சீராக் 37

முந்திய அடுத்த
1⁽எல்லாவற்றிற்கும் கடவுளாகிய␢ ஆண்டவரே,␢ எங்கள்மீது இரக்கமாயிரும்;␢ எங்களைக் கண்ணோக்கும்;␢ உம்மைப்பற்றிய அச்சம்␢ எல்லா நாடுகள் மீதும்␢ நிலவச் செய்யும்.⁾ 2⁽அயல் நாடுகளுக்கு எதிராக␢ உம் கையை உயர்த்தும்.␢ அவர்கள் உம் வலிமையைக்␢ காணட்டும்.⁾ 3⁽அவர்கள் முன்னிலையில்␢ எங்கள் வழியாக உமது␢ தூய்மையைக் காட்டியது போல்,␢ எங்கள் முன்னிலையில்␢ அவர்கள் வழியாக உமது␢ மாட்சியைக் காட்டும்.⁾ 4⁽ஆண்டவரே, உம்மைத் தவிர␢ வேறு கடவுள் இல்லை␢ என நாங்கள் அறிந்துள்ளதுபோல்␢ அவர்களும் உம்மை␢ அறிந்து கொள்ளட்டும்.⁾ 5⁽புதிய அடையாளங்களை வழங்கும்;␢ வியத்தகு செயல்களை நிகழ்த்தும்;␢ உம் கையினை, வலக்கையினை␢ மாட்சிமைப்படுத்தும்.⁾ 6⁽சினத்தைத் தூண்டிச்␢ சீற்றத்தைப் பொழியும்;␢ எதிரியை ஒழித்துப்␢ பகைவரைப் பாழாக்கும்.⁾ 7⁽காலத்தை விரைவுபடுத்தி␢ ஆணையை நினைவுக்கூரும்;␢ அவர்கள் உம் அரும் பெரும்␢ செயல்களை எடுத்துரைக்கட்டும்.⁾ 8⁽தப்பிப் பிழைத்தோரைச் சினம்␢ என்னும் நெருப்பு விழுங்கட்டும்;␢ உம் மக்களுக்குத் தீங்கிழைப்போர்␢ அழிவைக் காணட்டும்.⁾ 9⁽‘எங்களைத்தவிர␢ வேறு யாரும் இல்லை’␢ எனக் கூறும் பகை வேந்தர்களின்␢ தலைகளை நசுக்கும்.⁾ 10⁽யாக்கோபின் குலங்களை␢ ஒன்று கூட்டும்; தொடக்கத்தில்␢ போன்று அவர்களை␢ உமது உரிமைச்சொத்தாக்கும்.⁾ 11⁽ஆண்டவரே, உம் பெயரால்␢ அழைக்கப்பெற்ற மக்களுக்கு␢ இரக்கங் காட்டும்;␢ உம் தலைப்பேறாகப்␢ பெயரிட்டழைத்த இஸ்ரயேலுக்குப்␢ பரிவுகாட்டும்.⁾ 12⁽உமது திருவிடம் இருக்கும்␢ நகரின்மீது, நீர் ஓய்வு␢ கொள்ளும் இடமாகிய␢ எருசலேம்மீது கனிவு காட்டும்.⁾ 13⁽உமது புகிழ்ச்சியால்␢ சீயோனை நிரப்பும்;␢ உமது மாட்சியால் உம்␢ மக்களை நிரப்பும்.⁾ 14⁽தொடக்கத்தில் நீர்␢ படைத்தவற்றுக்குச்␢ சான்று பகரும்; உம் பெயரால்␢ உரைக்கப்பட்ட இறைவாக்குகளை␢ நிறைவேற்றும்.⁾ 15⁽உமக்காகப் பொறுமையுடன்␢ காத்திருப்போருக்குப் பரிசு அளியும்;␢ உம் இறைவாக்கினர்கள்␢ நம்பத்தகுந்தவர்கள் என␢ மெய்ப்பித்துக் காட்டும்.⁾ 16⁽ஆண்டவரே, உம் மக்களுக்கு␢ ஆரோன் வழங்கிய␢ ஆசிக்கு ஏற்ப உம்மிடம்␢ மன்றாடுவோரின் வேண்டுதலுக்குச்␢ செவிசாயும்.⁾ 17⁽அப்போது, நீரே ஆண்டவர்,␢ என்றுமுள கடவுள்␢ என்பதை மண்ணுலகில் உள்ள␢ எல்லோரும் அறிந்துகொள்வர்.⁾ 18⁽வயிறு எல்லா வகை␢ உணவுகளையும் உட்கொள்கிறது;␢ எனினும் ஒரு வகை உணவு␢ மற்றொன்றைவிட மேலானது.⁾ 19⁽வேட்டையாடிய உணவினை␢ நாக்கு சுவைத்து அறிகிறது;␢ அறிவுக்கூர்மை கொண்ட␢ உள்ளம் பொய்யைப் பிரித்தறிகிறது.⁾ 20⁽மனக்கோட்டம் கொண்டோர்␢ வருத்தத்தைக் கொடுப்பர்;␢ பட்டறிவு கொண்டோர்␢ அவர்களுக்கு எதிரடி கொடுப்பர்.⁾ 21⁽ஒரு பெண் எந்த ஆணையும்␢ கணவனாக ஏற்றுக்கொள்வாள்;␢ ஆனால், ஆணுக்கு␢ ஒரு பெண்ணைவிட␢ மற்றொருத்தி மேம்பட்டவளாகத்␢ தோன்றுவாள்.⁾ 22⁽பெண்ணின் அழகு அவளுடைய␢ கணவனை மகிழ்விக்கும்;␢ அவன் வேறு எதையும்␢ அவ்வளவு விரும்புவதில்லை.⁾ 23⁽அவளது பேச்சில் இரக்கமும்␢ கனிவும் இருக்குமானால்␢ அவளுடைய கணவன்␢ மற்ற மனிதர்களைவிட␢ நற்பேறு உடையவன்.⁾ 24⁽மனைவியை அடைகிறவன்␢ உடைமையைப்␢ பெறுகிறான்; தனக்கு ஏற்ற␢ துணையையும் ஆதரவு தரும்␢ தூணையும் அடைகிறான்.⁾ 25⁽வேலி இல்லையேல் உடைமை␢ கொள்ளையடிக்கப்படும்;␢ மனைவி இல்லையேல் மனிதன்␢ பெருமூச்சு விட்டு அலைவான்.⁾ 26⁽நகர்விட்டு நகருக்குத்␢ தப்பியோடும் திறமையான␢ திருடனை யாரே நம்புவர்?⁾ 27⁽அவ்வாறே, தங்குவதற்கு␢ இடம் இல்லாமல், இரவு வந்ததும்␢ கண்ட இடத்திலும் தங்கும்␢ மனிதனை எவர் நம்புவர்?⁾