூச்சு வெறும் புகையே;␢ அறிவு நம் இதயத் துடிப்பின்␢ தீப்பொறியே.⁾ 3⁽அது அணையும்பொழுது,␢ உடல் சாம்பலாகிவிடும்.␢ ஆவியோ காற்றோடு காற்றாய்க்␢ கலந்துவிடும்.⁾ 4⁽காலப்போக்கில் நம் பெயர் மறக்கப்படும்.§நம் செயல்களை␢ நினைவுகூரமாட்டார்கள்.␢ நம் வாழ்வு முகில் போலக்␢ கலைந்து போகும்;␢ கதிரவனின் ஒளிக்கதிர்களால்␢ துரத்தப்பட்டு,␢ அதன் வெப்பத்தால் தாக்குண்ட␢ மூடு பனிபோலச் சிதறடிக்கப்படும்.⁾ 5⁽நம் வாழ்நாள் நிழல்போலக்␢ கடந்து செல்கின்றது.␢ நமது முடிவுக்குப்பின்␢ நாம் மீண்டு வருவதில்லை;␢ ஏனெனில் முடிவு குறிக்கப்பட்டபின்␢ எவரும் அதிலிருந்து மீள்வதில்லை.”⁾ 6⁽“எனவே, வாருங்கள்;␢ இப்போதுள்ள நல்லவற்றைத் துய்ப்போம்;␢ இளமை உணர்வோடு␢ படைப்புப்பொருள்களை␢ முழுவதும் பயன்படுத்துவோம்.⁾ 7⁽விலையுயர்ந்த திராட்சை மதுவிலும்␢ நறுமண வகைகளிலும்␢ திளைத்திருப்போம்;␢ இளவேனிற்கால மலர்களில்␢ எதையும் விட்டுவைக்கமாட்டோம்.⁾ 8⁽ரோசா மலர்களை␢ அவை வாடுமுன்␢ நமக்கு முடியாகச் சூடிக்கொள்வோம்.⁾ 9⁽நம் களியாட்டங்களில்␢ ஒவ்வொருவரும் பங்குகொள்ளட்டும்;␢ இன்பத்தின் சுவடுகளை␢ எங்கும் விட்டுச்செல்வோம்.␢ இதுவே நம் பங்கு;␢ இதுவே நம் உடைமை.”⁾ 10⁽“நீதிமான்களாகிய ஏழைகளை␢ ஒடுக்குவோம்;␢ கைம்பெண்களையும்␢ ஒடுக்காமல் விடமாட்டோம்;␢ நரைதிரை விழுந்த முதியோரையும்␢ மதிக்கமாட்டோம்;⁾ 11⁽நமது வலிமையே நமக்கு நீதி —␢ நமக்குச் சட்டம்.␢ வலிமையற்றது எதுவும் பயனற்றதே.”⁾ 12⁽‘நீதி மான்களைத் தாக்கப்␢ பதுங்கியிருப்போம்;␢ ஏனெனில், அவர்கள் நமக்குத்␢ தொல்லையாய் இருக்கிறார்கள்;␢ நம் செயல்களை எதிர்க்கிறார்கள்;␢ திருச்சட்டத்திற்கு எதிரான␢ பாவங்களுக்காக␢ நம்மைக் கண்டிக்கிறார்கள்.␢ நற்பயிற்சியை மீறிய குற்றங்களை␢ நம்மீது சுமத்துகிறார்கள்.⁾ 13⁽கடவுளைப்பற்றிய அறிவு␢ தங்களுக்கு உண்டு என␢ அவர்கள் பறைசாற்றுகிறார்கள்;␢ ஆண்டவரின் பிள்ளைகள்* எனத் தங்களை அழைத்துக் கொள்கிறார்கள்.⁾ 14⁽அவர்களது நடத்தையே␢ நம் எண்ணங்களைக் கண்டிக்கிறது.␢ அவர்களைப் பார்ப்பதே␢ நமக்குத் துயரமாய் உள்ளது.⁾ 15⁽அவர்களது வாழ்க்கை␢ மற்றவர் வாழ்க்கையினின்று␢ வேறுபட்டது;␢ அவர்களுடைய வழிமுறைகள்␢ மாறுபட்டவை.⁾ 16⁽இழிந்தோர் என நம்மை␢ அவர்கள் எண்ணுகிறார்கள்;␢ தூய்மையற்ற பொருளினின்று␢ ஒதுங்கிச் செல்வதுபோல␢ நம்முடைய வழிகளினின்று␢ விலகிச் செல்கிறார்கள்;␢ நீதிமான்களின் முடிவு␢ மகிழ்ச்சிக்குரியது எனக்␢ கருதுகிறார்கள்;␢ கடவுள் தம் தந்தை எனப்␢ பெருமை பாராட்டுகிறார்கள்.⁾ 17⁽அவர்களுடைய சொற்கள்␢ உண்மையா எனக் கண்டறிவோம்;␢ முடிவில் அவர்களுக்கு␢ என்ன நிகழும் என ஆய்ந்தறிவோம்.⁾ 18⁽நீதிமான்கள்␢ கடவுளின் மக்கள் என்றால்,␢ அவர் அவர்களுக்கு உதவி செய்வார்;␢ பகைவரிடமிருந்து␢ அவர்களை விடுவிப்பார்.⁾ 19⁽அவர்களது கனிவினைக்␢ கண்டுகொள்ளவும்,␢ பொறுமையை ஆய்ந்தறியவும்,␢ வசைமொழி கூறியும் துன்புறுத்தியும்␢ அவர்களைச் சோதித்தறிவோம்.⁾ 20⁽இழிவான சாவுக்கு␢ அவர்களைத் தீர்ப்பிடுவோம்;␢ ஏனெனில், தங்கள் வாய்மொழிப் படி␢ அவர்கள் பாதுகாப்புப் பெறுவார்கள்.’⁾ 21⁽இறைப்பற்றில்லாதவர்கள்␢ இவ்வாறு எண்ணி␢ நெறி தவறிச்சென்றார்கள்.␢ அவர்களின் தீயொழுக்கமே␢ அவர்களைப்␢ பார்வையற்றோர் ஆக்கிவிட்டது.⁾ 22⁽அவர்கள் கடவுளின் மறைவான␢ திட்டங்களை அறியவில்லை;␢ தூய வாழ்வுக்குக் கைம்மாறு உண்டு␢ என்று நம்பவில்லை;␢ மாசற்றவர்களுக்குப் பரிசு கிடைக்கும்␢ என்று உய்த்துணரவில்லை.⁾ 23⁽கடவுள் மனிதர்களை␢ அழியாமைக்கென்று படைத்தார்;␢ தம் சொந்த இயல்பின் சாயலில்*␢ அவர்களை உருவாக்கினார்.⁾ 24⁽ஆனால் அலகையின் பொறாமையால்␢ சாவு உலகில் நுழைந்தது.␢ அதைச் சார்ந்து நிற்போர்␢ இறப்புக்கு உள்ளாவர்.⁾