சீராக் 2

முந்திய அடுத்த
1⁽ஞானமெல்லாம்␢ ஆண்டவரிடமிருந்து வருகின்றது;␢ அது என்றும் அவரோடு␢ இருக்கின்றது.⁾ 2⁽கடல் மணலையோ␢ மழைத் துளியையோ␢ முடிவில்லாக் காலத்தையோ␢ யாரே கணக்கிடுவர்?⁾ 3⁽வான்வெளியின் உயரத்தையோ␢ நிலவுலகின் அகலத்தையோ␢ ஆழ்கடலையோ ஞானத்தையோ␢ யாரே தேடிக் காண்பர்?⁾ 4⁽எல்லாவற்றுக்கும் முன்னர்␢ ஞானமே உண்டாக்கப்பட்டது;␢ கூர்மதி கொண்ட அறிவுத்திறன்␢ என்றென்றும் உள்ளது.⁾ 5⁽*[உயர்வானில் உள்ள கடவுளின்␢ வாக்கே ஞானத்தின் ஊற்று;␢ என்றுமுள கட்டளைகளே␢ அதை அடையும் வழிகள்.]⁾ 6⁽ஞானத்தின் ஆணிவேர்␢ யாருக்கு வெளியிடப்பட்டது? அதன்␢ நுணுக்கங்களை அறிந்தவர் எவர்?⁾ 7⁽[ஞானத்தின் அறிவாற்றல் யாருக்குத்␢ தெளிவாக்கப்பட்டது? அதன்␢ பரந்த பட்டறிவைப் புரிந்து␢ கொண்டவர் யார்?]⁾ 8⁽ஆண்டவர் ஒருவரே ஞானியாவார்;␢ தம் அரியணையில் வீற்றிருக்கும்␢ அவர் பெரிதும் அச்சத்திற்குரியவர்.⁾ 9⁽அவரே ஞானத்தைப் படைத்தவர்;␢ அதனைக் கண்டு கணக்கிட்டவர்;␢ தம் வேலைப்பாடுகளையெல்லாம்␢ அதனால் நிரப்பியவர்.⁾ 10⁽தம் ஈகைக்கு ஏற்ப எல்லா␢ உயிர்களுக்கும்␢ அவரே அதைக் கொடுத்துள்ளார்;␢ தம்மீது அன்புகூர்வோருக்கு␢ அதை வாரி வழங்கியுள்ளார்.⁾ 11⁽ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே␢ மாட்சியும் பெருமையுமாகும்;␢ அதுவே மகிழ்ச்சியும்␢ அக்களிப்பின் மணிமுடியுமாகும்.⁾ 12⁽ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே␢ உள்ளத்தை இன்புறுத்துகிறது;␢ மகிழ்வையும் அக்களிப்பையும்␢ நீடிய ஆயுளையும் வழங்குகிறது.⁾ 13⁽ஆண்டவரிடம் அச்சம் கொள்வோரது␢ முடிவு மகிழ்ச்சிக்கு உரியதாய் அமையும்;␢ அவர்கள் இறக்கும் நாளில்␢ ஆசி பெறுவார்கள்.⁾ 14⁽ஆண்டவரிடம் அச்சம் கொள்ளுதலே␢ ஞானத்தின் தொடக்கம்;␢ அது இறைப்பற்றுள்ளோருக்கு␢ தாய் வயிற்றிலிருக்கும்பொழுதே␢ வழங்கப்பெறுகிறது.⁾ 15⁽ஞானம் மனிதர் நடுவில்␢ முடிவில்லாத அடித்தளத்தை␢ அமைத்துள்ளது; அவர்களுடைய␢ வழிமரபினரிடையே நீங்காது␢ நிலைத்திருக்கும்.⁾ 16⁽ஆண்டவரிடம்␢ அச்சம் கொள்ளுதலே␢ ஞானத்தின் நிறைவு;␢ அது தன் கனிகளால்␢ மனிதருக்கும் களிப்பூட்டுகிறது.⁾ 17⁽அது அவர்களின் இல்லம்␢ முழுவதையும் விரும்பத்தக்க␢ நலன்களால் நிரப்பிவிடும்;␢ தன் விளைச்சலால்␢ அவர்களின் களஞ்சியங்களை␢ நிறைத்திடும்.⁾ 18⁽ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே␢ ஞானத்தின் மணிமுடி;␢ அது அமைதியைப் பொழிந்து,␢ உடல்நலனைக் கொழிக்கச்␢ செய்கிறது.⁾ 19⁽ஆண்டவரே அதனைக் கண்டு␢ கணக்கிட்டார்;␢ அறிவாற்றலையும் நுண்ணறிவையும்␢ மனிதருக்கு மழையெனப்␢ பொழிந்திட்டார்;␢ அதை உறுதியாய்ப்␢ பற்றிக்கொண்டோரை␢ மாட்சியால் உயர்த்திட்டார்.⁾ 20⁽ஆண்டவரிடம்␢ அச்சம் கொள்ளுதலே␢ ஞானத்தின் ஆணிவேர்; அதன்␢ கிளைகள் நீடிய வாழ்நாள்கள்.⁾ 21⁽*[ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம்␢ பாவங்களை விரட்டிவிடுகிறது.␢ அது இருக்கும்போது சினத்தை␢ யெல்லாம் அகற்றிவிடுகிறது.]⁾ 22⁽நேர்மையற்ற சினத்தை␢ நியாயப்படுத்த முடியாது;␢ சினத்தால் நிலை தடுமாறுவோர்␢ வீழ்ச்சி அடைவர்.⁾ 23⁽பொறுமையுள்ளோர்␢ தக்க காலம்வரை␢ அமைதி காப்பர்;␢ பின்னர், மகிழ்ச்சி␢ அவர்களுள் ஊற்றெடுத்துப் பாயும்.⁾ 24⁽அவர்கள் தக்க நேரம்வரை␢ நா காப்பார்கள்.␢ பலருடைய வாய் அவர்களது␢ அறிவுக்கூர்மையை எடுத்துரைக்கும்.⁾ 25⁽ஞானத்தின் கருவூலங்களில்␢ அறிவார்ந்த பொன்மொழிகள் உண்டு;␢ பாவிகளுக்கு இறைப்பற்று␢ அருவருப்பைத் தரும்.⁾ 26⁽ஞானத்தை நீ அடைய விரும்பினால்␢ கட்டளைகளைக் கடைப்பிடி;␢ அப்போது ஆண்டவரே உனக்கு␢ ஞானத்தை வாரி வழங்குவார்.⁾ 27⁽ஆண்டவரிடம் கொள்ளும்␢ அச்சமே ஞானமும்␢ நற்பயிற்சியுமாகும்.␢ பற்றுறுதியும் பணிவும்␢ அவருக்கு மகிழ்ச்சி தரும்.⁾ 28⁽ஆண்டவரிடம் கொள்ளும்␢ அச்சத்தைப் புறக்கணியாதே;␢ பிளவுபட்ட உள்ளத்தோடு␢ அவரிடம் செல்லாதே.⁾ 29⁽மனிதர்முன்* வெளிவேடம்␢ போட வேண்டாம்.␢ நாவடக்கம் கொள்.⁾ 30⁽நீ வீழ்ச்சியுறாதவாறு␢ செருக்குக் கொள்ளாதே.␢ உன்மீதே மானக்கேட்டை␢ வருவித்துக்கொள்ளாதே.␢ ஆண்டவருக்கு நீ ஆஞ்சி␢ நடவாததாலும் உன் உள்ளத்தில்␢ கள்ளம் நிறைந்திருந்ததாலும்␢ ஆண்டவர் உன் மறைவான␢ எண்ணங்களை வெளிப்படுத்துவார்;␢ சபையார் எல்லார் முன்னிலையில்␢ உன்னைத் தாழ்த்துவார்.⁾