சாலமோனின் ஞானம் 6

முந்திய அடுத்த
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19
1⁽மன்னர்களே, நான் சொல்வதற்குச்␢ செவிசாய்த்துப் புரிந்துகொள்ளுங்கள்;␢ உலகின் கடையெல்லைவரை␢ நீதி வழங்குவோரே,␢ கற்றுக்கொள்ளுங்கள்.⁾ 2⁽திரளான மக்களை ஆள்வோரே,␢ பல மக்களினங்களைப் பற்றிப்␢ பெருமை பாராட்டுவோரே,␢ எனக்குச் செவிசாயுங்கள்.⁾ 3⁽ஆண்டவரிடமிருந்தே உங்களுக்கு␢ அதிகாரம் வழங்கப்பட்டது;␢ உன்னத இறைவனிடமிருந்தே␢ உங்களுக்கு ஆட்சியுரிமை கிடைத்தது.␢ அவரே உங்கள் செயல்களைச்␢ சோதித்தறிபவர்;␢ உங்கள் திட்டங்களை␢ ஆராய்பவரும் அவரே.⁾ 4⁽அவரது அரசின்␢ பணியாளர்களாய் இருந்தும்,␢ நீங்கள் நேர்மையுடன்␢ தீர்ப்பு வழங்கவில்லை;␢ திருச்சட்டத்தைக் கடைப்பிடிக்கவில்லை;␢ கடவுளின் திருவுளப்படி நடக்கவில்லை.⁾ 5⁽கொடுமையாகவும் விரைவாகவும்␢ அவர் உங்கள்மேல் வருவார்;␢ உயர் நிலையில் உள்ளவர்களுக்குக்␢ கடும் தீர்ப்பு வழங்குவார்.⁾ 6⁽எளியோர்க்கு இரக்கங்காட்டி␢ அவர்களைப் பொறுத்தருள்வார்;␢ வலியோரை வன்மையாகத் தண்டிப்பார்.*⁾ 7⁽அனைத்திற்கும் ஆண்டவர்␢ யாருக்கும் அஞ்சி நடுங்க மாட்டார்;␢ உயர்ந்தோர்க்கென்று␢ தனி மதிப்பு அளிக்கமாட்டார்.␢ ஏனெனில்,␢ பெரியோரையும் சிறியோரையும்␢ படைத்தவர் அவரே;␢ எல்லாரும் ஒன்றென எண்ணிக்␢ காப்பவரும் அவரே.⁾ 8⁽அவர் வலியோரிடம்␢ கண்டிப்பான கணக்குக் கேட்பார்.⁾ 9⁽எனவே, மன்னர்களே,␢ நீங்கள் ஞானத்தைக்␢ கற்றுக் கொள்ளவும்,␢ நெறிபிறழாது நடக்கவும்,␢ உங்களுக்கு நான் கூறுகிறேன்;⁾ 10⁽தூய்மையானவற்றைத்␢ தூய்மையாய்க் கடைப்பிடிப்போர்␢ தூயோர் ஆவர்;␢ தூய்மையானவற்றைக்␢ கற்றுக்கொண்டார்␢ தங்கள் செயல்களை முறைப்படுத்த␢ வழி காண்பர்.⁾ 11⁽எனவே, என் சொற்கள்மீது␢ நாட்டங் கொள்ளுங்கள்;␢ ஏக்கங் கொள்ளுங்கள்.␢ நீங்கள் அவற்றால்␢ நற்பயிற்சி பெறுவீர்கள்.⁾ 12⁽ஞானம் ஒளிமிக்கது; மங்காதது.␢ அதன்பால் அன்புகூர்வோர்␢ அதை எளிதில் கண்டுகொள்வர்;␢ அதைத் தேடுவோர் கண்டடைவர்.⁾ 13⁽தன்னை நாடுவோர்க்கு␢ அது தன்னையே␢ விரைந்து வெளிப்படுத்தும்.⁾ 14⁽வைகறையில் அதைத் தேடுவோர்␢ தளர்ச்சி அடையமாட்டார்கள்;␢ ஏனெனில், தம் கதவு அருகில்␢ அது அமர்ந்திருப்பதை␢ அவர்கள் காண்பார்கள்.⁾ 15⁽அதன்மீது மனத்தைச் செலுத்துவதே␢ ஞானத்தின் நிறைவு.␢ அதன்பொருட்டு விழிப்பாய் இருப்போர்,␢ கவலையிலிருந்து விரைவில் விடுபடுவர்.⁾ 16⁽தனக்குத் தகுதியுள்ளவர்களை␢ ஞானம் தேடிச் செல்கிறது;␢ அவர்களுடைய வழியில்␢ கனிவுடன் தன்னையே காட்டுகிறது;␢ அவர்களின் ஒவ்வொரு நினைவிலும்␢ அது அவர்களை எதிர்கொள்கிறது.⁾ 17⁽நற்பயிற்சி பெறுவதில் கொள்ளும்␢ உண்மையான நாட்டமே␢ ஞானத்தின் தொடக்கம்;␢ நற்பயிற்சி மீது செலுத்தும் கவலையே␢ ஞானத்தின் பால் கொள்ளும் அன்பு.⁾ 18⁽ஞானத்தின்மீது அன்பு␢ செலுத்துவது அதன் சட்டங்களைக்␢ கடைப்பிடிப்பதாகும்;␢ சட்டங்களைக் கடைப்பிடிப்பது␢ அழியாமைக்கு உறுதி தரும்.⁾ 19⁽அழியாமை ஒருவரைக்␢ கடவுளுக்கு அருகில்␢ அழைத்துச் செல்கிறது.⁾ 20⁽ஞானத்தின்மீதுள்ள ஆர்வம்␢ ஒருவரை அரசுரிமைக்கு␢ வழி நடத்துகிறது.⁾ 21⁽நாடுகளை ஆளும் மன்னர்களே,␢ உங்களுடைய␢ அரியணையிலும் செங்கோலிலும்␢ நீங்கள் மகிழ்ச்சி அடைய விரும்பினால்,␢ எப்பொழுதும் ஞானத்தை மதியுங்கள்;␢ அப்பொழுது என்றென்றும்␢ ஆட்சிபுரிவீர்கள்.⁾ 22⁽ஞானம் என்றால் என்ன,␢ அது எவ்வாறு உண்டானது என␢ உங்களுக்கு விரித்துரைப்பேன்;␢ மறைபொருள்களை உங்களிடமிருந்து␢ மறைக்க மாட்டேன்;␢ அதன் படைப்புக்காலம் தொட்டு␢ அதனை ஆராய்ந்து பார்ப்பேன்;␢ அதைப்பற்றிய அறிவை␢ வெளிப்படுத்துவேன்;␢ உண்மையை நழுவவிடமாட்டேன்.⁾ 23⁽நோயாம் பொறாமையோடு␢ தோழமை கொள்ளமாட்டேன்.␢ ஏனெனில் பொறாமை ஞானத்துடன்␢ உறவு கொள்வதில்லை.⁾ 24⁽ஞானிகளின்␢ எண்ணிக்கையைப் பொறுத்தே␢ உலகின் மீட்பு அமையும்.␢ அறிவுள்ள மன்னர் தம் குடிமக்களின்␢ நிலைக்களனாய் இருக்கின்றார்.⁾ 25⁽எனவே என் சொற்களால்␢ நற்பயிற்சி பெறுங்கள்.␢ அதனால் உங்களுக்கு␢ நற்பயன் விளையும்.⁾