சீராக் 43

முந்திய அடுத்த
1⁽பின்வருபவைபற்றி␢ நாணம் கொள்ளாதே;␢ மனிதருக்கு மட்டுமீறிய␢ மதிப்பு அளிப்பதால்␢ பாவம் செய்யாதே.⁾ 2⁽உன்னத இறைவனின்␢ திருச்சட்டம் பற்றியும்,␢ உடன்படிக்கை பற்றியும்,␢ இறைப்பற்றில்லாதோரை␢ விடுவிக்கும் தீர்ப்புப் பற்றியும்,⁾ 3⁽நண்பர்களோடும்␢ வழிப்போக்கரோடும்␢ உரையாடுவது பற்றியும்,␢ தோழர்களின் உரிமைச்␢ சொத்திலிருந்து கொடுப்பது␢ பற்றியும்,⁾ 4⁽சரியான துலாக்கோலையும்␢ எடைகளையும்␢ பயன்படுத்துவது பற்றியும்,␢ மிகுதியாகவோ குறைவாகவோ␢ பொருள் ஈட்டுவது பற்றியும்,⁾ 5⁽வாணிபத்தில் வரும்␢ ஆதாயம் பற்றியும்,␢ பிள்ளைகளை நன்கு␢ பயிற்றுவது பற்றியும்,␢ கெட்ட அடிமையைக்␢ குருதி சிந்த அடிப்பது பற்றியும் நாணம் கொள்ளாதே.⁾ 6⁽கெட்ட மனைவியைக்␢ காவலில் வைத்திருப்பது நல்லது;␢ பலர் இருக்கும் இடத்தில்␢ பொருள்களைப் பூட்டிவை.⁾ 7⁽எதைக் கொடுத்தாலும்␢ கணக்கிட்டு நிறுத்துக்கொடு;␢ கொடுக்கல் வாங்கல்␢ எல்லாவற்றையும் குறித்துவை.⁾ 8⁽அறிவிலிகளையும் மூடர்களையும்␢ கூடா ஒழுக்கத்தில் ஈடுபட்டு␢ குற்றம் புரியும் முதியோரையும்␢ கண்டித்துத் திருத்துவதுபற்றி␢ நாணம்கொள்ளாதே;␢ அப்போது நீ உண்மையிலேயே␢ நற்பயிற்சி பெற்றவனாய் இருப்பாய்;␢ வாழ்வோர் அனைவருக்கும்␢ ஏற்புடையவன் ஆவாய்.⁾ 9⁽தந்தை தம் மகளுக்கும்␢ தெரியாமல் அவளைப்பற்றி␢ விழிப்பாய் இருக்கிறார்;␢ அவளைப்பற்றிய கவலை␢ அவரது உறக்கத்தை␢ விரட்டியடிக்கிறது.␢ இளமையிலே அவளுக்குத்␢ திருமணம் ஆகாமல்␢ போய்விடுமோ எனவும்␢ திருமணமானபின் அவள்␢ வெறுக்கப்படுவாளோ எனவும்␢ அவர் கவலைப்படுகிறார்.⁾ 10⁽கன்னிப்பருவத்திலேயே அவள்␢ கெட்டுப்போகாதபடியும்␢ தம் வீட்டிலேயே கருவுற்றவள்␢ ஆகாதபடியும் கணவருடன்␢ இருக்கும்போது நெறி தவறாதபடியும்␢ திருமணமானபின் மலடி␢ ஆகாதபடியும் அவர்␢ கவலையாய் இருக்கிறார்.⁾ 11⁽அடக்கமற்ற மகள்மேல்␢ கண்ணும் கருத்துமாய் இரு;␢ இல்லையேல், பகைவரின்␢ நகைப்புக்கும் நகரின் ஏச்சுக்கும்␢ மக்களின் பேச்சுக்கும் அவள்␢ உன்னை ஆளாக்குவாள்;␢ நகர் மன்றத்தில் உன்னை␢ வெட்கத்திற்கு உட்படுத்துவாள்.⁾ 12⁽அழகுக்காக␢ எந்த மனிதரையும் நோக்காதே;␢ பெண்களின் நடுவில் அமராதே.⁾ 13⁽ஆடையிலிருந்து␢ அந்துப்பூச்சி தோன்றுகிறது;␢ பெண்ணிடமிருந்தே␢ பெண்ணின் ஒழுக்கக்கேடு␢ வருகிறது.⁾ 14⁽பெண்ணே வெட்கத்தையும்␢ இழிவையும் கொணர்கிறாள்.␢ இத்தகைய பெண் செய்யும்␢ நன்மையை விட ஆண் செய்யும்␢ தீமை பரவாயில்லை.⁾ 15⁽இப்போது ஆண்டவருடைய␢ செயல்களை நினைவுபடுத்துவேன்;␢ நான் கண்டவற்றை␢ எடுத்துரைப்பேன்.␢ ஆண்டவருடைய சொல்லால்␢ அவருடைய செயல்கள்␢ உண்டாகின்றன.⁾ 16⁽ஒளிரும் கதிரவன் அனைத்தையும்␢ காண்கின்றான்.␢ ஆண்டவருடைய செயல் அவருடைய␢ மாட்சியால் நிறைந்துள்ளது.⁾ 17⁽அனைத்தையும் தமது மாட்சியில்␢ நிலைநிறுத்திய␢ எல்லாம் வல்ல ஆண்டவர்,␢ தம் வியத்தகு செயல்கள்␢ எல்லாவற்றையும் எடுத்துரைக்கும்படி␢ தம் தூயவர்களுக்கும்␢ அதிகாரம் கொடுக்கவில்லை.⁾ 18⁽படுகுழியையும் மனித உள்ளத்தையும்␢ அவர் ஊடுருவி நோக்குகிறார்;␢ மனிதர்களுடைய சூழ்ச்சி நிறை␢ எண்ணங்களை ஆராய்கிறார்.␢ அறியக்கூடியவற்றையெல்லாம்␢ உன்னத இறைவன் அறிவார்;␢ காலத்தின் குறிகளை␢ உற்றுநோக்குகிறார்.⁾ 19⁽நிகழ்ந்தவற்றையும் இனி␢ நிகழவிருப்பவற்றையும்␢ அவர் தெரியப்படுத்துகிறார்;␢ மறைந்திருப்பவற்றின் தடயத்தை␢ வெளிப்படுத்துகிறார்.⁾ 20⁽எவ்வகை எண்ணமும்␢ அவருக்குத் தெரியாமல்␢ இருப்பதில்லை;␢ ஒரு சொல்கூட அவருக்கு␢ மறைந்திருப்பதில்லை.⁾ 21⁽அவர் தமது ஞானத்தின்␢ அரும்பெரும் செயல்களை␢ ஒழுங்குபடுத்தியுள்ளார்;␢ அவரே என்றென்றும்␢ இருக்கின்றவர். யாதொன்றும்␢ கூட்டப்படுவதில்லை, குறைக்கப்␢ படுவதுமில்லை; எவருடைய␢ அறிவுரையும் அவருக்குத்␢ தேவையில்லை.⁾ 22⁽அவருடைய செயல்கள்␢ அனைத்தும் எத்துணை␢ விரும்பத்தக்கவை! பார்ப்பதற்கு␢ எத்துணைப் பளபளப்பானவை!⁾ 23⁽இவையெல்லாம் உயிரோடு␢ இருக்கின்றன; எல்லாத்␢ தேவைகளுக்காகவும் என்றும்␢ நிலைத்திருக்கின்றன;␢ எல்லாம் அடிபணிகின்றன.⁾ 24⁽எல்லாம் இரட்டையாய் உள்ளன;␢ ஒன்று மற்றொன்றுக்கு␢ எதிராய் இருக்கிறது.␢ யாதொன்றையும் அவர்␢ குறைபடச் செய்யவில்லை.⁾ 25⁽ஒன்று மற்றொன்றின் நன்மையை␢ நிறைவுசெய்கிறது.␢ அவருடைய மாட்சியை␢ நிறைவாகக் காண்பவர் எவர்?⁾