1⁽நலிவுற்றோரின்␢ ஞானம் அவர்களைத்␢ தலைநிமிரச் செய்யும்;␢ பெரியார்கள் நடுவில்␢ அவர்களை அமரச் செய்யும்.⁾
2⁽உடல் அழகுக்காக ஒருவரைப்␢ புகழ வேண்டாம்;␢ தோற்றத்துக்காக␢ ஒருவரை இகழவும் வேண்டாம்;⁾
3⁽பறப்பனவற்றுள் சிறியது தேனீ;␢ எனினும், அது கொடுக்கும்␢ தேன் இனியவற்றுள் சிறந்தது.⁾
4⁽நீ அணிந்திருக்கும் ஆடைகுறித்துப்␢ பெருமை பாராட்டாதே;␢ நீ புகழ்பெறும் நாளில் உன்னையே␢ உயர்த்திக்கொள்ளாதே.␢ ஆண்டவரின் செயல்கள்␢ வியப்புக்குரியவை;␢ அவை மனிதரின் கண்ணுக்கு␢ மறைவாய் உள்ளன.⁾
5⁽மாமன்னர் பலர்␢ மண்ணைக் கவ்வினர்;␢ எதிர்பாராதோர்␢ பொன்முடி புனைந்தனர்.⁾
6⁽ஆட்சியாளர் பலர்␢ சிறுமையுற்றனர்;␢ மாட்சியுற்றோர் மற்றவரிடம்␢ ஒப்புவிக்கப் பெற்றனர்.⁾
7⁽தீர ஆராயாமல் குற்றம் சுமத்தாதே;␢ முதலில் சோதித்தறி;␢ பின்னர் இடித்துரை.⁾
8⁽மற்றவருக்குச் செவிசாய்க்குமுன்பே␢ மறுமொழி சொல்லாதே;␢ அடுத்தவர் பேசும்போது␢ குறுக்கே பேசாதே.⁾
9⁽உன்னைச் சாராதவை␢ பற்றி வாதிடாதே;␢ பாவிகள் தீர்ப்பு வழங்கும்போது␢ அவர்களோடு அமராதே.⁾
10⁽குழந்தாய், பல அலுவல்களில்␢ ஈடுபடாதே;␢ ஈடுபட்டால் குற்றப்பழி பெறாமல்␢ போகமாட்டாய்;␢ செய்யத் தொடங்கினாலும்␢ முடிக்கமாட்டாய்;␢ தப்ப முயன்றாலும் முடியாது.⁾
11⁽சிலர் மிகவும் கடுமையாய்␢ உழைக்கின்றனர்;␢ போராடுகின்றனர்; விரைந்து␢ செயல்புரிகின்றனர்;␢ எனினும் பின்தங்கியே இருக்கின்றனர்.⁾
12⁽வேறு சிலர் மந்தமானவர்கள்;␢ பிறர் உதவியால் வாழ்பவர்கள்;␢ உடல் வலிமை இல்லாதவர்கள்;␢ வறுமையில் உழல்பவர்கள்.␢ ஆண்டவர் அவர்களைக்␢ கடைக்கண் நோக்குகின்றார்;␢ தாழ்நிலையினின்று அவர்களை␢ உயர்த்தி விடுகிறார்;⁾
13⁽அவர்களைத்␢ தலைநிமிரச் செய்கிறார்;␢ அவர்களைக் காணும்␢ பலர் வியப்பில் ஆழ்கின்றனர்.⁾
14⁽நன்மை தீமை, வாழ்வு சாவு,␢ வறுமை வளமை ஆகிய␢ அனைத்தும் ஆண்டவரிடமிருந்தே␢ வருகின்றன.⁾
15⁽*[ஞானம், அறிவாற்றல்,␢ திருச்சட்டம் பற்றிய அறிவு␢ ஆகியவை ஆண்டவரிடமிருந்தே␢ வருகின்றன.␢ அன்பும் நற்செயல் செய்யும்␢ பண்பும் அவரிடமிருந்தே␢ உண்டாகின்றன.]⁾
16⁽*[தவறும் இருளும் பாவிகளுக்காகவே␢ உண்டாக்கப்பட்டன.␢ தீவினைகளில் செருக்குறுவோரிடம்␢ தீமை செழித்து வளரும்.]⁾
17⁽இறைப்பற்றுள்ளோரிடம்␢ ஆண்டவரின் கொடைகள்␢ நிலைத்து நிற்கும்;␢ அவரது பரிவு என்றும்␢ வெற்றியைக் கொணரும்.⁾
18⁽சிலர் தளரா ஊக்கத்தினாலும்␢ தன்னல மறுப்பினாலும்␢ செல்வர் ஆகின்றனர்.␢ அவர்களுக்கு உரிய பரிசு அதுவே.⁾
19⁽“நான் ஓய்வைக் கண்டடைந்தேன்;␢ நான் சேர்த்துவைத்த␢ பொருள்களை இப்போது உண்பேன்”␢ என அவர்கள் ஒவ்வொருவரும்␢ சொல்லிக் கொள்வர்.␢ இது எத்துணைக் காலத்துக்கு␢ நீடிக்கும் என்பதையும்␢ பிறரிடம் விட்டுவிட்டு இறக்க நேரிடும்␢ என்பதையும் அவர்கள் அறியார்கள்.⁾
20⁽நீ செய்த ஒப்பந்தத்துக்கு␢ கட்டுப்பட்டிரு;␢ அதில் ஈடுபாடு கொண்டிரு;␢ உன் உழைப்பிலே முதுமை அடை.⁾
21⁽பாவிகளின் செயல்களைக்␢ கண்டு வியப்பு அடையாதே;␢ ஆண்டவரிடம் நம்பிக்கை கொள்;␢ உன் உழைப்பில் நிலைத்திரு.␢ நொடிப்பொழுதில் ஏழையரைத்␢ திடீரென்று செல்வராய்␢ மாற்றுவது ஆண்டவரின்␢ பார்வையில் எளிதானது.⁾
22⁽ஆண்டவரின் ஆசியே␢ இறைப்பற்றுள்ளோருக்குக்␢ கிடைக்கும் பரிசு.␢ அவர் தம் ஆசியை␢ விரைந்து தழைக்கச் செய்வார்.⁾
23⁽‘எனக்குத் தேவையானது␢ என்ன இருக்கிறது?␢ இனிமேல் வேறு என்ன நன்மைகள்␢ எனக்குக் கிடைக்கும்?’␢ எனச் சொல்லாதே.⁾
24⁽‘எனக்குப் போதுமானது உள்ளது.␢ இனி எனக்கு என்ன␢ தீங்கு நேரக்கூடும்?’␢ எனவும் கூறாதே.⁾
25⁽வளமாக வாழும்போது,␢ பட்ட துன்பங்கள்␢ மறந்து போகின்றன;␢ துன்பத்தில் உழலும்போது,␢ ய்த்த நன்மைகள்␢ மறந்து போகின்றன.⁾
26⁽அவரவர் நடத்தைக்கு␢ ஏற்ப இறுதிநாளில்␢ மனிதருக்குப் பரிசு அளிப்பது␢ ஆண்டவர்க்கு எளிதானது.⁾
27⁽சிறிது நேரத் துன்பம்,␢ முன்னர் துய்த்த இன்பத்தை␢ மறக்கச் செய்கிறது.␢ வாழ்வின் முடிவில்␢ மனிதரின் செயல்கள்␢ வெளிப்படுத்தப்படும்.⁾
28⁽இறக்குமுன் யாரையும்␢ பேறுபெற்றவர் எனப் போற்றாதே;␢ பிள்ளைகள் வழியாகவே␢ ஒருவரது தகைமை வெளிப்படும்.⁾
29⁽எல்லா மனிதரையும் உன்␢ வீட்டுக்கு அழைத்து வராதே;␢ இரண்டகர் பல சூழ்ச்சிகள் செய்வர்.⁾
30⁽இறுமாப்புப் படைத்தோர்␢ பறவைகளைப் பொறிக்குள்␢ சிக்கவைக்கப் பயன்படும்␢ கௌதாரி போன்றோர்;␢ அவர்கள் உளவாளி போல்␢ உன் வீழ்ச்சியைக்␢ கவனித்துக் கொண்டிருப்பர்.⁾
31⁽நன்மைகளைத் தீமைகளாக␢ மாற்ற அவர்கள் பதுங்கிக்␢ காத்திருப்பார்கள்;␢ புகழத்தக்க செயல்களில்␢ குறை காண்பார்கள்.⁾
32⁽ஒரேயொரு தீப்பொறி␢ கரிமலையையே எரிக்கும்;␢ ஒரு பாவி பிறரைத் தாக்கப்␢ பதுங்கிக் காத்திருப்பான்.⁾
33⁽தீச்செயல் புரிவோர் குறித்து␢ விழிப்பாய் இரு;␢ அவர்கள் தீங்கு விளைவிக்கச்␢ சூழ்ச்சி செய்கிறார்கள்.␢ இதனால் உன் பெருமைக்கு␢ என்றும் இழுக்கு ஏற்படுத்தலாம்.⁾
34⁽அன்னியரை உன் வீட்டில்␢ வரவேற்றால், அவர்கள்␢ உனக்குத் தொல்லைகளைத்␢ தூண்டிவிடுவர்;␢ கடைசியில் உன் வீட்டாருக்கே␢ உன்னை அன்னியன் ஆக்கிவிடுவர்.⁾