1⁽உம் தீர்ப்புகள் மேன்மையானவை,␢ விளக்கமுடியாதவை.␢ எனவே அவற்றைக் கற்றுத் தெளியாத␢ மனிதர்கள் நெறிதவறினார்கள்.⁾
2⁽நெறிகெட்டவர்கள்␢ உமது தூய மக்களினத்தை␢ அடிமைப்படுத்த எண்ணியபோது␢ அவர்களே காரிருளின் அடிமைகளாகவும்␢ நீண்ட இரவின் கைதிகளாகவும்␢ தங்கள் வீடுகளுக்குள்ளேயே␢ அடைபட்டு, உமது முடிவில்லாப்␢ பாதுகாப்பினின்று கடத்தப்பட்டார்கள்.⁾
3⁽மேலும் மறதி என்னும்␢ இருள் அடர்ந்த திரைக்குப் பின்னால்␢ தங்கள் மறைவான பாவங்களில்␢ மறைந்து கொண்டதாக␢ எண்ணிக் கொண்டிருந்த அவர்கள்␢ அச்சத்தால் நடுங்கியவர்களாய்␢ கொடிய காட்சிகளால்␢ அதிர்ச்சியுற்றுச் சிதறுண்டார்கள்.⁾
4⁽அவர்கள் பதுங்கியிருந்த␢ உள்ளறைகள்கூட அவர்களை␢ அச்சத்திலிருந்து விடுவிக்கவில்லை.␢ அச்சுறுத்தும் பேரொலிகள்␢ எங்கும் எதிரொலித்தன.␢ வாடிய முகங்கள் கொண்ட␢ துயர ஆவிகள் தோன்றின.⁾
5⁽எந்த நெருப்பின் ஆற்றலாலும்␢ ஒளி கொடுக்க இயலவில்லை;␢ விண்மீன்களின்␢ ஒளி மிகுந்த கூடர்களாலும்␢ இருள் சூழ்ந்த அவ்விரவை␢ ஒளிர்விக்க முடியவில்லை.⁾
6⁽தானே பற்றியெரிந்து அச்சுறுத்தும்␢ தீயைத் தவிர வேறு எதுவும்␢ அவர்கள் முன்னால் தோன்றவில்லை.␢ அவர்களோ நடுக்கமுற்று,␢ தாங்கள் காணாதவற்றைவிடக்␢ கண்டவையே தங்களை␢ அச்சுறுத்துவன என்று உணர்ந்தார்கள்.⁾
7⁽மந்திரவாதக் கலையின்␢ மாயங்கள் தாழ்வுற்றன.␢ அவர்கள்␢ வீண்பெருமை பாராட்டிய ஞானம்␢ வெறுப்புடன் கண்டிக்கப்பட்டது.⁾
8⁽நோயுற்ற உள்ளத்திலிருந்து␢ அச்சத்தையும் குழப்பத்தையும்␢ விரட்டியடிப்பதாக உறுதிகூறியவர்களே␢ நகைப்புக்கிடமான அச்சத்தினால்␢ நோயுற்றார்கள்.⁾
9⁽தொல்லை தரக்கூடிய எதுவும்␢ அவர்களை அச்சுறுத்தவில்லை␢ எனினும்,␢ கடந்து செல்லும் விலங்குகளாலும்␢ சீறும் பாம்புகளாலும்␢ அவர்கள் நடுக்கமுற்றார்கள்.␢ எவ்வகையிலும்␢ தவிர்க்கமுடியாத காற்றைக்கூட⁾
10⁽ஏறிட்டுப் பார்க்க மறுத்து,␢ அச்ச நடுக்கத்தால் மாண்டார்கள்.⁾
11⁽கயமை தன்னிலே␢ கோழைத்தனமானது.␢ தானே தனக்கு␢ எதிராகச் சான்று பகர்கிறது;␢ மனச்சான்றின் உறுத்தலுக்கு␢ உள்ளாகி இடர்களை␢ எப்பொழுதும் மிகைப்படுத்துகிறது.⁾
12⁽அச்சம் என்பது பகுத்தறிவின்␢ துணையைக் கைவிடுவதே.⁾
13⁽உதவி கிடைக்கும் என்னும்␢ எதிர்பார்ப்புக் குன்றும்போது,␢ துன்பத்தின் காரணம் அறியாத␢ நிலையை உள்ளம் ஏற்றுக் கொள்கிறது.⁾
14⁽உண்மையிலேயே␢ வலிமை சிறிதும் இல்லாததும்,␢ ஆற்றலற்ற கீழுலகின்␢ ஆழத்திலிருந்து வந்து கவிந்ததுமான␢ இரவு முழுவதும் அவர்கள்␢ யாவரும் அமைதியற்ற␢ உறக்கத்தில் ஆழ்ந்திருந்தார்கள்.⁾
15⁽சில வேளைகளில்␢ மாபெரும் பேயுருவங்கள்␢ அடிக்கடி தோன்றி␢ அவர்களை அச்சுறுத்தின;␢ மற்றும் சில வேளைகளில்␢ அவர்களது உள்ளம்␢ ஊக்கம் குன்றிச்␢ செயலற்றுப் போயிற்று.␢ ஏனெனில் எதிர்பாராத␢ திடீர் அச்சம் அவர்களைக்␢ கலங்கடித்தது.⁾
16⁽அங்கு இருந்த ஒவ்வொருவரும்␢ கீழே விழுந்தனர்;␢ கம்பிகள் இல்லாச் சிறையில்␢ அடைபட்டனர்.⁾
17⁽ஏனெனில் உழவர், இடையர்,␢ பாலை நிலத்தில் பாடுபடும்␢ தொழிலாளர் ஆகிய அனைவரும்␢ அதில் அகப்பட்டுத்␢ தவிர்க்கமுடியாத முடிவை␢ எதிர்கொண்டனர்;␢ ஏனெனில் அவர்கள் அனைவரும்␢ இருள் என்னும் ஒரே சங்கிலியால்␢ கட்டுண்டனர்.⁾
18⁽காற்றின் ஒலி,␢ படர்ந்த கிளைகளிலிருந்து வரும்␢ பறவைகளின் இனிய குரல்,␢ பெருக்கெடுத்துப் பாய்ந்துவரும்␢ வெள்ளத்தின் சீரான ஓசை,␢ பெயர்த்துக் கீழே தள்ளப்படும்␢ பாறைகளின் பேரொலி,⁾
19⁽கண்ணுக்குப் பலப்படாதவாறு␢ தாவி ஓடும்␢ விலங்குகளின் பாய்ச்சல்,␢ கொடிய காட்டு விலங்குகளின்␢ முழக்கம்,␢ மலைக் குடைவுகளிலிருந்து␢ கேட்கும் எதிரொலி␢ ஆகிய அனைத்தும் அவர்களை␢ அச்சத்தால் முடக்கிவிட்டன.⁾
20⁽உலகெல்லாம்␢ ஒளி வெள்ளத்தில் திளைத்து,␢ தன் வேலையில்␢ தடையின்றி ஈடுபட்டிருந்தது.⁾
21⁽இவ்வாறிருக்க,␢ எகிப்தியர்கள்மேல் மட்டும்␢ அடர்ந்த காரிருள்␢ கவிந்து படர்ந்தது.␢ அவர்களை விழுங்கக்␢ குறிக்கப்பட்ட இருளின்␢ சாயல் அது.␢ எனினும் அவர்களே இருளைவிடத்␢ தங்களுக்குத் தாங்கமுடியாத␢ சுமையாய் இருந்தார்கள்.⁾