சாலமோனின் ஞானம் 19

முந்திய அடுத்த
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19
1⁽இறைப்பற்றில்லாதவர்களைக்␢ கடவுளின் சீற்றம் இரக்கமின்றி␢ இறுதிவரை தாக்கியது.␢ ஏனெனில் அவர்கள்␢ செய்யவிருந்ததைக் கடவுள்␢ முன்னரே அறிந்திருந்தார்.⁾ 2⁽இஸ்ரயேலர் புறப்பட்டுச் செல்ல␢ விடைகொடுத்து,␢ விரைவில் அவர்களை வெளியே␢ அனுப்பி வைத்த␢ அதே எகிப்தியர்கள்␢ பிறகு தங்கள் மனத்தை␢ மாற்றிக்கொண்டு␢ அவர்களைப் பின்தொடர்ந்தார்கள்.⁾ 3⁽எகிப்தியர்கள் தங்களுள்␢ இறந்தவர்களின் கல்லறைகளில் புலம்பி,␢ அவர்களுக்காக இன்னும் துயரம்␢ கொண்டாடுகையில்,␢ இன்னோர் அறிவற்ற சூழ்ச்சியில்␢ இறங்கினார்கள்;␢ முன்பு யாரை வெளியேறும்படி␢ வேண்டிக் கொண்டார்களோ,␢ அவர்களையே தப்பியோடுவோரைப்␢ போலத் துரத்திச் சென்றார்கள்.⁾ 4⁽தங்கள் நடத்தைக்கு ஏற்ற முடிவுக்கே␢ அவர்கள் தள்ளப்பட்டார்கள்;␢ அதனால் இதற்குமுன்␢ நடந்தவற்றையெல்லாம்␢ அவர்கள் மறந்து விட்டார்கள்;␢ இவ்வாறு தங்கள் துன்பத்தில்␢ குறையாயிருந்த தண்டனையே␢ நிறைவு செய்தார்கள்.⁾ 5⁽இவ்வாறு␢ உம் மக்கள் வியத்தகு␢ பயணத்தைத் தொடர்ந்து சென்றார்கள்.␢ அவர்களுடைய பகைவர்களோ␢ விந்தையான சாவை␢ எதிர்கொண்டார்கள்.⁾ 6⁽உம் பிள்ளைகள்␢ தீங்கின்றிக் காக்கப்படும்படி,␢ படைப்பு முழுவதும்␢ உம் கட்டளைகளுக்குப் பணிந்து,␢ மீண்டும் தன் இயல்பில்␢ புத்துயிர்ப்பெற்றது.⁾ 7⁽அவர்களது பாசறைக்கு␢ முகில் நிழல் கொடுத்தது.␢ முன்பு தண்ணீர் இருந்த இடத்தில்␢ பின்பு உலர்ந்த தரை தோன்றிற்று.␢ செங்கடலினூடே தங்குதடை இல்லாத␢ வழியும், சீறிப்பாயும் அலைகளினூடே␢ புல்திடலும் உண்டாயின.⁾ 8⁽உமது கைவன்மையால்␢ காப்பாற்றப் பட்ட மக்கள் அனைவரும்␢ அவ்வழியே கடந்து சென்றனர்.␢ உம்முடைய வியத்தகு செயல்களை␢ உற்று நோக்கிய வண்ணம் சென்றனர்.⁾ 9⁽குதிரைகளைப் போலக்␢ குதித்துக்கொண்டும்,␢ ஆட்டுக்குட்டிகளைப் போலத்␢ துள்ளிக் கொண்டும்,␢ தங்களை விடுவித்த␢ ஆண்டவராகிய உம்மைப் புகழ்ந்து␢ கொண்டே சென்றனர்.⁾ 10⁽அவர்கள் வேற்று நாட்டில்␢ தங்கியிருந்தபோது␢ நிகழ்ந்தவற்றை இன்னும் நினைவு␢ கூர்ந்தார்கள்;␢ விலங்குகளுக்கு மாறாக நிலம்␢ கொசுக்களைத் தோற்றுவித்ததையும்,␢ மீன்களுக்கு மாறாகத் தவளைக்␢ கூட்டங்களை ஆறு உமிழ்ந்ததையும்␢ அவர்கள் இன்னும் நினைவில்␢ வைத்திருந்தார்கள்.⁾ 11⁽பின்பு சுவையான இறைச்சியை␢ அவர்கள் விரும்பி வேண்டியபோது,␢ புதுவகைப் பறவைகளைக் கண்டார்கள்.⁾ 12⁽ஏனெனில் அவர்களுடைய␢ விருப்பத்தை நிறைவு செய்யக்␢ கடலிலிருந்து காடைகள்␢ புறப்பட்டுவந்தன.⁾ 13⁽பேரிடியால் எச்சரிக்கப்பட்ட␢ பின்னரே பாவிகள்␢ தண்டிக்கப்பட்டார்கள்;␢ தாங்கள் செய்த தீச்செயல்களுக்காக␢ நீதியின்படி துன்புற்றார்கள்;␢ ஏனெனில், அன்னியர்மட்டில்␢ பகைமையுடன் நடந்து கொண்டார்கள்.⁾ 14⁽சோதோம் நகரைச் சேர்ந்தோர்␢ தங்களை நாடிவந்த␢ வேற்றினத்தார்க்கு␢ இடம் கொடுக்க மறுத்தார்கள்.␢ எகிப்தியர்களோ தங்களுக்கு␢ நன்மை செய்தவர்களையே␢ அடிமைப்படுத்தினார்கள்.⁾ 15⁽இது மட்டுமன்று;␢ சோதோம் நகரைச் சேர்ந்தோர்␢ உறுதியாகத் தண்டனைத் தீர்ப்புக்கு␢ உள்ளாவார்கள்; ஏனெனில்␢ அவர்கள் அயல்நாட்டினரைப்␢ பகைவர்களென நடத்தினார்கள்.⁾ 16⁽எகிப்தியர்களோ அயல்நாட்டினரை␢ விழாக்கோலத்துடன் வரவேற்று,␢ அவர்களுக்கு எல்லா உரிமையும்␢ அளித்தபின்னரும்␢ கொடுந்தொல்லைகள் தந்து␢ அவர்களைத் துன்புறுத்தினார்கள்.⁾ 17⁽நீதிமானின் கதவு அருகில்␢ சோதோம் நகரைச் சேர்ந்தோர்␢ கவ்விய காரிருளால் சூழப்பட்டு,␢ தம்தம் கதவைத் தடவிப்பார்த்து␢ வழி தேடியதுபோல்,␢ எகிப்தியர்களும் பார்வையற்றுப்␢ போயினர்.⁾ 18⁽யாழின் சுருதிகள்␢ மாறாமலே இருந்துகொண்டு,␢ பண்ணின் இயல்லை மாற்றி␢ அமைப்பதுபோல்␢ இயற்கையின் ஆற்றல்களும்␢ செயல்படுகின்றன.␢ நிகழ்ந்தவற்றைக் கண்டு␢ இந்த உண்மையைத்␢ தெளிவாக அறிந்துகொள்ளலாம்.⁾ 19⁽நிலத்தில் வாழும் விலங்குகள்␢ நீரில் வாழும் விலங்குகளாக மாறின;␢ நீந்தித் திரியும் உயிரினங்கள்␢ நிலத்திற்கு ஏறிவந்தன.⁾ 20⁽நீரின் நடுவிலும் நெருப்பு␢ தன் இயல்பான ஆற்றலைக்␢ கொண்டிருந்தது;␢ நீரும் தன் அவிக்கும் இயல்வை␢ மறந்துவிட்டது.⁾ 21⁽மாறாக,␢ அழியக்கூடிய உயிரினங்கள்␢ நெருப்புக்குள் நடந்தபோதும்,␢ அவற்றின் சதையை␢ அது சுட்டெரிக்கவில்லை;␢ பனிக்கட்டிபோல் எளிதில்␢ உருகும் தன்மை கொண்ட␢ அந்த விண்ணக␢ உணவையும் உருக்கவில்லை.⁾ 22⁽ஆண்டவரே,␢ நீர் எல்லாவற்றிலும் உம் மக்களை␢ உயர்த்தி மேன்மைப்படுத்தினீர்;␢ எல்லா நேரத்திலும்␢ எல்லா இடத்திலும்␢ நீர் அவர்களுக்குத்␢ துணைபுரியத் தவறவில்லை.⁾