1⁽நீதி மான்களின் ஆன்மாக்கள்␢ கடவுளின் கையில் உள்ளன.␢ கடுந்தொல்லை எதுவும்␢ அவர்களைத் தீண்டாது.⁾
2⁽அறிவிலிகளின் கண்களில்␢ இறந்தவர்களைப்போல்␢ அவர்கள் தோன்றினார்கள்.␢ நீதிமான்களின் பிரிவு␢ பெருந்துன்பமாகக் கருதப்பட்டது.⁾
3⁽அவர்கள் நம்மைவிட்டுப்␢ பிரிந்து சென்றது␢ பேரழிவாகக் கருதப்பட்டது.␢ அவர்களோ␢ அமைதியாக இளைப்பாறுகிறார்கள்.⁾
4⁽மனிதர் பார்வையில்␢ அவர்கள் தண்டிக்கப்பட்டாலும்,␢ இறவாமையில் அவர்கள்␢ உறுதியான நம்பிக்கை␢ கொண்டுள்ளார்கள்.⁾
5⁽சிறிதளவு அவர்கள்␢ கண்டித்துத் திருத்தப்பட்டபின்,␢ பேரளவு கைம்மாறு பெறுவார்கள்.␢ கடவுள் அவர்களைச்␢ சோதித்தறிந்தபின்,␢ அவர்களைத் தமக்குத்␢ தகுதியுள்ளவர்கள் என்று கண்டார்.⁾
6⁽பொன்னை உலையிலிட்டுப்␢ புடமிடுவதுபோல்␢ அவர் அவர்களைப் புடமிட்டார்;␢ எரிபலிபோல் அவர்களை␢ ஏற்றுக்கொண்டார்.⁾
7⁽கடவுள் அவர்களைச்␢ சந்திக்கவரும்போது␢ அவர்கள் ஒளி வீசுவார்கள்;␢ அரிதாள் நடுவே தீப்பொறிபோலப்␢ பரந்து சுடர்விடுவார்கள்;⁾
8⁽நாடுகளுக்குத் தீர்ப்பு வழங்குவார்கள்;␢ மக்கள்மீது ஆட்சிசெலுத்துவார்கள்.␢ ஆண்டவரோ அவர்கள்மீது␢ என்றென்றும் அரசாள்வார்.⁾
9⁽அவரை நம்புவோர்␢ உண்மையை அறிந்துகொள்வர்;␢ அன்பில் நம்பிக்கை கொள்வோர்␢ அவரோடு நிலைத்திருப்பர்.*␢ அருளும் இரக்கமும் அவர்␢ தேர்ந்து கொண்டோர் மீது இருக்கும்.**⁾
10⁽ஆனால் இறைப்பற்றில்லாதவர்கள்␢ தங்கள் எண்ணங்களுக்கு ஏற்ப␢ தண்டிக்கப்படுவார்கள்;␢ ஏனெனில் அவர்கள்␢ நீதிமான்களைப் புறக்கணித்து,␢ ஆண்டவரை எதிர்த்தார்கள்.⁾
11⁽ஞானத்தையும் நற்பயிற்சியையும்␢ இகழ்பவர்கள்␢ இரங்கத்தக்கவர்கள்.␢ அவர்களது நம்பிக்கை வீணானது;␢ அவர்கள் உழைப்பு வெறுமையானது;␢ அவர்களின் செயல்கள் பயனற்றவை.⁾
12⁽அவர்களுடைய மனைவியர்␢ அறிவற்றவர்கள்;␢ அவர்களின் பிள்ளைகள் தீயவர்கள்;␢ அவர்களுடைய வழிமரபினர்␢ சபிக்கப்பட்டவர்கள்.⁾
13⁽தூய்மை இழக்காத,␢ தவறான உடலுறவு கொள்ளாத␢ மலடி பேறுபெற்றவர்;␢ மனிதரைக் கடவுள்␢ சந்திக்க வரும்போது␢ அப்பெண் கனி தருவார்.⁾
14⁽நெறிகெட்ட செயல்களைச் செய்யாத,␢ ஆண்டவருக்கு எதிராகத்␢ தீயவற்றைத் திட்டமிடாத␢ அண்ணகர்களும் பேறுபெற்றோர்.␢ அவர்களது பற்றுறுதிக்குச்␢ சிறப்புக் கைம்மாறு வழங்கப்படும்;␢ ஆண்டவரின் கோவிலில் அவர்களுக்கு␢ இனிமைமிக்க பங்கு அளிக்கப்படும்.⁾
15⁽நல்ல உழைப்பின் பயன்␢ புகழ்ச்சிக்குரியது.␢ அறிவுத்திறனின் ஆணிவேர்␢ அசைவுறாதது.⁾
16⁽விபசாரிகளின் மக்கள்␢ முதிர்ச்சி அடையமாட்டார்கள்;␢ தவறான உடலுறவால் பிறப்பவர்கள்␢ வேரோடு அழிவார்கள்.⁾
17⁽அவர்கள் நீண்ட நாள் வாழ்ந்தாலும்␢ அவர்களை யாரும்␢ பொருட்படுத்த மாட்டார்கள்;␢ முதுமையின் இறுதிக் கட்டத்திலும்␢ அவர்கள் மதிப்புப் பெறமாட்டார்கள்.⁾
18⁽அவர்கள் இளமையில் இறந்தால்␢ அவர்களுக்கு நம்பிக்கை இராது;␢ தீர்ப்புநாளில் ஆறுதல் கிடைக்காது.⁾
19⁽நேர்மையற்ற தலைமுறையின் முடிவு␢ மிகக் கொடியது.⁾